மே 13, 2014 , ம 18, சிங்கள இராணுவம் தமிழ்மக்களை ஆண், பெண், குழந்தைகள் எனப் பாராது குண்டுகள் போட்டுக் கொன்றொழித்த நாள். இந்த ஆண்டு 5 ஆவது நினைவேந்தல் ஆண்டாகும். சிங்கள இராணுவம், பாதுகாப்பு இடத்தில் ஓடிப் பதிங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அந்த இடத்தைக் குறிவைத்து வானில் இருந்து குண்டுகளும் தரையில் இருந்து செல்தாக்குதல்களையும் மழை போல் பொழிந்து தமிழ்மக்களைச் சங்காரம் செய்த நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளைக் கூட கொடிய சிங்களப் படைகள் விட்டுவைக்கவில்லை. மருத்துவமனைகள் இராணுவ தாக்குதலுக்குரிய இலக்குத்தான் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராஜபக்சே கொக்கரித்தான். மக்களைக் காப்பாற்ற வேண்டிய அய்நா அதிகாரிகள் வன்னிக் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களும் தப்பினோம் பிழைத்தோம் என கொழும்புக்கு ஓடித் தப்பினார்கள். உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டன. காதுகளைப் பொத்திக் கொண்டன. தமிழ்மக்களின் அழுகுரலைப் பார்க்கவும் கேட்கவும் இந்த நாடுகள் மறுத்தன.
IntroductionThis paper is mainly concerned about developing electronic dictionary for Antonyms and Synonyms in Tamil. This e-dictionary makes learning simple…
எழுத்தாளரும் சமூகப்பணியாளரும் விலங்கு மருத்துவருமான நடேசனின் புதிய நாவல் அசோகனின் வைத்திய சாலை – வண்ணாத்திக்குளம் நாவலின் சிங்கள மொழிபெயர்ப்பு சமணல வெவ மற்றும் உனையே மயல் கொண்டு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு Lost In You ஆகிய மூன்று நூல்களினதும் விமர்சன அரங்கு அண்மையில் (04-05-2014) மெல்பனில் இலங்கை சமூகங்களின் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் திரு. பந்து திஸாநாயக்கா அவர்களின் தலைமையில் நடந்தது. தமிழ் சிங்கள முஸ்லிம் மற்றும் அவுஸ்திரேலியா வெள்ளை இனத்தவர்களும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் விக்ரோரியா மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூட் பெரேரா – லிஸ்பீட்டி – மூத்த பத்திரிகையாளர் மகிந்தபாலா – சிங்கள எழுத்தாளர் குருப்பு ஆங்கில பத்தி எழுத்தாளர் மொல்ரிஜ் – எழுத்தாளர் முருகபூபதி ஆகியோர் உரையாற்றினர். நடேசன் ஏற்புரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் கலந்துரையாடலும் தேநீர் விருந்தும் இடம்பெற்றது.
06-09-2014 சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையில் (Noble Park Community Centre – Memorial Drive, Noble Park, Vic – 3174, Australia )
இலங்கையில் முன்னர் நீடித்த உள்நாட்டுப்போரினால் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியா உட்பட பல வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அன்பர்களின் ஆதரவுடன் நிதியுதவி வழங்கி குறிப்பிட்ட மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய சேவையாற்றிய இலங்கை மாணவர் கல்வி நிதியம் இந்த ஆண்டில் (2014) தனது 25 வருடங்களைப்பூர்த்திசெய்துகொண்டு வெள்ளிவிழாவை நடத்தவுள்ளது.