இலங்கு நூல் செயல் வலர்-க.பஞ்சாங்கம்-5: எடுத்துரைப்பியல் -1

– இக்கட்டுரைகள்  பேராசிரியர் க.பஞ்சாங்கத்தினுடைய நவீன இலக்கிய கோட்பாடுகள் நூல் குறித்த சிறு அறிமுகமே அன்றி முழுமையாகாது. ஆசிரியர் நூலைப் படிப்பதொன்றே அவரது கட்டுரைகளின் முழுப்பயன்பாட்டினைப் பெறுவதற்கான வழி –

k_panjangakm.jpg - 6.46 Kbநாகரத்தினம் கிருஷ்ணாஇது எடுத்துரைப்பு உலகம், எடுத்துரைப்பின் காலம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அதுகுறித்த அறிவியல் பிரக்ஞையோ, பயிற்சியோ இன்றி  எடுத்துரைப்பில் தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் ‘எடுத்துரைப்பு’ என்ற சொல்லாடல் வேண்டுமானால் நமக்குப் புதிதாக இருக்கலாம். மாறாக அதனுடைய செயற்கூறுகள்  இலைமறைகாயாக மனிதர்கள் என்றைக்கு மொழியூடாக உரையூடாக ஆரம்பித்தார்களோ அன்றே தொடங்கிவிட்டன. குழைந்தைப் பருவத்தில் தாலாட்டிலும்; மொழி புரிய ஆரம்பித்ததும் பாட்டியின் கதையிலும் எடுத்துரைப்பு நம்மை மடியில் போட்டுக்கொண்டது. கதைகளின்றி நாமில்லை என்றாகிவிட்டோம் அதற்கான தேவைகள், கையாளும் மனிதர்கள் ஆகியவற்றைப் பொருத்து அவற்றின் கவர்ச்சிகள் தீர்மானிக்கப்படுகின்றன.  உண்மைகளைக் காட்டிலும் அவ்வுண்மைகளைச்சுற்றிக் கட்டப்படும் கதைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.  உண்மைகளைச்சொல்ல கதைகள் உதவியதுபோக தற்போது கதைகளைச்சொல்ல உண்மைகள் உதவிக்கொண்டிருக்கின்றன. எடுத்துரைப்பை நம்பியே கலைகளும், இலக்கியங்களும், திரைப்படங்களும் பிறவும் உள்ளன. ஓர் படைப்பிலக்கியவாதியை அவன் எடுத்துரைப்பை வைத்தே மதிப்பிடுகிறார்கள். இலக்கியத்தில் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் அது வியாபித்தித்திருக்கிறது. விளம்பரங்கள், அரசியல், இதழியல், பொருளியல், மருத்துவம்.. எடுத்துரைப்பின் நிழல்படியா துறைகள் இன்றில்லை.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கிய விமர்சனங்களை எழுதினாலும் – தன்மீதான விமர்சனங்களை மௌனமாகவே எதிர்கொண்ட பேராசிரியர் கைலாசபதி

கலாநிதி க.கைலாசபதிமுருகபூபதிநம்மிடத்தில் – நம்மவர்களைப் பற்றிய     எதிர்பார்ப்பு   ஒன்று    உண்டு.அவருக்கு    கடிதம்    எழுதினேன் –  பதிலே இல்லை.கடிதமா ? ஐயோ – எழுத  நேரம்  எங்கே  கிடைக்கிறது.  அமர்ந்து  கடிதம் எழுதுவதற்கு    நேரம்    தேடி    போராடுகின்றோம்.கோபிக்க வேண்டாம்.    உங்கள்     கடிதம்     கிடைத்தது.    பதில்   எழுத முடியாமல்      போய்விட்டது.     அவ்வளவு     பிஸி.இவ்வாறு     உரையாடுபவர்களை      நாம்    பார்த்திருக்கின்றோம்.எப்பொழுது?மி.மு.   காலத்தில்.     அதென்ன   மி.மு?    மின்னஞ்சலுக்கு     முன்னர்   நாம் வாழ்ந்த     காலத்தில்.     தற்பொழுது    மி.பி.  காலத்தில்    வாழ்கின்றோம்.  அதாவது    மின்னஞ்சலுக்கு   பிற்பட்ட    காலத்தில்.      மின்னஞ்சல்  தந்த  கொடைகள்    முகநூல்  –   டுவிட்டர்  –  ஸ்கைப்.   இனிவரும்    காலத்தில்   மேலும்    புதிய    சாதனங்கள்  வரலாம்.ஆனால்  –   இந்த மென்பொருள்    சாதனங்கள்    எல்லாம்    வருவதற்கு   முன்பே   இந்தப்பத்தியின்   தொடக்கத்தில்  குறிப்பிட்ட   சமாதானங்களைக்  கூறி  தப்பிப் பிழைக்காமல் –  தனக்கு   வரும்   கடிதங்களுக்கெல்லாம்   தளராமல்   பதில் கடிதம்   எழுதிய   ஒருவர்   நம்   மத்தியில்   வாழ்ந்து   மறைந்தார்   என்பதை எத்தனை பேர்   அறிந்திருப்பார்கள்?.அவர்தான்    பேராசிரியர்   கைலாசபதி.   கடிதம்     எழுதுவதும்   ஒரு   கலைதான்   என   உணர்த்திய   இலக்கிய வாதியாக   அவரை   நான்   இனம்   காண்கின்றேன்.தனக்கிருந்த   பல  முக்கிய  பணிகளில்  ஒன்றாக  கடிதங்கள் எழுதுவதையும்  அவர்  கருதியிருக்க வேண்டும்.  பல  வருடங்களுக்கு முன்னர்  கைலாசபதி  எழுதிய  கடிதங்கள்  பலவற்றை  மிகவும்   பத்திரமாக பாதுகாத்து  ஒரு   கோவையில்   பிணைத்து   வைத்திருந்த    கவிஞர்    முருகையனிடம்தான்    கைலாசபதியைப் பற்றிய   இந்த   உண்மையை   அறிந்து கொண்டேன்.இதுவரையில்  –   கைலாசபதி    தமது    நண்பர்களுக்கு    இலக்கிய   நயத்துடன் எழுதிய  கடிதங்கள்   நூலாக   வெளிவரவில்லை.   கைலாஸின்   நண்பர்கள் இணைந்தால்    இப்படியொரு   முயற்சியிலும்   இறங்கிப் பார்க்கலாம். எழுத்தாளர்களுக்கு   ஆலோசனை   கூறும் – அபிப்பிராயம்  தெரிவிக்கும் கருத்துக் கருவூலங்களான   அவை   எதிர்காலத்தில்   தொகுக்கப்படலாம்  என்ற   எதிர்பார்ப்பும்   எனக்குண்டு.இன்றைய  மின்னஞ்சல்   யுகத்தில்   மறைந்துவரும்  கடிதக்கலை   என்று சில    மாதங்களுக்கு   முன்னர்   ஒரு   கட்டுரை   எழுதியிருந்தேன்.  அதனை பல   ஊடகங்கள்   மறுபிரசுரம்   செய்திருந்தன.   அக்கட்டுரையிலும் கைலாசபதியின்   கடிதக்கலையைத்தான்   விதந்து   பதிவுசெய்திருக்கின்றேன்.

Continue Reading →