மெல்பனில் ஐந்து அரங்குகளில் கலை – இலக்கியம் 2014 விழா: தனிநாயகம் அடிகள் நினைவரங்கு – இலக்கிய கருத்தரங்கு – நூல் விமர்சன அரங்கு – இசையரங்கு – நடன அரங்கு

மெல்பனில்     ஐந்து    அரங்குகளில்  கலை - இலக்கியம்  2014  விழா: தனிநாயகம்  அடிகள்  நினைவரங்கு -  இலக்கிய  கருத்தரங்கு  - நூல் விமர்சன அரங்கு -  இசையரங்கு -   நடன அரங்கு [ இந்த நிகழ்வு பற்றிய அறிவித்தலைத் தவற விட்டுவிட்டோம். அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றோம். ஒரு பதிவுக்காக இதனை இங்கு பதிவு செய்கின்றோம். – பதிவுகள் -]

அவுஸ்திரேலியாவில்   கடந்த  பல   வருடங்களாக  தமிழ்   எழுத்தாளர்    விழாவையும்   கலை  –  இலக்கிய   சந்திப்புகள்   மற்றும் அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சிகளையும்   நடத்திவரும்     அவுஸ்திரேலியா   தமிழ்   இலக்கிய   கலைச்சங்கம்   விக்ரோரியா    மாநிலத்தில்   பதிவுசெய்யப்பட்ட   அமைப்பாக    இயங்கிவருகிறது. இச்சங்கத்தின்   வெளியீடுகளாக   சில  நூல்களும் வெளியாகியுள்ளன.  அறிந்ததை  பகிர்தல்  அறியாததை    அறிந்துகொள்ள   முயலுதல்  என்ற   அடிப்படைச்சிந்தனையுடன்  வருடாந்த    விழாக்களில்   நூல் வெளியீட்டு  விமர்சன   அரங்குகளையும்   இச்சங்கம்   நடத்திவருகிறது.  எதிர்வரும்   26  ஆம்  திகதி   (26-07-2014)   சனிக்கிழமை  பிற்பகல்   2   மணி  முதல்    இரவு  10    மணிவரையில்     மெல்பனில்      சங்கத்தின்    நடப்பாண்டு   தலைவர்   டொக்டர்   நடேசனின்   தலைமையில்    கலை – இலக்கியம்  2014  விழா    St.Bernadettes  Community  Centre    மண்டபத்தில் (1264, Mountain Highway,   The Basin – Vic- 3154)      நடைபெறும்

Continue Reading →

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

கதை பிறந்த கதை: ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.

எழுத்தாளர் ஒருவரின் படைப்பு உருவாகுவதற்குப் பல அடிப்படைக்காரணங்களுள்ளன. அப்படைப்பானது அதனைப் படைத்தவரின் கற்பனையாகவிருக்கலாம். அல்லது நடைபெற்ற சம்பவங்கள் ஏதாவது ஏற்படுத்திய பாதிப்புகளின் விளைவாக இருக்கலாம். அல்லது பத்திரிகை , சஞ்சிகைகளில் வெளிவந்த செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவாகவிருக்கலாம். இவ்விதம் பல்வேறு காரணங்களிருக்கலாம். புகழ்பெற்ற எழுத்தாளர் ஏர்னஸ்ட் ஹெமிங்வேயின் மிகவும் புகழ்பெற்ற படைப்பான ‘கிழவனும், கடலும்’ நாவல் தோன்றியது ஒரு பத்திரிகைச்செய்தியின் விளைவாகவென்று ஹெமிங்வேயே ஒருமுறை கூறியிருக்கின்றார். பத்திரிகையொன்றில் வெளியான ‘புளூ மார்லின்’ மீனொன்றால் கடலில் பல நூறு மைல்கள் இழுத்துச் செல்லப்பட்ட போர்த்துக்கேய மீனவன் ஒருவன் பற்றி வெளியான செய்தியொன்றின் தாக்கத்தின் விளைவே அவரது ‘கிழவனும், கடலும்’ நாவலின் அடிப்படை.

இச்சமயத்தில் எனது சிறுகதையொன்றான ‘ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை’ உருவான விதம் பற்றிச் சில வார்த்தைகளைப் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கின்றேன். கனடாவுக்கு வந்த காலகட்டத்தில் என் வேலை காரணமாக டொராண்டோவின் மேற்குப் புறத்திலிருக்கும் ‘கீல்’ வீதியும், ‘சென்ட் கிளயர் மேற்கு’ வீதியும் சந்திக்கும் சந்தியை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் சந்தர்ப்பமேற்பட்டது. இன்று மிகவும் அபிவிருத்தி அடைந்துள்ள பகுதியாக விளங்கும் அப்பகுதியில் அன்று கனடா பக்கர்ஸ் நிறுவனத்தின் கசாப்புக் கூடம் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறை அக்கசாப்புக் கூடத்தைக் கடக்கும்போதும் மூக்கைத்துளைக்கும் மணமும், அங்கு வெட்டுவதற்காக அடைப்பட்டுக் கிடக்கும் மாடுகளின் நிலையையும் மனதில் பல்வேறு சிந்தனைகளை உருவாக்கும்.  மனம் அக்காலகட்டத்தில் இலங்கைச் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக்கிடக்கும் தமிழர்களின் நிலையுடன் அக்கசாப்புக்கூடத்தில் அடைபட்டுக்கிடக்கும் மாடுகளின் நிலையை ஒப்பிட்டுப் பார்க்கும்.

Continue Reading →

தீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு

- என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன் -ஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது. இன்று நாம் வாசிக்கும் ஆரம்பகால உலக வரலாற்று நூல்களைக் கூர்ந்து நோக்கினால் அவை ஆக்கிரமிப்பாளர்களாலும்ää காலனித்துவ ஆட்சியாளர்களாலும்,  அவர்களின் சிந்தனைப் பள்ளிகளில் மூளைச்சலவை செய்யப்பட்ட சுதேசிகளாலும் எழுதப்பட்டனவாகவே பெருமளவில் இருப்பதை அவதானிக்கலாம். ஆளும்வர்க்கத்தின்  பார்வையில் அமைந்த இத்தகைய வரலாற்று நூல்கள்  எதிர்காலம் எதைத் தெரிந்துகொள்ளவெண்டுமென அவர்கள் தீர்மானித்தார்களோ அவற்றையே உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது வழமை. தம்மால் தோற்கடிக்கப்பட்டவர்களின் நியாயங்கள்ää தியாகங்கள் எல்லாம் அவற்றில் மழுங்கடிக்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் இருந்தால் தோற்றுப் போனவர்களும் இருக்கவே செய்வர். இது இயற்கையின் விதி. அப்படியாயின், வரலாற்றில் அடக்கப்பட்டவர்களின் பக்க நியாயங்களை எடுத்துக் கூறும் வரலாறுகள் எங்கே புதையுண்டு போயின என்று தேடும்போது எமக்கு அவர்களால் அவ்வப்போது எழுதிவைக்கப்பட்ட ஆக்க இலக்கியங்களே பார்வைக்கு எஞ்சியிருக்கின்றன. அது நாட்டாரிலக்கியமாகலாம், கவிதையாகலாம், நாவலாகலாம்ää சிறுகதையாகலாம், ஏன் கடிதங்களாகவும்கூட இருக்கலாம். அந்த இலக்கிய வரிகளுக்குள் கூர்ந்து பார்த்தால் சொல்லப்படாத செய்திகளாக வரலாற்றுத் தகவல்கள் பல உருமறைப்புச் செய்யப்பட்டு ஒரு வரலாற்று மாணவனின் வருகைக்காகக் காத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.

Continue Reading →