‘பதிவுகளி’ல் அன்று: ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ – இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம்!

– ‘பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். — ஆசிரியர்

'பதிவுகளி'ல்  அன்று: 'பறத்தல் அதன் சுதந்திரம்' -  இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்  பெண்  கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம்! தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பான ‘சொல்லாதசேதிகள்’  என்னும் கவிதைப் தொகுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதேபோல் புலம்பெயர் பெண்களால் வெளியிடப்பட்ட ‘மறையாத  மறுபாதியும்’  இதற்குள் அடங்கும். 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவ்யா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் ’’பறத்தல் அதன் சுதந்திரம்’’ என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நூலை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.  இத் தொகுப்பில் 52 பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக் கவிதைத் தொகுப்பை மாலதி மைத்ரியின் உதவியுடன் க்ருஷாங்கினி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா முன்னுரை எழுதியுள்ளார்.  அத்துடன் 11 பெண் ஓவியர்கள் தம் ஓவியங்களால் இத்தொகுப்புக்கு கனம் சேர்த்துள்ளனர். பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரம், பாலியல், குடும்பம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று கட்டுரைகள், கவிதைகள் (ஹைக்கூ உட்பட),  விமர்சனங்கள் நாடகங்கள், ஒவியங்கள் என தமிழ்ச் சூழலில் இன்று பெண்களின் எழுத்துத்துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதை நாம் காண்கின்றோம். அந்தவகையில் இத் தொகுப்பில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ, தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுப்பாக ”பறத்தல் அதன் சுதந்திரம்” வெளிவந்துள்ளது. 

Continue Reading →