தமிழ் ஸ்டுடியோ.காம் : பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது….

பேசாமொழி 18 வது இதழ் வெளிவந்துவிட்டது....நண்பர்களே மாற்று சினிமாவிற்காக தமிழில் வெளிவரும் இணைய இதழான பேசாமொழியின் 18வது இதழ் இன்று (16-07-2014) வெளியாகியிருக்கிறது. இந்த இதழில் தமிழ் திரைப்பட ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனின் மிக விரிவான நேர்காணல் ஒன்றை யமுனா ராஜேந்திரன் எடுத்திருக்கிறார். மிக விரிவான இந்த நேர்காணல் இரண்டு பகுதிகளாக வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரே மூச்சில் படிக்கும்போது கிடைக்கும் தீவிரத் தன்மையை இரண்டு பகுதிகளாக வெளியிட்டால் அது கெடுத்துவிடும் என்று கருதி, ஒரே இதழில் முழு நேர்காணலையும் கொடுத்திருக்கிறேன். தவறவிடாமல் அவசியம் படிக்க வேண்டிய நேர்காணல். தவிர தியடோர் பாஸ்கரன் சில மாதங்களுக்கு எனக்கு படிக்க பரிந்துரைத்த ஜான் பெர்ஜரின் “Ways of Seeing”, புத்தகத்தை மொழியாக்கம் செய்து, இந்த இதழில் இருந்து வெளியிடுகிறோம். நண்பர் யுகேந்திரன் இந்த மொழியாக்கத்தை மேற்கொள்கிறார். பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது தொடங்கி, காட்சி படிமங்களின் வியப்பை இந்த நூல் நமக்குள் விரிவாக பதிவு செய்துக்கொண்டே போகிறது. இப்படியான புத்தகங்கள் தமிழில் வெளியானால்தான், பிம்பங்களை எப்படி பார்க்க வேண்டும் என்கிற தெளிவு நமக்கு ஏற்படும். பிம்பங்களை நேர்த்தியாக அலச தெரிந்தால், தமிழில் நிகழ்ந்திருக்கும் இத்தனை மோசமான திரைப்பட ஆக்கத்தை நாம் கட்டுப்படுத்தி இருக்க முடியும். நண்பர்கள் தவறாமல் இந்த தொடரை வாசிக்க வேண்டும். உங்களுக்குள் பல அதிசயங்கள் நிகழலாம்.

Continue Reading →