நண்பர்களே எதிர்வரும் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் சேலத்தில் உள்ள ARRS மல்டிப்ளெக்ஸ் ஹாலில் தமிழ் ஸ்டுடியோவின் மாதாந்திர திரையிடல் தொடங்கப்படவிருக்கிறது. தமிழின் முதல் குறும்படமான நாக்-அவுட்டும், இந்தியாவில் முதல் தலித்தியல் திரைப்படமான ஃபன்றியும் திரையிடப்படவிருக்கிறது. படத்தொகுப்பாளர் பீ. லெனின் இந்த மாதாந்திர திரையிடலை தொடங்கி வைக்கிறார். சேலம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நண்பர்கள் தவறாமல் இந்த மாதாந்திர திரையிடல் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். சேலத்தில் உள்ள நண்பர் மணிகண்டனின் தீவிர முயற்சியின் காரணமாகவே, சேலத்தில் தமிழ் ஸ்டுடியோவின் திரையிடல் தொடங்கப்படுகிறது. மணிகண்டனுக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இனி சேலத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, குறும்படங்கள், ஆவணப்படங்கள், உலக திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கிறது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துக்கொள்ளவும். இதன் தொடர்ச்சியாக சேலத்தில் பல்வேறு பயிலரங்குகளும் நடத்தப்படவிருக்கிறது.
தோப்பு இலக்கிய வட்டம் சிறந்த இலக்கிய நூல்களுக்கான மொழி விருது வழங்கும் விழா ஒன்றினை இவ்வாண்டு இறுதியில் நடாத்த ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது. பின்வரும் நான்கு பிரிவுகளில் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு தகைமை பெறும் ஒவ்வொரு வகைக்கும் பரிசளிக்கப்படும்.
1. நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை
2. கவிதை
3. கட்டுரை, பத்திகள், ஆய்வுகள்
4. மொழி பெயர்ப்புக்கள்: சிங்கள, ஆங்கில மூல நூல்களை தமிழ் மொழியில் பெயர்த்து எழுதப்பட்ட நூல்கள்
“சிறுவர் இலக்கியம் படைப்பது மகத்தான பணியாகும். புலம்பெயர்ந்த மண்ணில் எம் சிறார்களின் மொழி ஆளுமைக்கு உதவத் தமிழ்மொழியில் சிறுவர் இலக்கியம் அதிகமாகப் படைக்கப்பட வேண்டியது அவசியமாகும். சிறுவர்க்கான மனநிலையிலிருந்து அவர்களுக்கான பாடல்களைப் படைப்பதில் சில பெருங்கவிஞர்களே தோற்றுவிடுகிறார்கள். ஆசிரியராக அனுபவம் பெற்றவரும் பாலர்கல்வியில் விசேட பயிற்சிபெற்றவருமான பத்மா இளங்கோவன் சிறுவர் பாடல்கள்,குழந்தைப் பாடல்கள் படைப்பதில் வெற்றிபெற்றுள்ளார். அவர் படைத்துள்ள பாடல்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மண்ணிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன்,தமிழகத்தில் சிறந்த பரிசான ‘சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின்” சிறுவர் இலக்கியப் பணிக்கான பரிசினையும் அவர் பெற்றுள்ளமை பாராட்டுக்குரியதாகும். அவர் மேலும் இலக்கியத்துறையில் சாதனை படைக்க எமது வாழ்த்துக்கள்” இவ்வாறு,பாரிஸ் மாநகரில் அண்மையில் நடைபெற்ற ‘அனலைத் தென்றல்” விழாவில் ஐந்து நூல்களை வெளியிட்டு உரையாற்றிய ‘கல்விச் சேவையாளர்” சி. காராளபிள்ளை குறிப்பிட்டார்.
பதிவுகள் இணைய இதழில் கவிதைகள், நூல் விமர்சனங்களை எழுதிவருபவர் எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத். இவர் அண்மையில் நடைபெற்ற கொழும்புப் பல்கலைக் கழக இதழியல் ‘டிப்ளோமா’ கற்கைநெறியில்…