தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது 2014: 2014 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது திரு. ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

– நண்பர்களே, மாற்று திரைப்பட கலைஞர்களையும், சுயாதீன திரைப்பட கலைஞர்களையும் கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ மூலம் வழங்கப்படும் படத்தொகுப்பாளர் பீ. லெனின் பெயரிலான விருது இந்த ஆண்டு, உலகின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குனரான திரு. ஆனந்த் பட்வர்தன் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. இதற்கான விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 15 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. நண்பர்கள் தங்களின் காலெண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். –

ஆனந்த் பட்வர்தன்:

ஆனந்த் பட்வர்தன்:1950 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த ஆனந்த் பட்வர்தன், இளங்கலையில் ஆங்கிலப் பாடத்தில் பட்டம் பெற்றார். அரசுக்கு எதிரான கலகக்குரலாகவே தொடர்ந்து தன்னுடைய ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இவரின் பெரும்பாலான ஆவணப்படங்களுக்கு மத்திய தணிக்கை குழு, சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. ஆனால் நீதிமன்றத்தில் போராடி தன்னுடைய ஆவணப்படங்களில் ஒரு கட் கூட இல்லாமல், இதுவரை தொடந்து உலகம் முழுவதும் திரையிட்டு வருகிறார். 1995 இல் இவர் இயக்கிய Father Son and the Holy War என்கிற ஆவணப்படம், உலகின் முக்கியமான 50 ஆவணப்படங்களில் ஒன்றாக ஐரோப்பாவின் DOX இதழால் தெரிவு செய்யப்பட்டது. மார்க்சியம், காந்தியம், அம்பேத்கரியம் என முக்கியமான சிந்தனை பார்வைகளை கொண்டவர். தன்னுடைய எல்லா படங்களையும், இந்த சிந்தனை பார்வையின் அடிப்படையில் எடுத்து வருபவர். நான்கு முறை தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

Continue Reading →

மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன். இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்- மறு வாசிப்பில் கு. அழகிரிசாமி..

தலைமை:    திரு விஜய திருவேங்கடம்..
முன்னிலை: திருமதி சீதாலட்சுமி அழகிரிசாமி.. 
சிறப்புரை:     திரு பழ. கருப்பையா..
விருதாளர்:     திரு தமிழ்மகன்..
நிரலுரை:        முனைவர். ப. சரவணன்..

உறவும் நட்புமாக வருகை  தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டுகிறேன்…

Continue Reading →

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை… – நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு –

வந்தவாசி: புத்தகங்களே மனித மனங்களைப் பண்படுத்தும் ஆற்றலுடையவை... - நூலக வாசகர் வட்ட மாணவ உறுப்பினர் சேர்ப்பு விழாவில் பேச்சு  வந்தவாசி. ஜூலை.21. –  வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நடைபெற்ற மாணவ நூலக உறுப்பினர் சேர்ப்பு விழாவில்,மனித மனங்களைப் பண்படுத்தி. நல்வழி காட்டும் ஆற்றலுடை யவையாய் எப்போதும் புத்தகங்களே முன்நிற்கின்றன என்று மேனாள் அரிமா சங்க மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி பேசினார்.  இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமையேற்றார்.நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர்கள் டாக்டர் அர.நர்மதாலட்சுமி, தலைமையாசிரியர் க.சண்முகம், கவிஞர் பா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலக வாசகர் வட்டச் செயலாளரும், நல்நூலகருமான கு.இரா.பழனி அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அரிமா சங்க மேனாள் மாவட்ட ஆளுநர் வேல்.சோ.தளபதி, புதிதாக நூலக உறுப்பினர்களாக சேர்ந்த மாணவிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி, ‘நானும் புத்தங்களும்…’ எனும் தலைப்பில் பேசும்போது, சிறுவயதிலேயே எனது தந்தையார் மூலமாக எனக்குப் புத்தக வாசிப்பும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளும் அறிமுகமானது. தந்தை பெரியாரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும், நா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா போன்றோரின் மனித வாழ்வியலைப் பேசும் எழுத்துக்களும் எனக்கு உத்வேகமூட்டியவை.  

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன் – கறுப்பு ஜூலை 83 நினைவு தினக்கட்டுரை: இலக்கிய திறனாய்வாளர் கலா. பரமேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தினம் இன்று

 

” ஞாயிற்றுக்கிழமை  போய்விடுவேன்  என்றார் – அவ்வாறே  போய்விட்டார் இரண்டு  நாள்  இடைவெளியில் சஞ்சரித்த காலமு (னு)  ம்  கணங்களும் “

1_kalaparameswaran.jpg - 12.09 Kbமுருகபூபதிமுப்பத்தியொரு  ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை   மாதம்   22   ஆம் திகதி  வெள்ளிக்கிழமை  நள்ளிரவு    யாழ்ப்பாணம்    பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்தியில்  வந்துகொண்டிருந்த  இராணுவ  ட்ரக்   வண்டி  மீது நிலக்கண்ணி வெடித்தாக்குதல்    நடந்தது.  அச்சம்பவத்தில்  13   இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியை  தமிழர்கள்  இன்றும்  கறுப்பு  ஜூலை  என்று அனுட்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இலங்கையின்  அரசியலிலும்  அங்கு வாழ்ந்த   பூர்வகுடி தமிழ் மக்களினதும்  வாழ்வில்    பெரும்    மாற்றத்தை ஏற்படுத்திவிட்ட அந்த  1983   ஜூலை   மாதத்தில் யாழ்ப்பாணம் பலாலிவீதியில் ஒரு  இல்லத்தில்  அந்த    கறுப்புஜூலை   ஆழமாகவே பதிந்துவிட்டது. அந்தவீட்டிலிருந்த   முதியவர்    மற்றும்    குடும்பத்தலைவர்    தவிர்ந்த ஏனையவர்களை    வேரோடு    பிடுங்கி    எறிந்து    தேசாந்தரிகளாக்கியது. அப்படியென்றால்  –  அந்த    முதியவரும்    குடும்பத் தலைவரும்    என்ன ஆனார்கள்?    அவர்களின்    உடல்களை    குண்டுகள்    துளைத்து    அவர்கள் பரலோகம்    பயணித்தார்கள். எனது   இனிய    நண்பர்   கலா. பரமேஸ்வரன்   இன்று (24-07-1983)    யாழ்ப்பாணம்   பலாலிவீதியில்    கொல்லப்பட்ட   31    ஆவது    ஆண்டு நினைவு  தினம்.  அந்தத்துயரமே  இந்தக்கறுப்பு ஜூலையில்    இன்றைய  நாளில் எனது துயர்பகிர்வு. அன்று  24  ஆம்  திகதி   ஞாயிற்றுக்கிழமை   ஆடி  ஆமாவாசை – போயாதினம்.    தென்னிலங்கையில்   நாட்டின்    ஜனாதிபதி   உட்பட பௌத்தர்கள்    அனைவரும்   சில்   அனுட்டித்துக்கொண்டிருந்தார்கள்.

Continue Reading →