கவிதை: எடையின் எடை!

Latha Ramakrishnan 

1
யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதி! என்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்அடுக்கிவிட முடியும்;  அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!

2
ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!

Continue Reading →