அன்புடையீர், பேராசான் கா. சிவத்தம்பி அவர்களின் பிறந்த தினத்தை அவரது மறைவின்பின் வருடாவருடம் நாம் நினைவு கூர்ந்து வருவது நீங்கள் அறிந்ததே. நமது பேராசானின் பல்துறை ஆளுமையை எடுத்தியம்பும் நிகழ்வுகளையும் நடத்தி அவரைக் கொண்டாடி வருகிறோம். மறைந்த அம் மாமேதையின் ஆன்மா மகிழ்வுறும் என்ற நம்பிக்கையுடன் சில தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் நிலைப்பட்ட முன்முயற்சிகளை அவருக்குச் சமர்ப்பணமாக்கியும் வருகிறோம். அவ்வகையில் பேராசிரியரின் 82ம் பிறந்த தினத்தினையொட்டிய நினைவுப் பெருநாளை எதிர்வரும் ஜூலை 6ந்தேதி நினைவுகூர இருக்கிறோம். இந்நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பணிவுடன் அழைக்கிறோம். ஜூலை 6ந்தேதி மாலை 6.30 மணியளவில் நினைவுப் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி ஆரம்பமாகும். பேராசானின் ஆளுமை குறித்த சிறப்புரையை பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்கள் நிகழ்த்துவார்கள். அதைத் தொடர்ந்து பேராசான் பற்றியதொரு ஆய்வுக் குறிப்புரையை கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள் வழங்குவார்கள். தொடர்ந்து பேராசானுக்குப் பெருமை செய்யும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இவ்வாண்டு பேராசானுக்கான இலக்கிய சமர்ப்பணமாக ‘பருவம்’ என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இலக்கியத் திரட்டாய் அமைந்திருக்கும் அந்நூல் குறித்த சுருக்கமான அறிமுகக் குறிப்புரையை ரொறன்ரோ பல்கலைக்கழக கலாநிதிநிலை ஆய்வாளர் அ. பொன்னி அவர்கள் நிகழ்த்துவார்கள்.
நிகழ்ச்சி நிரல்
செம்மொழித் தமிழ்: வரலாறு, இயல்புகள், பயன்பாடு – உரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
சிறப்பு விருந்தினர்கள் உரை
*தமிழல்லாத ஒரு செம்மொழி – பேராசிரியர் அ.யோ.வ.சந்திரகாந்தன்
*செம்மொழித் தமிழ்: ஒரு மொழியியல் நோக்கு – முனைவர் பார்வதி கந்தசாமி
*இன்றைய இளையவர் நோக்கில் செம்மொழித் தமிழ் – திரு.குணரட்ணம் இராஜ்குமார்
ஆனி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை
நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளிவரும் இதழான பேசாமொழியின் 17வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. ஜூலை மாதம் முதல், பேசாமொழி மாதமிருமுறை இதழாக வெளிவரவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும்,…
கிண்ணியா ஏ. நஸ்புல்லாஹ்வின் காவி நரகம் என்ற சிறுகதைத் தொகுதி பேனா பதிப்பகத்தின் மூலம் 125 பக்கங்களில் வெளிவந்துள்ளது. பின்னவீனத்துவப் பாணியை கைக்கொண்டு மிகவும் வித்தியாசமான போக்கில் தனது சிறுகதைகளை நஸ்புள்ளாஹ் யாத்துள்ளார். பின்னவீனத்துவ பிரக்ஞை மிக்க இவர் இதற்கு முன் துளியூண்டு புன்னகைத்து, நதிகளைத் தேடும் சூரிய சவுக்காரம், கனவுகளுக்கு மரணம் உண்டு ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். காவி நரகம் என்ற இச்சிறுகதைத் தொகுதியில் புத்தன் வந்த பூமியிலே, இவர்களை நடைபாதையாக உபயோகிக்காதீர்கள், முரண்களின் சாபம், கன்னத்தில் அறையும் கதை, நிலைகுலைவு, மனிதம், ஆறு கண்களால் எழுதிய மூன்று கடிதங்கள், இப்படிக்கு பூங்காற்று, காவி நரகம், வேரறுந்த விலாசங்கள், விதவைத் தேசம், சுதா சுங்கன் மீன் போல அழகு, ஓர் எழுத்தாளனின் கதை ஆகிய தலைப்புக்களிலான ஏ. நஸ்புள்ளாஹ்வின் 13 சிறுகதைகளைக் காண முடிகின்றது. 08 கதைகள் போர்க்காலச் சூழல் சம்பந்தமானவையாகவும், ஏனைய 05 கதைகள் இன்னோரன்ன விடயங்;கள் சம்பந்தமானவையாகவும் என்று இரண்டு பகுதிகளாகவே பிரித்துப் பார்க்கும் அமைப்பில் இந்த 13 சிறுகதைகளும் அமைந்துள்ளன. போர்க்காலச் சூழல் சம்பந்தமான கதைகள் யாவும் கடந்த மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள், கஷ்டங்கள் நிறைந்த வாழ்வியலை வெளிக்காட்டி நிற்கின்றன.
கிண்ணியா மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக போனா பதிப்பகத்தின் மூலம் 48 பக்கங்களில் 39 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கிறது ஜே. பிரோஸ்கானின் என் எல்லா நரம்புகளிலும் கவிதைத் தொகுதி. இந்தக் கவிதைத் தொகுதியானது ஜே. பிரோஸ்கானின் நான்காவது கவிதைத் தொகுதியாகும். இவர் ஏற்கனவே இதுவும் பிந்திய இரவின் கனவுதான் (2009), தீ குளிக்கும் ஆண் மரம் (2012), ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகன்ட் கோபம் (2013) ஆகிய கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. என் எல்லா நரம்புகளிலும் பயணிக்கின்ற குருதி வார்த்தைகள் என்ற தலைப்பிட்ட தனதுரையில் பிரோஸ்கான் ”என் படைப்புக்கள் சமூகத்தை நெருங்கிவிட நம்பிக்கையூட்டும் அடையாளத்தோடு, என் தலைமீது சுமத்தப்பட்டிருக்கும் மனித உணர்வுகளின் தேடல்களை உண்மைக்கு, உண்மையாய் பகிர்ந்து கொள்வதின் மற்றுமொரு பதிவுதான் என் எல்லா நரம்புகளிலும்” என்று குறிப்பிடுகின்றார்.
‘அசோகனின்வைத்தியசாலை’என்ற நாவல், அவுஸ்திரேலியாவில், மிருக வைத்தியராகவிருக்கும், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து அங்குவாழும் நொயல் நடேசனின் மூன்றாவது நாவலாகும். இந்த நாவலுக்கு, இதுவரை ஒரு சிலர் முகவுரை, கருத்துரை, விமர்சனம் என்ற பல மட்டங்களில் தங்கள் கருத்துக்களைப் படைத்திருக்கிறார்கள். இந்த நாவலுக்கு, இன்னுமொரு புலம் பெயர்ந்த எழுத்தாளர் என்ற விதத்தில், இவரின் நாவல் பற்றிய சில கருததுக்களையும, இவருடைய நாவலில் படைக்கப் பட்டிருக்கும் பெண் பாத்திரங்கள் பற்றி, எனது சில கருத்துக்களையும் சொல்ல வேண்டுமென்று பட்டதால், இந்தச் சிறு விமர்சனத்தை வைக்கிறேன். அவுஸ்திரேலியா, அமெரிக்கா,நியுசீலாந்து, கனடா போன்ற ஒரு புதிய உலகம். அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட இருநூறு வருடங்களுக்குக் கொஞ்சம் கூடுதலான சரித்திரத்தைக் கொண்டது. உலகின் பல தரப்பட்ட மக்களும் குடியேறிய நாடு. பல நாடுகளிலுமிருந்து போன மக்கள் தங்களுடன் தரப்பட்ட கலை,கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்டு சென்றவர்கள். தாங்கள் கொண்ட சென்ற புகைப்படத்திலுள்ள தங்களின் இளமைக் கால நினைவுகளுடன், தங்கள் பழைய சரித்திரத்தைப் பிணைத்துக் கொண்டவர்கள்.
Prime Minister Stephen Harper delivered the following remarks on Canada Day:
“Thank you Shelly, Governor General Johnston and Sharon Johnston, distinguished guests, ladies and gentlemen, boys and girls, Happy Canada Day! One hundred and fifty years ago, the Fathers of Confederation, our ancestors, met in Charlottetown, and Quebec. In 1864, our Fathers of Confederation dreamed a magnificent dream, a dream of a united Canada that would take its place among the countries of the world; prosperous, strong and free. 147 years later, this is their dream, Canada, a confident partner, a courageous warrior, a compassionate neighbour. Canada, the best country in the world!
Now, Ladies and gentlemen, I believe that greatness springs up from the hearts of a people. In Canada’s heart, our national desire, is to do what is right and good. It is the true character of the Canadian people, and the expectation they place on their government. We act, based on those principles, to lead instead of follow. To be good friends; and to honour our commitments. So ladies and gentlemen, let us celebrate those Canadians who make our Canada great, our men and women in uniform, who keep our streets and loved ones safe, and, as we have tragically seen in Moncton recently, sometimes tragically make the ultimate sacrifice; The members of the Canadian Armed Forces, who stand on guard, and who have given their lives time after time, so that people around the world might also know freedom, democracy and justice.
ஈழத்து இலக்கியச் சூழலில் மிகப் பெரும்பாலும் தொகை நூல்களின் அல்லது திரட்டு நூல்களின் வருகை அரிதானதாகும். இதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.
1) தொகை நூலின் உருவாக்கத்திற்கான தேடல்
2) தொகை நூலின் உருவாக்கத்திற்கான செலவு
குறித்த திரட்டு நூல் உருவாக்கத்திற்கான தேடல் என்பது அந்நூல் உருவாக்கத்தில் மிகுந்த ஈடுபாடும், அர்ப்பணிப்புணர்வும், முனைப்பும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதென்று. நூலுருவாக்கத்திற்கான செலவென்பதும் ஒப்பீட்டளவில் மிக அதிகமானதொன்று. எவராவது வெளியீட்டுச் செலவினைப் பொறுப்பேற்றுக் கொள்ள முன்வந்தால் மட்டுமே இவ்வாறான நூல்கள் வெளிவருவது சாத்தியமாகும். இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் காங்கேயன் நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு வெளிவந்திருக்கும் “உடுப்பிட்டி சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு – தேவபாகமும் மானுடபாகமும்” எனும் திரட்டு நூல் முக்கியத்துவம் பெறுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்;டில் ஈழத்தில் சிறப்புற மிளிர்ந்த தமிழ்ச்சுடர் என வருணிக்கப்படும் சிவசம்புப் புலவர் (1829 -1910) யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியில் அமைந்திருக்கும் உடுப்பிட்டியில் பெரும்பிரபு அருளம்பலமுதலியாருக்கும் கதிராசிப்பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இவர் நல்லூர் சரவணமுத்துப் புலவர், சம்பந்தபுலவர் ஆகியோரது மாணாக்கராய்ப் பயின்றவர்.
– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன. இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –
அத்தியாயம் இரண்டு!
‘சிங்களம் மட்டுமே நாட்டின் ஏகமொழி’ என்று திணித்தார்கள். தமிழருடைய கல்வி முன்னேற்றத்திற்கு தடை விதிக்க, தரப்படுதல் புகுத்தப்பட்டது. வடகீழ் மாநிலங்களிலே பாரம்பரிய தமிழர் மண் சுவீகரிக்கப்பட்டு, சிங்களக் காடையர்களின் குடியேற்றங்கள் கொலுவிருக்கச் செய்தனர். கிழக்கில் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய நிலம் ‘மண் கொள்ளை’ செய்யப்பட்டு, இரண்டு சிங்களத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. வடக்கினையும் கிழக்கினையும் ஒரே நிலப்பரப்பாக ஒன்றிணைக்கும் மணல் ஆறு பிரதேசம், வெலிஓயாவாக மறு நாமகரணமிடப்பட்டு, தென்வவுனியாவினை இணைத்து அடங்கா தமிழரின் மண்ணிலே ஒரு தொகுதி உருவாக்கத் திட்டடப்படுகின்றது. இவற்றை எல்லாம் கண்ணுற்றும், தமிழருடைய அரசியல் தலைவர்கள் ‘துப்பாக்கிக் குண்டு விளையாட்டுக் குண்டு’ ‘தூக்குமேடை பஞ்சுமெத்தை’ என்று வீரவசனங்கள் பேசுவதிலே காலவிரையம் செய்தார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், அவற்றின் மை உலர்வதற்கு முன்னமே குப்பைத் தொட்டிகளிலே கடாசப்பட்டன! தமிழருடைய மண்ணைக் காக்கவும், தமிழ் இனத்தின் மானத்தைக் காக்கவும் இளைஞர்கள் ஆயுத பாணிகளாகக் களம் குதித்தல் வேண்டும். அஹ’ம்ஸையின் அர்த்தத்தினை மனிதர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்…ஆனால், சிங்களர்…