ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்.
வந்தவாசி.ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டிய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது குறிப்பிட்டார். இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமையாசிரியர் பி.என்.அன்பழகன் தலைமையேற்றார். பள்ளி ஆசிரியர்கள் தெ.இராஜேஸ்வரி, இரா.அப்பாண்டைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவியல் ஆசிரியர் இரா.அருண்குமார் அனைவரையும் வரவேற்றார்.
‘பூமி, சூரியன் மற்றும் சந்திரன்’ பற்றிய அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பட்டது. ‘உலகம் உருவான கதை’ எனும் அறிவியல் நூலை வெளியிட்டு, ‘அறிவியலும் நாமும்’ எனும் தலைப்பில் யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர் மு.முருகேஷ் பேசும்போது, காலம் எவ்வளவுதான் அறிவியல் வளர்ச்சியில் முன்னேறினாலும், வளர்ந்த நாடுகள் போராயுதங்களை-அணுகுண்டுகளை வைத்துக் கொண்டு, சிறிய வளரும் நாடுகளை மிரட்டுகிற போக்கு இன்னும் மாறவில்லை. ஏன், எதற்கு, எப்படி என்கிற அறிவியல் ரீதியான தெளிவைப் பெற மாணவர்கள் எப்போதும் தயங்க கூடாது. சிறுவயதில் நமக்குள் எழும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடமும் கற்றறிந்த சான்றோர்களிடமும் கேட்டு, அவற்றிற்கான விளக்கங்களைப் பெற முயற்சிக்க வேண்டும்.
மு.வெங்கடசுப்ரமணியன் 10.05.1956இல் பிறந்தவர். பிறக்கும்போதே ஒரு கண்ணில் மட்டுமே பார்வைத்திறன் கொண்டவராய் பிறந்தவர் பின் படிப்படியாக அடுத்த கண்ணிலும் பார்வையை இழந்துவந்தார். ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோஸா’ எனப்படும் விழித்திரை பாதிப்பின் காரணமாக, மறு கண்ணிலும் முழுமையாக பார்வை பறிபோயிற்று.அப்பொழுது அவருக்கு வயது பதிமூன்று. மற்றவர்களின் உதவியையே எதிர்பார்த்துக்கொண்டிராமல் சுயமாக வாழ வேண்டும் என்ற ஆர்வமும், உறுதியும் அந்த இளம் வயதிலேயே வெங்கடசுப்பிரமணியனின் மனதில் ஆழமாக வேரூன்றிவிட்டன. குடும்பத் தாரின் ஊக்கமும், ஒத்துழைப்பும் அவருக்கு இருந்தது. தாயார் நாளேடுகள் முதல் இதிகாசங்கள் வரை படித்துக்காண்பிப்பாராம். தந்தை ஆங்கிலம் போதித்தார். உடன்பிறந்தவர்களும் இவருக்கு இப்போதுமே பக்கபலமாக இருந்துவந்தனர். 1986ஆம் வருடம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட திருவை யாறு அரசர் தமிழ் மற்றும் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பட்டயப் படிப்பில், விதிவிலக்கின் அடிப்படையில் தனது 29ஆம் வயதில் சேர்ந்தார் வெங்கடசுப்பிர மணியன். இவர் ஒருவர் தான் மாணாக்கர்களில் பார்வையிழந்தவர். ஆரம்பத்தில் இவரை ஒருமாதிரிப் பார்த்த சக மாணவர்கள் நாளாக ஆக இவரை மூத்த சகோதரனைப்போல் நடத்தத் தொடங்கினார்கள். அவர்கள் 8ஆம் வகுப்பு படித்தவர்களே. ஆனால், அவர்கள் வெங்கடசுப்ரமணியனின் கல்வி தொடர பெரிதும் உதவினார்கள். அவருக்கு ஆர்வமாகப் படித்துக்காட்டினார்கள். பள்ளிக் கல்வியையும் முடித்தார் வெங்கடசுப்ரமணியன். மிருதங்கம் கற்கத் தொடங்கியவர் இறுதியில் இந்திய இசையில் கீழ்/மேல் நிலைகளில் தேறினார். 1991இல் டி.டி.ஸி முடித்தார்(இசையாசிரியர் பயிற்சி). 1995இல் வெங்கடசுப்ரமணியனின் மனைவியாக மனம்விரும்பி முன்வந்தவர் சூரியா. பார்வையுள்ளவர். இன்றளவும் வெங்கடசுபரமணியத்தின் வலதுகர மாகத் திகழ்ந்துவருகிறார்!