சுதாராஜின் சிறுகதைகள் பற்றிய ஆளுமைகளிருவரின் பார்வைகள் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல்!

சுதாராஜ் சிறுகதைகள்சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட  உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், ‘பதிவுகள்’ இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும்,  பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. – -பதிவுகள் –

சுதாராஜ் சிறுகதைகள்

எம். ஏ. நுஃமான்

1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -52: மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழ் பற்றி…

magazine_nutpam1981ab.jpg - 34.65 Kbமொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 1980/1981 ஆண்டுக்கான செயற்குழுவில் , சங்கம் வருடா வருடம் வெளியிடும் ‘நுட்பம்’ சஞ்சிகைக்கான இதழாசிரியர் குழுத் தலைவராக நானிருந்தேன்.  இதழாசிரியர் குழுவில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சு.வித்தியானந்தன், கட்டடக்கலைப் பீடத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் ஆகியோரிருந்தனர்.

“ஒரு நாள் வரும்.
எழுதுகோல் நிற்கும்.
பின் கைகள் ஆயுதங்களைத் தாங்கும்.
இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு
இட்டுச் செல்லும்” – Jean Paul Satre

என்னும் சார்த்தரின் கூற்று முதல் பக்கத்தில் தமிழ்ச்சங்க இலச்சினையுடனிருக்கும். மேற்படி சஞ்சிகை நல்ல முறையில் வெளிவரப் பெரிதும் உதவியவர்கள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரே. மேற்படி சஞ்சிகையின் அட்டைப்படத்தினை வரைந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் குணசிங்கம். ஓவியத்திலிருக்கும் ஆண்டினை உற்றுக் கவனித்தீர்களென்றால் அது ஒருவிதத்தில் 1980 ஆகவும், இன்னொரு விதத்தில் 1981 ஆகவுமிருக்கும். 1980 / 1981 நடப்பாண்டுச் செயற்குழுவின் வெளியீடு என்பதால் ‘நுட்பம்’ இதழின் அட்டைப்பட ஓவியத்தில் ஓவியர் காட்டிய நுட்பம் அது. சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் வருமாறு:

Continue Reading →