சிறுகதை: “தெற்றுப்பல்”

-கமலாதேவி அரவிந்தன் (மலேசியா) -பலத்த காற்று  வீசும்போதே  ஈரப்பதத்தையும் சேர்த்தே வீசியது கண் சிமிட்டும் நேரத்துக்குள் சடசடவென்று மழை பிடித்துக்கொண்டது.திசை மறித்த இக்கட்டின் சீற்றமாய்  அலறிக்கொண்டு  வந்த மழையைத் துளைத்துக்கொண்டே மழையோடு மழையாய்  வேக வேகமாக நடக்கும்போதே குடை சரிந்து சாய்ந்தது. ஆவேசத்தோடு குடையைத் துக்கி எறிந்த ராமலிங்கம் இன்னும் துரிதமாக நடையைப் போட்டான்.  ஒரு டேக்சியை நிறுத்தத் தோன்றவில்லை. டேக்சியில் ஏறினால் பத்தே நிமிடங்களில் போய்விடலாம் தான். ஆனால் திமிறத்திமிற முகத்தில் வந்து விழும் மழை நீரோடு ,கண்ணிலிருந்து விழுந்த உப்புநீரும் சட்டையை நனைக்க, ராமலிங்கம் வெறி பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்தான். அலமலந்து சொல்லிக்கொள்ள வாய்விட்டு ஆற்றிக் கொள்ள ஒருபற்றுக்கோடு கூட இல்லாமல்,  காற்றை இரண்டு கைகளாலும் அளைந்து வீசிக்கொண்டே,  ஏய், என்று ஓங்கிக் கத்தினான். எரி நட்சத்திரமொன்று, இருள் கிழித்த ஒளியாய் பளீரென்று, மின்னலும் இடியுமாய் கிடுகிடுக்க வானம் ஓவென்று கிழிந்து ஊற்றியது.அவள் மட்டும் இப்போது எதிரில் இருந்தால் அப்படியே அந்த இடுப்பிலேயே ஓங்கி மிதிக்க வேண்டும் போல் சண்டாளமாய்  வந்தது கோபம்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

‘டொராண்டோ’ போன்ற பல் கலாச்சார மக்கள் வாழும் நகரங்களில் வசிப்பதால் ஏற்படும் நன்மைகளிலொன்று: உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு, அவர்களைப் பற்றி அறிவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். பல்வேறு நாட்டு மக்களின் உணவு வகைகளை ருசிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். எல்லாவற்றிலும் மேலாக இப்பூவுலகு பற்றிய சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதாகும். இத்தாலியர்கள் சிறிது ஆச்சரியம் அடையும்போது ‘மம்மா மியா’ என்பார்கள். ஸ்பானிஷ்காரர்கள்  ‘நண்பனே’ என்பதற்கு ‘அமிகோ’ என்பார்கள். எனக்குத் தெரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியனொருவன் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் சிறிதாவது உரையாடுவதற்குப் போதுமான மொழியறிவு பெற்றிருக்கிறான். என்னைக் கண்டால் தமிழில் நலம் விசாரிப்பான். பாகிஸ்தானியர்களைக் கண்டால் ‘அஸ்ஸலாமு அழைக்கும்’ , கியா ஹால் கை’, ‘சுக்ரியா’ போன்ற உருது சொற்களைக் கூறுவதற்குத் தெரியும். போர்த்துகேயர்களைக் கண்டால் அவர்கள் ஒரு காலகட்டத்தில் எங்களூரில் செய்த அட்டுழீயங்களை விபரிப்பேன். மேலும் ஜன்னல், சப்பாத்து என்று தமிழில் கலந்துவிட்ட போர்த்துகேய சொற்களைப் பற்றிய எனது பாண்டித்தியத்தையும் சிறிது ‘அவிழ்த்து’ விடுவேன். ‘ஆ’வென்று வாயைப் பிளப்பார்கள். ஆங்கிலேயர்களிடம் ‘எங்கள் மொழியிலிருந்தும் நீங்கள் சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் தெரியுமா?’ என்பேன். ‘என்ன” என்று தலையைச் சொறிவார்கள். அவர்களுக்கு ‘கட்மரான்’ கட்டுமரத்திலிருந்து வந்ததுதானென்பேன்.  அவர்களும் தம் பங்குக்கு வாயைப் பிளப்பார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் …..

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் .....

இன்று கவிதைகளை எழுதித் தள்ளுகின்றார்கள் பலர். நூற்றுக்கணக்கில் கவிஞர்களும், அவர்கள்தம் நூல்களும் வெளிவருகின்றன. கவிதைகளைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்களெல்லாரும் கவிதைகளைத் தொகுத்து தொகுப்புகளை வெளியிடுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் இவ்விதம் கவிதைகளை எழுதித் தள்ளுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குக் கவிதை பரிணாமமடைந்து விட்டது. இனி ஒன்றைபற்றியும் கவலைப்படத்தேவையில்லை.’ இவ்விதம் எண்ணிக்கொண்டு எழுதித்தள்ளூகின்றார்கள். இவர்களது கவிதைகளை முறிக்காமல் எழுதி விட்டு வாசித்துப் பாருங்கள்.  அவை கவிதைகளல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்களெல்லாரும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதையிலிருந்து கவிதையானது புதுக்கவிதைக்கு மாறிவிட்டது உண்மைதான். ஆனால் கவிதையானது தனது அடிப்படைத் தன்மைகளிலிருந்து மாறிவிடவில்லை என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். கவிதை மரபுக் கவிதையோ அல்லது மரபு மீறிய நவீன கவிதையோ கவிதையாக இருக்க வேண்டும். அது கவிதையாக இருப்பதற்கு கவிதையில் பாவிக்கப்படும் மொழி முக்கியம். மரபுக் கவிதையில் மட்டுமல்ல மரபினை மீறிய நவீன கவிதையிலும் ஓசை நயமுண்டு. உதாரணமாகச் சேரனின் ஒரு கவிதையினை எடுத்துப் பார்ப்போம்:

Continue Reading →

நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014

நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014நிகழ்ச்சி நிரல்
கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும்
உரை: பேராசிரியர் அ.ஜோ.சந்திரகாந்தன்

சிறப்பு விருந்தினர்கள் உரை
“தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில்
கிறிஸ்தவ மிஷனறிமாரின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி
வீரமாமுனிவரின்  தமிழ் இலக்கியப்பணி – ஜுட்   பெனடிக்ட், BA (Hons. Jaffna) MA (Cand.)

ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →