மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
மனித வாழ்க்கையில் அடிப்படைத் தேவையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடமாகும். இம்மூன்றில் ஒன்று குறையாக அமைந்துவிட்டால் உயிரினங்கள் வாழும் தகவமைப்பினை இழந்து விடுவர். அவற்றில், மனிதன் தங்குவதற்கு இருப்பிடம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. இத்தகைய இருப்பிடம் மக்களின் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்கின்றனர். கற்காலத்தில் மனிதன் நாடோடியாகச் சுற்றித் திரிந்தான். அவன் வாழ்க்கையில் இயற்கை சீற்றத்தில் அவன் தப்பிப் பிழைத்தது அரிது. அக்கால கட்டங்களில் மனிதன் மரங்களின் கிளைகள் மீதும், பாறைக்குகைகளிலும் மறைந்து, விலங்குகளிடமிருந்தும், மழை போன்ற இயற்கைத் தாக்குதலிலும் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொண்டான். தான் உறங்குவதற்கும் அத்தகைய குகைகளையும் மரங்களையும் பயன்படுத்தினான். புதியகற்காலத்தில் மரங்களின் இலைகள், புல், கோரை இவற்றினை வைத்து கூரைகளை வேய்ந்து, அக்கூரைகளில் வாழ்ந்து வந்தான். புல், கோரை இவற்றினை வைத்து மனிதன் கூரையமைத்து வாழ்ந்தமைக்கானச் சான்று, கலித்தொகை, சிறும்பானாற்றப்படை போன்ற நூல்களிலும் கம்பராமாயணத்திலும் காணப்படுகின்றன. தற்காலத்தில் குடிசைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு எனப் பலவிதங்களில் அமைக்கின்றனர். இவ்வகையான இருப்பிடம் அமைத்தலில் தொழிலாளர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். இங்கு கட்டிடத்தொழிலாளர்கள் பயன்படுத்தும் வழக்காடு சொற்களைத் தவிர்த்து தொழில் சார்ந்த கலைச்சொற்களை மட்டும் அறிமுகப்படுத்தும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
– தன்னை பலாத்காரம் செய்ய வந்த காவல்துறை அதிகாரியை கொலை செய்ததாக இந்த பெண் கூறியிருந்தார். அந்தக் குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் முடிவு செய்து, சனிக்கிழமையன்று நிறைவேற்றவும் செய்தது. அதற்கு முன் அவர் தன் அம்மாவிற்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. – ஜெனி டொலி
அன்புள்ள ஷோலே, கிசாசை (இரானிய தண்டனைச் சட்டம்) நான் சந்திக்க வேண்டிய நாள் இது தான் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் கடைசி தாளை நான் அடைந்ததை நீயே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு வேதனையாக இருக்கிறது. எனக்கு தெரிய வேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது எனக்கு அவமானமாக இருக்கிறது தெரியுமா? உன்னுடைய கையையும், அப்பாவின் கையையும் நான் முத்தமிடும் வாய்ப்பை ஏன் நீ பயன்படுத்திக் கொள்ளவில்லை? இந்த உலகம் என்னை 19 வருடம் வாழ அனுமதித்திருக்கிறது. அந்த துர் இரவில் நான் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என் உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் எறியப்பட்டிருந்திருக்கும். சில நாட்கள் கழித்து என் உடலை அடையாளம் காண உன்னை கரோனரின் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். அப்போது தான் நான் பலாத்காரம் செய்யப்பட்டதையும் நீ அறிந்திருப்பாய். என்னைக் கொன்றவனை என்றைக்குமே கண்டுபிடித்திருக்க முடியாது. அவர்களிடம் உள்ளது போன்ற செல்வமும், அதிகாரமும் நமக்கில்லையே. அதன் பிறகு அவமானத்தோடும். வலியோடும் உன் வாழ்வை நீ தொடர்ந்திருப்பாய். அப்புறம் சில ஆண்டுகளில் இந்த வலியினால் நீ இறந்து போயிருந்திருப்பாய். அத்தோடு எல்லாம் முடிந்திருக்கும்.
அவுஸ்திரேலியா – சிட்னியில் கடந்த 14 ஆம் திகதி மறைந்த மூத்தபடைப்பாளி காவலூர் ராஜதுரையின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் சிட்னி மத்திய ரயில் நிலையத்திற்கு வந்து மெல்பன் புறப்படும் ரயிலில் அமர்ந்திருக்கின்றேன். பத்திரிகையாளர் சுந்தரதாஸ் கைத்தொலைபேசியில் தொடர்புகொள்கின்றார். காவலூரை வழியனுப்பிவிட்டு புறப்பட்டீர்கள். மற்றும் ஒருவரும் மீள முடியாத இடம் நோக்கிப்புறப்பட்டுவிட்டார் என்ற செய்தி வந்துள்ளது என்றார். யார்…? எனக்கேட்கின்றேன். ராஜம்கிருஷ்ணன் என்கிறார். கடந்த 2012 ஆம் வருடம் தமிழகம் சென்று ராஜம்கிருஷ்ணனை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த சென்னை – பொரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்பி – பயணியின் பார்வையில் தொடரில் ஆளுமையுள்ள அந்த அம்மாவைப்பற்றிய விரிவான கட்டுரையை பதிவுசெய்திருந்தேன்.
அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இங்கே:
ஒளிரும் தீப ஒளியில்
கருகும் தீய எண்ணங்கள்
மிளிரும் இந்த வேளையில்
பொழியும் ஆனந்த உணர்வுகள்
விடியும் பொழுதோடு ஒரு
கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கின்றோம். தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம். காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர். ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர். சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார்.
தமிழ் எழுத்துலகில் பெண் எழுத்தாளராக புகழுடன் வலம் வந்த ராஜம் கிருஷ்ணன் திங்கள் கிழமை இன்று இரவு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 90. 1925ல் திருச்சிக்கு அருகே உள்ள முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். 15 வயதில் கிருஷ்ணன் என்பவருடன் திருமணமானது. பள்ளி சென்று முறையான கல்வி பயிலாவிடினும், மின் பொறியாளரான கணவர் உதவியால் புத்தகங்களைப் படித்து, தாமே கதைகள் எழுதத் துவங்கினார். 1970ல் தூத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையைக் கண்டு ‘கரிப்பு மண்கள்’ என்ற நாவலை எழுதினார். பீகார் கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்தித்து, அதன் விளைவாக ‘முள்ளும் மலரும்’ என்ற நாவலை எழுதினார். பெண் சிசுக் கொலை உள்ளிட்ட சமூக அவலங்கள் குறித்து எழுதியுள்ளார். கலைமகள் இதழில் கதைகள் பல எழுதியுள்ளார். அதன் ஆசிரியர் கி.வா.ஜகன்னாதனால் எழுத்துலகில் வளர்க்கப்பட்டவர். 1953ல் கலைமகள் விருது, 73ல் சாகித்ய அகாதெமி விருது, 91ல் திருவிக விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கணவர் கிருஷ்ணனுக்கு பக்கவாதம் வந்து நடக்க இயலாமல் தம் 90ம் வயதில் காலமானார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. பின்னர் முதுமையில் வறுமையால் வாடிய சென்னையில் விஷ்ராந்தி ஆதரவற்றோர்-முதியோர் இல்லத்தில் தங்கினார். கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் காலமானார்.
நன்றி: http://www.dinamani.com
பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர் பேட்ரிக் மோடியானோ 2014ம் ஆண்டிற்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மோடியானோவின் “தொலைந்த மனிதன் (Missing Person)’ நாவல் இப்பரிசினைப் பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, நாஸிக்களின் ஆக்ரமிப்பு வன்முறையால் பிரான்ஸ் அடைந்த துயரங்களைக் குறித்த விரிவான ஆய்வுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் பேட்ரிக் மோடியானோ., பிரெஞ்சு நாட்டை ஜெர்மனியின் நாஸிப் படைகள் இரண்டாம் உலகப்போரில் ஆக்கிரமித்த காலக்கட்டத்தின் நிகழ்வுகளை தனது படைப்பாற்றல் மூலம்வெளிப்படுத்தி யுள்ளார்.. அன்னிய ஆக்கிரமிப்பின் பிடியில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மோடியானோவின் எழுத்துகள் அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன .அதன்மூலம், யாரும் புரிந்து கொள்ள முடியாத உலகுக்கு மனித உணர்வுகளை இட்டுச் செல்லும் கலை நயத்துக்காக மோடியானோவிற்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது என்று ஸ்விடனில் இருக்கும் நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறும் பிரஞ்சு படைப்பாளிகளின் வரிசையில் மோடியானோ 11 ஆவது நபராக இடம் பெறுகிறார்.
காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO) தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும்.