ஒரு குழந்தை, ஓரு ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகை மாற்ற முடியும்”. மலாலா யூசுபுக்கு அமைதிக்கான நோபல்பரிசு

பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனபாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தியா – பாகிஸ்தா எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்தியர் ஒருவருக்கும், பாகிஸ்தானியர் ஒருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள் அமைதிக்கான நோபல் விருது, ஆசிய துணைக்கண்டத்தில் அமைதி ஏற்படுத்த முக்கிய பங்களிக்குமா என்ற கேள்விக்கு ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழுக்கு பதிலளித்துள்ள நோபல் கமிட்டி தலைவரும், நார்வே பிரதமருமான தோர்ஜோர்ன் ஜக்லாண்ட் “சர்ச்சைக்குரிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்த விருது பங்களிக்கும் என்றால் அது வரவேற்கத்தக்கதே” என்றார்.

Continue Reading →

பேசாமொழி 24வது இதழ் வெளியாகிவிட்டது…

பேசாமொழி 24வது இதழ் வெளியாகிவிட்டது...நண்பர்களே மாற்று சினிமா முயற்சிகளை முன்னெடுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 24வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், பல முக்கியமான கட்டுரைகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக, டொராண்ட்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் காக்கா முட்டை படத்தின் இயக்குனர் மணிகண்டனின் நேர்காணல் வெளியாகியுள்ளது. தமிழ் ஸ்டுடியோவின் திரைப்பட பயிற்சி இயக்கமான “படிமை” யின் 3வது அணியை சேர்ந்த மாணவரின் முதல் கட்டுரை இது. இது தவிர, லத்தீன் அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான திரைப்படமான கறுப்பு ஓர்ஃபியூ திரைப்படம் பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், பெர்லின் சுவர் தகர்ப்பு பின்னணியில் வெளியாகியிருக்கும் நோ பிளேஸ் டு கோ படம் பற்றிய யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும், தவறாமல் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.

Continue Reading →

மூத்த எழுத்தாளர் காவலூர் இராஜதுரை நினைவுகள்..!

1_kavaloor_rajaduraiஇலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான காவலூர் இராஜதுரை அவுஸ்திரேலியா சிட்னி நகரில் 14 -ம் திகதி (14 – 10 – 2014) செவ்வாய்க்கிழமை மாலை காலமான செய்தி மனவருத்தத்தைத் தருகிறது. பொதுசனத் தொடர்புத் துறையில் ஈடுபடுவோர் பலர். ஆயினும், அத்துறையின் பலத்தையும் பலவீனத்தையும் மட்டுமல்ல, அதன் நுட்பங்களையும் உணர்ந்து, தம் முத்திரை பதிப்போர் ஒரு சிலரே. அந்த ஒரு சிலருள் ‘பல்கலைவேந்தர்” சில்லையூர் செல்வராசன், காவலூர் இராஜதுரை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இருவரும் இரட்டையர்கள் போன்று மிகுந்த நட்புடன் இயங்கி வந்தவர்கள். ‘விளம்பரத்துறை” என்ற தனது நூலில், ‘விளம்பரத் துறையில் சில்லையூர் செல்வராசன்” என்ற தலைப்பில் காவலூர் இராஜதுரை எழுதியுள்ள கட்டுரை ஊடகத்துறையில் ஈடுபடுவோர்க்கு விளம்பரத்துறை குறித்த தகவல் தரும் சிறந்ததோர் கட்டுரையாகும்.

காவலூர் இராஜதுரையின் கதை வசனத்தில் அவரது மைத்துனர் தயாரித்து புகழ்பெற்ற இயக்குனர் தர்மசேன பத்திராஜா இயக்கிய ‘பொன்மணி” திரைப்படம் இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் கவனத்திற்குரியதாகும். சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் இத்திரைப்படம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத் தயாரிப்பின்போது யாழ்நகரில் காவலூர் இராஜதுரையோடு சில நாட்கள் செயற்பட்டமை ஞாபகத்தில் நிற்கிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக எழுபதுகளில் அவர் கடமையாற்றியபோது ‘கிராமவளம்” மற்றும் கிராமிய நிகழ்ச்சிகளுக்காக, அவருக்கு உதவியாக நெடுந்தீவு, நயினாதீவு, புங்குடுதீவு முதல் வடபகுதியின் பல கிராமங்களுக்கும் சென்று ஒலிப்பதிவுகளை மேற்கொண்டமையும், புங்குடுதீவில் எங்கள் வீட்டில் அவர் தங்கியிருந்து ‘பொன்மணி” திரைப்படத் தயாரிப்புக் குறித்தும் கலை இலக்கிய விடயங்கள் குறித்தும் நிறையவே பேசிக்கொண்டமையும் இன்றும் மனதில் பசுமையாக இருக்கின்றது.

Continue Reading →

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் – பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும் (3)

(3)  பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!

நூல் அறிமுகம்: தேவதாசியும் மகானும் - பெங்களூரு நாகரத்தினம்மா வாழ்வும், காலமும்!- வெங்கட் சாமிநாதன் -கர்நாடக சங்கீத உலகில், பக்தி உணர்வும் செல்வாக்கும் நிறைந்தோர் உலகில் வேறு யாரும் செய்யாத, செய்யத் தோன்றாத ஒரு மகத்தான சேவையை, தியாகராஜ தாசி என்று தன்னைச் சொல்லிக்கொண்ட, எந்தக் கோவிலுக்கும் பொட்டுக் கட்டாதே தேவதாசியாகிவிட்ட நாகரத்தினம்மாளுக்கு அவர் தியாக ராஜருக்கு கோவில் எழுப்பிய பிறகு பாராட்டுக்கள் குவிந்தன தான். அதற்கெல்லாம் சிகரமாக, எனக்குத் தோன்றுவது, கீர்த்தனாச்சார்யார் சி.ஆர். சீனுவாச அய்யங்கார் எழுதிய கடிதம். தங்களது சூழலையும், தாங்கள் கற்பிக்கப்பட்ட ஆசாரங்கள், நியமங்களையெல்லாம் மீறி, எழச் செய்து விடுகிறது, ஆத்மார்த்தமாக உள்ளோடும் அர்ப்பணிக்கப்பட்ட சங்கீதமும், தார்மீகமும்.. அவர் எழுதுகிறார்:

”தென்னிந்தியாவின் லட்சக்கணக்கான் சங்கீத ஆர்வலர்களிடையே நீங்கள் தான் உண்மையான தியாகராஜருடைய சிஷ்யை என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களுக்கு அமைந்த வாய்ப்பை உபயோகித்து நீங்கள் தியாகராஜருக்கு நினைவுச் சின்னத்தை எழுப்பி விட்டீர்கள். ஒரு அரசனும், ஜமீந்தாரும், பாடகரும் செய்யாத ஒன்றை நீங்கள் செய்துவிட்டீர்கள். அதற்காக நாங்கள் எல்லோரும் உங்களை வாழ்த்துகிறோம்.”

Continue Reading →

மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்!

1_kavaloor_rajaduraiஇலங்கையின்   மூத்த  எழுத்தாளரும்  இலங்கை   வானொலியின்  முன்னாள்   நிகழ்ச்சித்தயாரிப்பாளரும் வானொலி ஊடகவியலாளருமான  காவலூர்  ராஜதுரை   நேற்று (14-10-2014)  மாலை   அவுஸ்திரேலியா  சிட்னியில்  காலமானார். இலங்கை   முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினராகவும்  இயங்கிய   காவலூர்  ராஜதுரையின்  கதை வசனத்தில்  வெளியான   பொன்மணி    திரைப்படம்  இலங்கை    தமிழ்த் திரைப்படங்களில்  குறிப்பிடத்தகுந்தது. கொழும்பில்   வசீகரா  விளம்பர  நிறுவனத்தின்  இயக்குநராகவும்  இயங்கிய காவலூர்   ராஜதுரை  பல  வருடங்களாக  அவுஸ்திரேலியா  சிட்னியில் தமது    குடும்பத்தினருடன்    வசித்தார். இங்கு    இயங்கும்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய கலைச்சங்கத்தினதும்   மூத்த  உறுப்பினரான  காவலூர்  ராஜதுரை   சிறுகதை,  விமர்சனம்,    கட்டுரை,   விளம்பரம்   முதலான    துறைகளிலும்    எழுதியிருப்பவர்.    சில  நூல்களின்  ஆசிரியருமாவார்.

Continue Reading →

பிரான்சு: பதின்மூன்றாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

அன்புடையீர்!! அருந்தமிழ்ப் பற்றுடையீர்!! வணக்கம்!  பிரான்சு கம்பன் கழகம் பதிமூன்றாம் ஆண்டுக் கம்பன் விழாவை 18.10.2014 சனிக்கிழமை 14.00 மணியிலிருந்து 20.30 மணிவரையும் 19.10.2014 ஞாயிற்றுக்கிழமை 14.00…

Continue Reading →

நனவிடை தோய்தல்: யாழ் இந்துக்கல்லூரி – சில நினைவுகள்…….

kalaiyarasi595.jpg - 14.84 Kb – யாழ் இந்துக்கல்லூரிச் சங்கம் (கனடா) வருடந்தோறும் நடாத்தும் கலைவிழாவான கலையரசி 2014 நிகழ்வினையொட்டி வெளியான மலருக்காக எழுதிய கட்டுரை. ஒரு பதிவுக்காக இங்கே. –

ஒவ்வொருவருக்கும் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானதும், இனிமையானதுமான பருவம். எத்தனை வருடங்கள் சென்றாலும், மனதில் பசுமையாக இருக்கும் மாணவப்பருவமும், படித்த பாடசாலைகளும் எப்பொழுதுமே அழியாத கோலங்களாக நெஞ்சில் இருப்பவை. பாடசாலையில் மாணவர்கள் கல்வி மட்டும் கற்பதில்லை. கல்வியுடன் விளையாட்டு, வாழ்வின் சவால்களை எதிர்த்து நடைபோடும் ஆளுமையினையும் கூடவே பெறுகின்றார்கள். இதற்கு முக்கியமானவர்கள் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரையில் என் கல்வி எட்டாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்வது வரை யாழ் இந்துக் கல்லூரியிலேயே கழிந்தது. எப்பொழுதும் நெஞ்சில் உவகையினை ஏற்படுத்தும் யாழ் இந்துக் கல்லூரிக் காலம் பற்றி என் சிந்தையிலெழும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் 62: கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....கனடாத் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ்ப் புத்தகக்கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி....‘டொராண்டோ’வில் 300,000ற்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். அரங்கேற்றங்கள், நூல் வெளியீடுகள், விருதுகள் வழங்கும் விழாக்கள் என்று ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகின்றன. என்ன பயன்? டொராண்டோவிலுள்ள நூலகக் கிளைகளுக்கு இங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்களை வாங்கும் வசதிகள் இல்லை. தமிழகத்திலுள்ளதைப்போல் இங்குள்ள நூலகக் கிளைகளுக்கு இங்கு வாழும் எழுத்தாளர்கள் வெளியிடும் நூல்களை வாங்கும் வசதி செய்யப்பட்டால் , அதன் மூலம் எழுத்தாளர்கள் தங்களது நூல்களைத் தொடர்ந்தும் வெளியிடும் நிலை ஏற்படுமல்லவா.  இது போல் மார்க்கம் நகரிலும் நூலகக் கிளைகள் பல உள்ளன. அங்கும் கனடாத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை அந்நூலகக் கிளைகளுக்கு விற்பதற்கு வழி வகைகள் செய்தால் எவ்வளவு நன்மையாகவிருக்கும். ஏன் இதனை இங்குள்ள நூலகங்கள் செய்யவில்லை. பிரச்சினை இதுதான்: இங்குள்ள நூலகங்கள் நூல் வாங்குவதற்குப் பொறுப்பான தமிழ் பேசும் அதிகாரிகளை நம்பியுள்ளன. இவர்கள்தான் இந்த விடயத்தைப நூலகங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்கிறார்களில்லை. ஏன்? அவ்வப்போது இங்குள்ளவர்களின் ஓரிரு புத்தகங்களை வாங்குவதோடு சரி.

Continue Reading →

மரணித்த பின்னும் ஜீவித்திருத்தல் என்பது

2014 செப்டெம்பர் 10இல் நிகழ்ந்த நிர்மலதா -தேவகாந்தன்-   1971 ஆவணி 31இல் பிறந்த நிர்மலதா என்கிற ஒரு பெண்ணின் மரணம், செப்டெம்பர் 10, 2014இல் நிகழ்ந்தது. எல்லோர்வரையிலும் நாள்தோறும் யுத்தங்களினாலும், பட்டினியாலும், நோயினாலும் சம்பவிக்கும் லட்சோப லட்சம் மரணங்கள்;போல் இதுவும் ஒன்றாயினும், அவளது தந்தைக்கு அது அவனது சொந்த மரணமேபோல் சுயத்தின் இழப்பாயிற்று.தாய் தந்தையர், கணவன் மனைவி, சகோதரங்கள், மேலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடையேகூட இவ்வளவு பாதிப்போடு ஒரு மரணம் நிகழ்ந்திருக்க முடியும். அன்பினது ஆழமான வேரூன்றல் என்பதிலிருந்து இந்தப் பாதிப்பு கூடியும் குறைந்துமாய் விளைகிறது. ஒரு நெருங்கிய உறவின் மரணத்தில் கண்ணீரே சிந்தாமல், ஒரு வாய்ச் சொல் அரற்றிப் புலம்பாமல் நொருங்கிப்போனவர்கள் இருக்கிறார்கள். போலவே, அழுது விழுந்து புரண்டு கதறிய பின், சுடலையிலிருந்து அல்லது மின்தகன ‘தோட்ட’த்தினின்று திரும்பிய நாளின் பொழுது விடிந்ததிலிருந்து காதலும் காமமும் இலௌகீகத் தேடல்களுமாய் பிரிவுகளை மறந்துபோனவர்களும் நிறையவே யதார்த்தத்தில் உண்டு.  தந்தையானவன் உடைந்து நொறுங்கியது பெற்ற மகளென்ற பாசத்தில் மட்டும் உருவானதில்லை. தான் தவறவிட்ட அடைவுகளை அவளே தன் சுயபலத்தில் நிறைவேற்றிக்கொண்டிருந்தாள் என்பதனாலுமாகும்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

நூல் அறிமுகம்: ஆனாலும் திமிருதான் அவளுக்கு கவிதைத் தொகுதி பற்றிய ஒரு சிறப்புப் பார்வைஇலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்த காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எம்.எஸ். அப்துல் மஜீத் என்பவர். இவர் பெரும்பாலும் தனது கவிதைகளை மதியன்பன் என்ற புனைப்பெரிலேயே எழுதிவருகின்றார். காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் 97 பக்கங்களில் 36 பக்கங்களை உள்ளடக்கியதாக  “ஆனாலும் திமிருதான் அவளுக்கு“  என்ற மகுடத்தில் அமைந்த தனது கன்னிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இந்தத் தொகுதியிலுள்ள அனைத்துக் கவிதைகளும் ஏற்கனவே பத்திரிகைகள், வானொhலிகள், இணையத்தளம், முகநூல், மதியன்பனின் வலைப்பூ போன்றவற்றில் வெளிவந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. 

தான் வாழுகின்ற சமூகத்தில் காணுகின்ற பிரச்சினைகளை கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்காமல் அதனை துணிவோடு யதார்த்தபூர்வமாக மக்கள் மயப்படுத்துவதே ஒரு கவிஞரின் தார்மீகப் பொறுப்பாகும் என்ற கூற்று கவிஞர் மதியன்பனுக்கும், அவரது கவிதைகளுக்கும் மிக மிகப் பொருந்திப் போகின்றது. ஏனெனில் இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகள் இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் அடக்குமுறைகளை, அட்டூழியங்களை, அநியாயங்களைப் படம்பிடித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளன.

Continue Reading →