வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்!

உமாமஹேஸ்வரி- வெங்கட் சாமிநாதன் -உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.

நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது.  கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு.  தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று  அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான்.

Continue Reading →

சிறுவர்கள் ரசனை வளர்க்கும் திரைப்படங்கள் திரையிடல் – 5

நாள்: 07-12-2014, ஞாயிறு, மாலை 5.30 மணிக்கு.இடம்: சாதனா நாலெட்ஜ் பார்க், பிளாட் நம்பர் 367, 32வது தெரு, 6வது செக்டார், கே.கே. நகர் தொடர்புக்கு: 7299855111…

Continue Reading →

கனடா: எழுநாவின் புத்தகங்களின் அறிமுகநிகழ்வு!

எழுநா ஊடக நிறுவனத்தின் 3 புத்தகங்களின் அறிமுகநிகழ்வினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறும். இடம் – Don Montgomery CRC 2467 Eglinton Avenue…

Continue Reading →

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

Continue Reading →

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள்; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானி

டிசம்பர் -4 ந.பிச்சமூர்த்தி நினைவுநாள் ; ந.பிச்சமூர்த்தி என்கிற மாயக்கலைஞானிஓட்டோடு ஒட்டிஉறவாட மனமில்லாமல் ஓட்டைவிட்டு ஒதுங்கி நிற்கும் புளியம்பழம் போல் வாழ்க்கையை ஒட்டியும் ஒட்டாமலும் முன்னிறுத்திப் பார்க்கின்றன ந.பிச்சமூர்த்தியின் இன்சுவைக் கவிதைகள். தொலைந்ததைத் தேடும்போதுதான்,  தொலைத்தும் தேடாத பலவும் கிடைப்பதைப் போல் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளுக்குள் கவித்துவம்,மனிதம், நம்பிக்கை ஆகியவற்றைத் தேடும்போது நாம் தேடினாலும் கிடைக்காத பல பொக்கிஷங்கள் காணக் கிடைக்கின்றன.  காணாமல்போனவனைத் தேடிப்போனவனும் காணாமல்போன கதையாய் ந.பிச்சமூர்த்தியைப் படிக்கும் வாசகன் அவர் கவிதைவெளிக்குள் காணாமல் போகிறான்.அறிமுகமாகாத இடத்திற்குள் நுழைந்துவிட்ட ஒருவன் அந்த இடத்தைவிட்டகல அவசரமாய் நுழைவாயிலைத் தேடித் தவிப்போடும் தயக்கத்தோடும் நகர்கிற உணர்வை ந.பிச்சமூர்த்தியின் கவிதைகள் ஏற்படுத்துகின்றன.மகாகவி பாரதியின் வசனகவிதை வடிவமுயற்சிகளும், வால்ட்விட்மனின் ‘புல்லின் இதழ்களும்’  ந.பிச்சமூர்த்தியின் புதுமைமுயற்சிகளுக்குக் காரணமாக அமைந்தன. யாப்பின் அழகில் இலயித்துக் கவிதைகள் படைத்த  ந.பிச்சமூர்த்தி, வசனகவிதைகள் படைத்தபோதும் அவற்றையும் ஓர் வடிவஒழுங்கோடே படைத்தார்.இருள்மண்டிக்கிடந்த பரந்த வெளியில் திடீரெனக் குறுக்கே பாய்ந்து பரவசப்படுத்தும் மின்மினிப் பூச்சியாய் சிலருக்கு ந.பி.தெரிந்தார்.இடியோடு இணைந்து வந்து வானத்தைக் கீறியபடி சட்டென்று  வெட்டிச்செல்லும் மின்னலாய் சிலருக்குத் தெரிந்தார்.உண்மையில் தேடல் மிக்க கலைஞானியவர்.

Continue Reading →

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)

யாமினி கிருஷ்ணமூர்த்தி (2)- வெங்கட் சாமிநாதன் -எனவே, இத்தகைய மாறுபட்ட பத்ததிகள், மரபுகள் கொண்ட ஒரே வேரிலிருந்து கிளர்ந்த பல நாட்டிய ரூபங்களைப் பார்க்கும் போது, பரத நாட்டியம் அதன் கண்டிப்பும் நுணுக்கமும் நிறைந்த விஸ்தாரமான, கண்கள், முகம், கைகள் என எல்லா  அவயவங்களும்  கொண்டு வெளிப்படுத்தப் படும் முத்திரைகள், அபிநயங்கள், பின் சாரிகள், அடவுகள் அவை தரும் எண்ணற்ற வேறுபட்ட பாவங்கள், செய்திகள் எல்லாம் சங்கீதத்தோடும், அவற்றுக்குரிய தாளத்தோடும் அவ்வப்போது தாளம் கொள்ளும் வேறுபடும் கால ப்ரமாணங்கள் எல்லாம் ஒத்திசைந்து ஓருருக்கொண்டு நம் முன் காட்சி தரும்போது, இது எத்தகைய ஈடு இணையற்ற கலை வெளிப்பாடு, இதற்கு ஒத்த நடனக்காட்சி வேறு எங்கு காண்போம் என மலைக்க வைக்கும் ஒன்று பரதம். இன்னமும் சொல்லப் போனால், இதன் தொன்மை, இடையறாது, தொடர்ந்த மரபு இந்திய கலைகள் பலவற்றைத் தன்னுள் இணைத்துக் கொண்டு ஓருருப் பெற்றுள்ளது என பரதத்தைச் சொல்ல முடிவது போல வேறு ஒன்று இல்லை என்று  நான் சொன்னால் அது தமிழ் வெறியிலோ, பிரதேசப் பற்றினாலோ, சொல்லப்படுவது அல்ல. ஒரு தீர்க்கமும், ஆழமும் கொண்ட கலைப்பார்வை, அது மொழி இன, பிரதேசப் பற்று எதனாலும் அலையாடப்படாத உணர்வு கொண்டதென்றால், அதன் முன் காட்சி தரும் பரதமும் அதன் முழு அழகிலும் வெளிப்படுத்தப்படும் ஒன்றெனில், நான் சொல்வதன் பொருளை அப்பொருளின் உண்மையைப் புரிந்து கொள்ளும். அப்படி ஒரு காலத்தில், ஒவ்வொரு சமயங்களில் அது இருந்தது. அது பற்றிச் சற்றுப் பின்னர்.

Continue Reading →

நினைவேற்றம்: முனை 3

 -தேவகாந்தன்-   பனி  புகட்டினால், மழையிலே நனைந்தால், வெய்யில் பட்டால், தூசிக்குள் நின்றால் என எதற்குமே தும்மல் வந்து, தடிமனாக்கி, காய்ச்சலும் இருமலும் பிடித்துவிடுகிற ஒரு நோஞ்சான் பிள்ளையாகவே என் சின்ன வயது இருந்திருக்கிறது. இது காரணமாகவே அண்டை அயல் வீடுகளிலே போய் விளையாட நான் அனுமதிக்கப்படவில்லை என் பெற்றோரால். சாதிபற்றிய காரணம் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் தரத்ததாகவே இருந்தது. பாடசாலை மெய்வல்லுநர்ப் போட்டிகளில் பங்குகொள்வது அது தேடிச் சென்று பங்குபற்றுகிற சூழ்நிலையில் அமையாததில் அதற்கு நான் அனுமதிக்கப்பட்டேன். இருந்தும் பத்து வயதுவரை என்னால் பெரிதாக எதனையும் செய்யமுடியவில்லை, இந்த வருத்தக்கார உடம்பு இருந்த காரணத்தால்.

இந்தா, இந்தமுறை விளையாட்டுப் போட்டியில் யூனியர் பிரிவில் சம்பியன் ஆகாவிட்டாலும், இவனுக்கு எப்படியும் நூறு யார் ஓட்டத்திலோ, நீளம் பாய்தலிலோ முதலாம் அல்லது இரண்டாம் பரிசுகள் கிடைத்துவிடும் என்றிருக்கிற நிலையில், விளையாட்டுப் போட்டியிலன்று நான் சுகவீனமாகி எழும்பமுடியாது கிடந்த சம்பவங்கள்தான் என் வாழ்வில் அதிகமும் நேர்ந்திருக்கின்றன.

Continue Reading →

கோவை இலக்கியச் சந்திப்பு 48: அ.முத்துலிங்கம் குறித்த இரு நூல்கள் வெளியீடு

அ.முத்துலிங்கம்30/11/14 ஞாயிறு காலை 10 மணி : நரசிம்ம நாயுடு மேல்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவையில் சுப்ரபாரதிமணியன் தொகுத்த அ.முத்துலிங்கம் குறித்த  இரு நூல்கள் வெளியீடு நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் 2 நூல்களை வெளியிட ஈரோடு சந்திரு, கோவை நித்திலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சுப்ரபாரதிமணியன் :  “  எல்லோருக்கும் இது வாய்க்காது. முத்துலிங்கத்திற்கு கிடைத்திருக்கும் இந்த ரச வாத  வித்தை தமிழுக்கு பெரிய கொடை.  இலங்கைக்காரர் என்றால் ஈழ தேசிய இனச் சிக்கல் சம்பந்தமாக விசயங்கள் இல்லாமல் இருக்க முடியாது.  இதில் உள்ள பல கட்டுரைகளில் இலங்கை இனக் கலவரச் சம்பந்தங்கள் உள்ளன.அகதிகளின் அவலம் இருக்கிறது. தனி ஈழம் தாகம் தென்படுகிறது.  இவற்றியெல்லாம் ஒரு எழுத்தாளன் பதிவு செய்யும்  பக்குவம் தெரிகிறது.  அரசியல் சார்ந்தோர் அவற்றை சொல்வதைக் காட்டிலும் எழுத்து ரசனையில்  நல்ல பதிவாகி விடுகிறது. 

Continue Reading →

‘தமிழ்ஆதர்ஸ்.காம்’ வெளியிடும் செட்டியூர் ‘ பசுந்திரா சசி ‘ யின் ” கட்டடக்காடு ” நாவல் அறிமுக விழா!

'தமிழ்ஆதர்ஸ்.காம்' வெளியிடும்  செட்டியூர் ' பசுந்திரா சசி ' யின்  " கட்டடக்காடு "  நாவல் அறிமுக விழா!நிகழ்ச்சி நிரல்:
மங்கல விளக்கேற்றல்:
தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை:​​ புலவர் திரு சோம சச்சிதானந்தன் . சைவத் தமிழ் ஆன்மீக சேவையாளர்.
ஆசியுரை: ​ எஸ்.சிவநாயகமூர்த்தி தலைவர் (கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்)
வாழ்த்துரை: ​​ கவிஞர் அ. பகீரதன்

தலைமையுரை: வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
நூல் ஆசிரியர் அறிமுகம்: எழுத்தாளர் அகில்
திறனாய்வு: முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்

Continue Reading →

கவிதை: இனிப்புக்குள் இருக்கும் உப்பு

கவிதை வாசிப்போமா?

எனது பயணம்
தொடங்கிய பிறகுதான்
பாதையைப் பார்க்கின்றேன் –
பாதிக்கும் மேல் புற்கள்
ஆனாலும்
பாதிக்கும் என்று தோன்றவில்லை!

தொடர்ந்ததென் பயணம் – உடனே
உணர்ந்ததென் பாதம்
புற்களின் ஊடாக
கற்கள் – இடையில்
படர்ந்த நெருஞ்சி
முட்கள்!

Continue Reading →