வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ
வாசலருகே மலர்ச்செடியின்
பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே
கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ
அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு
பாடப்படப்போகும் போதனை கீதங்களை
கொழும்புக்குச் சென்று
அப்பாவிடம் உரைப்பீரோ
– 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை –
மதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும் கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர் பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.
“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”
என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.
– 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை –
மதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும் கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர் பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.
“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”
என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.
படைப்பின் முதிர்வு மனிதன்
மனிதனின் முதிர்வு மொழி
மொழியின் முதிர்வு கவிதை- என்று நாம் விரும்புவது
உண்மையாகவோ உண்மைக்கு மிக அண்மையிலோ இருகிறது. – வைரமுத்து
கவிதையை நான் ஏன் எழுத விழைந்தேன்.? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது? கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிறபோதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறோம். இல்லையெனில் அவை தோன்றா நட்சத்திரங்களாக, விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக்கிறான். இயற்கையும் கவிஞனைப்பார்த்திருக்கிறது.; கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு , தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது; எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது. “நிலையாமையே நிலைத்தது” என்ற உண்மையை குறுந்தொகையில் (143)குறிப்பட்டதுபோல் நாம் மாறியிருக்கவேண்டும். நாம் மாறியிருந்தால் நம் படைப்பும் மாறியிருக்கும். நிலையாக இருந்தால் நாம் மரமாக இருந்துவிடுவோம். மனிதனாக இருக்கவேண்டும். அதே மரத்திலிருந்து அதே காய், அதே கனி. அதே செடியிலிருந்து அதே வண்ணத்தில் அதே பூ, அவ்வளவுதான். தேரடித்தேராக நின்றுவிடுவோம்; நிலைத்துவிடுவோம் . ‘நிலையாக’ என நான் குறிப்பிடுவது சிந்தனைத்தேக்கத்தை. அண்மையில் கவிஞர் சிற்பியின் ‘பூஜ்ஜியங்களின் சங்கிலி’ கவிதைத்தொகுப்பைப் படித்தேன் அதில் கிரேக்க முனி ஹெராக்ளிடஸ் “ நீ உன் கால்களை
கவிஞர் சோ. பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த ஈழக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளடங்கிய Sri Lankan Tamil Poetry – An Anthology என்ற (தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட)…
நண்பர்களே, பேசாமொழி இணைய இதழின் 31வது இதழ் இன்று வெளியாகியிருக்கிறது. இனி ஒவ்வொரு மாதமும் மிக சரியாக 1ஆம் தேதி இதழ் இணையத்தில் வெளியாகும். பேசாமொழி இனி…
இலங்கையில் சீகிரியா சுவரின் மீது அறியாமையின் காரணமாக தமிழ்ப் பெயரைக் கிறுக்கிய இளம் ஏழைத் தமிழ்ப் பெண்ணுக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறித்து,…
‘கதை’ என்ற சொல்லுக்கு சிறுகதை, குறுங்கதை, தொடர்கதை, பெரியசரித்திரம், காப்பியம், சிறு காப்பியம், சென்றகால வரலாறு, கட்டுக்கதை, உரையாடல், மனத்தை நெகிழ வைக்கும் கதை, நிகழ்வொன்றினைக் கற்பனை கலந்து சுவைபடக் கூறுவது, நிகழ்ச்சி, செய்தி, கட்டுரை, நிகழ்ச்சி விவரம், விரிவுரை, விளக்கம், நொடிக்கதை, உபகதை, சாட்டுரை, புனைவுரை, பழங்கதை, புனைகதை, அருங்கதை ஆகியவற்றைப் பொருளாகக் கூறுவர். மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு நூல்களும் பாரதநாட்டின் இரு கண்கள். இவ்விரு நூல்களும் உலகம் போற்றும் ஒப்பற்ற இதிகாசங்கள். இதிகாசம் என்பது பழங்காலச் சரித்திரம். இதிகாசம் என்பதின் பொருளே ‘இவ்வாறு நடந்தது’ என்பதாகும். மகாபாரதம், இராமாயணத்தை விடப் பெரியது. இதில் ஓர் இலட்சம் சுலோகங்கள் உள்ளன. ஆனால் இராமாயணம் காலத்தால் முந்தியது. மனிதகுல தர்மங்களை, வாழ்வியல் நீதிகளை, அறநெறிகளை வியாச பகவான் மகாபாரதம் வாயிலாகவும், வால்மீகி இராமாயணம் வாயிலாகவும் வழங்கியுள்ளனர்.
இன்னும், சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. அதுபோலவே சங்கமருவிய காலத்திலெழுந்த திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னிலை (இதைச் சிலர் சேர்ப்பதில்லை) ஆகிய பதினெட்டு நூல்கள் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கலாயிற்று. இவைகளும் சங்க இலக்கியங்களே. இவ்வாறான முப்பத்தாறு (36) நூல்களையும் சங்க இலக்கியங்கள் என்று கூறிப் பெருமைப்படுபவன் தமிழனே. இவற்றையடுத்து எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகிய ஐந்து பெரும் நூல்களையும் ஐம்பெரும் காப்பியங்கள் என்றழைத்தனர். மேலும், சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாககுமார காவியம், உதயகுமார காவியம் ஆகிய ஐந்து சிறு நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைத்தனர்.
” சிங்கப்பூர் இளையர்கள் அரசியலில் பிரதிநிதித்துவம் ஏற்று தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை தமிழ் பேசும் மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் ” – சிங்கை இளம் தலைமுறையின் குரல்
ஊஞ்சல் கொண்டுபோய் எறிந்த எங்கள் உலகம்
சிவந்த தும்பிகளின்
கண்ணாடிச் சிறகைப்போல்
எதிலெதிலோ மோதிச்சிதைந்தது – அனார்
இலங்கைப்பயணத்தின் வழியில் சில காட்சிகள்
தாயகத்தில் – இல்லை… இல்லை ….இரவல் தாய் நாட்டில் மீண்டும் ஒரு தொடர்ச்சியான பயணத்துக்கு தயாரானேன். நான் நீண்ட காலமாக அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் சில முக்கிய பணிகளுக்காக என்னை இந்த அமைப்பு அனுப்பிவைத்தது. 2015 முற்பகுதியில், அதாவது கடந்த ஜனவரி மாதம் செல்லவேண்டும் என்றுதான் முதலில் தீர்மானம் இருந்தது. ஆனால், ஜனவரி 8 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதித்தேர்தல். இலங்கையில் , குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் தேர்தல் வருகிறது என்றால் அக்காலப்பகுதியில் அங்கு பயணிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும் என்பது எழுதப்படாத விதியல்லவா…? அரசும் அதிகார பீடமும் மாறுவது வீடு மாறுவதற்கு ஒப்பானதாக என்றைக்கு நடைபெறும் என்பது வெறும் கனவுதான் அவுஸ்திரேலியாவில் அரசு தேர்தலில் மாறும்பொழுது வீடு மாறிச்செல்லும் உணர்வுதான் வருகிறது. இலங்கையில் இம்முறை ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டதுதான் பெரிய நிம்மதி. இல்லையேல்…. வழக்கம்போன்று சிறுபான்மை இனத்தவரின் தலையில்தான் விடிந்திருக்கும். முன்பெல்லாம் எனது சொந்தச்செலவில் விமான டிக்கட் பெற்றுச்சென்றேன். ஆனால், தற்பொழுது தொழிலும் இல்லாமல் மருந்து மாத்திரைகளுடனும் இன்சுலினுடனும் அல்லாடிக்கொண்டிருக்கையில் வழங்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றவேண்டும் என்ற கடமை உணர்வே முன்னின்றது.
– புகைப்படத்தில்: கலாநிதி நா. சுப்பிரமணியன், வைத்திய கலாநிதி லம்போதரன், விசேட பிரதியைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளர் அகில் – |
சர்வதேச எழுத்தாளர்களை மட்டுமல்ல, குழுசார் நிலையில் இயங்கிவந்த கனடிய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை அறிந்தோ அறியாமலோ ஈழத்துப் புலம் பெயர் இலக்கியச் சிறப்பிதழ் மூலம் ஒன்று சேர்த்த பெருமை தாய்மண்ணில் இருந்து வெளிவந்த இந்த ஞானம் மலருக்கே உண்டு. கனடிய சிறுகதை எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அ. முத்துலிங்கம், யோகா பாலச்சந்திரன், தேவகாந்தன், குமார் மூர்த்தி, க.நவம், சக்கரவர்த்தி, திருமாவளவன், குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், சுமதி ரூபன், வீரகேசரி மூர்த்தி, மனுவல் ஜேசுதாசன், ஸ்ரீ ரஞ்சனி, துறையூரான், கடல் புத்திரன், மெலிஞ்சிமுத்தன், இளங்கோ, வசந்திராஜா ஆகியோரது சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது. இந்த மலரில் தற்போது கனடாவில் வசிக்கும் மூத்த பெண் எழுத்தாளர், அன்று வீரகேசரியில் எஸ்.பொ.வுடன் சேர்ந்து ‘மத்தாப்பு’ எழுதிய குறமகளின் (வள்ளிநாயகி இராமலிங்கம்) சிறுகதை தவறவிடப்பட்டிருப்பதை முக்கியமாக அவதானிக்க முடிந்தது. மிகவும் கவனமாகவும் சிறப்பாகவும் தயாரிக்கப்பட்ட இந்த மலரில் சில கட்டுரைகள் அரைத்த மாவையே அரைப்பது போல ஒன்றையே திரும்பத்திரும்ப சொல்கின்றன. பழைய பல்லவியையே பாடுகிறார்கள் என்பதும், விரிந்து பரந்த இந்த இலக்கிய உலகில் அவர்களிடம் புதியதேடுதல் இல்லை என்பதும் மிகவும் தெளிவாகப் புரிகின்றது. பயமா அல்லது பக்தியா தெரியவில்லை. இதைப்பற்றிய தனது கருத்தை இணையப் பத்திரிகையான பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் அவர்கள் குறிப்பிடும் போது, ‘ஆவணப்படுத்தல் என்பது மிகவும் முக்கியமானதொரு விடயம். எந்தவித ஆவணப்படுத்தல்களுமின்றி, ஆய்வுக்கட்டுரைகள் படைக்கும் பலர் தமக்குக்கிடைக்கும் படைப்புகளை மட்டும் படித்துவிட்டு, பல படைப்புகளைப் படித்துவிட்டு எழுதுவது போன்றதொரு தன்மை தெரியும் வகையில் எழுதிவருகின்றார்கள். இவர்கள் இவ்விதம் எழுதுவதன் மூலம் உண்மைகளைக் குழி தோண்டிப்புதைக்கின்றார்கள்.’ என்று பதிவுகளில் குறிப்பிட்டிருந்தார்.