அஞ்சலி: சாந்தி சச்சிதானந்தம் பற்றிச் சில நினைவுகள்…

சாந்தி சச்சிதானந்தம் நாடறிந்த சமூக சேவையாளர்; எழுத்தாளர். விழுது அமைப்பின் ஸ்தாபகர். இலங்கையிலேயே தொடர்ந்தும் தங்கியிருந்து பெண்களின் உரிமைக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடி வந்தவர். இவரை எனக்கு 1978இலிருந்து தெரியும். என்னுடன் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றவர். இவரது தந்தையார் சச்சிதானந்தம்தான் லங்கா சமசமாஜக் கட்சி சார்பில் 1970இல் நல்லூர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர். சிறிது காலத்தின் முன்புதான் என் முகநூல் நண்பர்களிலொருவராக இணைந்து கொண்டார். இவரது திடீர் மறைவு யாரும் எதிர்பாராதது. நீண்ட நாள்களாக இவர் நோய்வாய்ப்பட்டிருந்த விடயமே இவரது மறைவினையொட்டி வெளியான செய்திகளின் வாயிலாகவே அறிந்துகொண்டேன். இவரது திடீர் மறைவானது பழைய நினைவுகள் சிலவற்றை அசைபோட வைத்துவிட்டது.

மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் எங்கள் வகுப்பில் இவர் ஒருவரே தமிழ்ப்பெண். மிகவும் துணிச்சல் மிக்கவர். மிகவும் இனிமையாகப்பாடும் குரல் வளம் மிக்கவர். மொறட்டுவைப்பல்கலைக்கழக நிகழ்வுகளில் தமிழ்த்திரைப்படப்பாடல்களைப்பாடி அனைவரையும் கவர்ந்திருக்கின்றார். பெண் உரிமை பற்றி அக்காலகட்டத்திலேயே தீவிரமாக வாதிடுவார். மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்தில் நான் இதழாசிரியர் குழுத்தலைவராக இருந்தபொழுது இவர் சங்கத்தின் உபதலைவராகக்கடமையாற்றினார்.

ஒருமுறை எம் வகுப்பைச்சேர்ந்த சிங்கள, தமிழ் மாணவர்கள் அனைவரும் ‘மலைநாட்டிலிருந்த World’s Endற்குச் சுற்றுலா சென்றிருந்தபொழுது இவரும் வந்திருந்தார். இவர் பொதுவாக மாணவர்களின் சுற்றுலாக்களுக்கு வருவதில்லை அந்த ஒரு சுற்றுலாவைத்தவிர.

அவ்வப்போது நாம் ஓய்வாகக்கூடியிருக்கும் வேளைகளில் மட்டக்களப்பைச்சேர்ந்த மோகன் அருளானந்தனையும், இவரையும் பாடல்களைப்பாடச்சொல்லி வற்புறுத்துவோம். ‘அமுதைப்பொழியும் நிலவே’ பாடலை மிகவும் இனிமையாகப்பாடுவார்.

Continue Reading →