ஆய்வு: இசையறிவியலும் இராகங்களும்

எழுத்தாளர் க.நவம்இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.

இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே  இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன.  ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும்,  பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

Continue Reading →

அயல் மொழிச்சிறுகதை: நெய்ப்பாயசம்

கமலாதாஸ்நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்… என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே  இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?”  அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை.

Continue Reading →

ஆய்வு: நான்மணிக்கடிகை உணர்த்தும் தனிமனித நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
தமிழகத்தில்  சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்

சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி  தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.

Continue Reading →

ஆய்வு: ‘செடல்’ பாத்திரப் படைப்பு – ஆய்வு நோக்கில் ஒரு பார்வை

 - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது 2015: ( கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை…

Continue Reading →