பத்தி 10 :இணையவெளியில் படித்தவை

குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை”

எழுத்தாளர் குட்டி ரேவதி!எழுத்தாளர் சத்யானந்தன்கீற்று இணைய தளத்தில் வெளியான குட்டி ரேவதியின் கவிதை “சாம்பல் பறவை” கவிதைக்கான இணைப்பு — இது.

சின்னஞ்சிறிய கவிதை. கவிதையின்  பெரும்பகுதி நேரடியானது. ஒரு இளம் பெண் தனது நம்பிக்கைகளையெல்லாம் குவித்து ஒரு இளம் பெண் காத்திருக்கிறாள் தனது காதலனுக்காக. அவளது எதிர்பார்ப்புக்கள், மனதில் பொங்கும் உற்சாகம் இவை ஒரு பெண்ணின் தரப்பிலிருந்து மிகவும் நுட்பமாகவும் அழுத்தமாகவும் தரப்பட்டிருக்கிறது. சரி நான் இதை எந்த அளவு புரிந்து கொள்வேன்? அனேகமாகப் புரிந்து கொள்ளவே மாட்டேன். ஏனென்றால் நான் ஆண். தனது காதலனை எந்த அளவு ஒரு காதலி தன் வாழ்க்கையின் மையமாக்கி, அர்ப்பணிப்புடன் அவனே யாவுமாக ஒரு வாழ்க்கையைத் தொடங்க விரும்புவாள் என்பது எனக்குப் புரிதலுக்கான ஒன்று அல்ல. என் காதலி என்னிடம் அப்படித்தான் இருக்கிறாள் என்பது கூட எனக்கு ஒரு பொருட்டல்ல. என்ன? பெண்களின் உணர்வுகள் தானே ஆண் புரிந்து கொள்ளும் கட்டாயம் என்ன இருக்கிறது என்பதே காரணம்.

அதே சமயம் குட்டி ரேவதி ஒரு எளிய காதல் கவிதையை எழுத இந்தக் கவிதை வழியாக முயலவில்லை என்பதே இதை வாசிப்பதில் நாம் கவனப்படுத்திக் கொள்ள வேண்டியது. கவிஞர் ஒரு இளம் பெண்ணின் உற்சாகத்துக்குப் பின் இருக்கும் மன எழுச்சியை மட்டும் சுட்டிக் காட்ட விரும்பவில்லை. அவர் அந்தப் பெண்ணுக்காகக் காத்திருக்கும் நிச்சயமின்மையை, அவளது பரிபூரண அர்ப்பணிப்பு எதிர் கொள்ளப் போகும் அடக்குமுறைகளையும் சேர்த்தே சொல்ல விரும்புகிறார். கவிதையின் துவங்கு பத்தியையும் இறுதி பத்தியையும் இதற்கான பதிவுகளாகத தருகிறார்.

Continue Reading →