ஆய்வு: ‘செடல்’ பாத்திரப் படைப்பு – ஆய்வு நோக்கில் ஒரு பார்வை

 - ஞா. ஜீலியட் மரிய  ப்ளோரா, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி  (தன்னாட்சி), கோயம்புத்தூர் – 641018 -சிறு வயதிலேயே பொட்டுக்கட்டப்பட்டு, தாசியாக வாழ மறுத்து, பெரும் போராட்டத்தையே வாழ்க்கையாக வாழ்ந்து தீர்க்கும், தாழ்த்தப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையே ‘செடல்’ புதினமாகும். இப்புதினத்தின் முதன்மைக் கதை மாந்தர் செடல். நட்டுவன் குலம், கூத்தாடிச் சாதியைச் சேர்ந்த இவள், அக்குடும்பத்தின்  எட்டாவது பெண்பிள்ளை. மழை பெய்ய வேண்டும் என்ற ஊர் நன்மையைக் காரணம் காட்டி, பழைய பஞ்சாங்கத்தை நம்பிக் கொண்டு, ஊரிளுள்ளோரின் வற்புறுத்தலினாலும், மேல் குடியினரின் அதிகாரத்தினாலும் செடல் பொட்டுக்கட்டி விடப்படுகி றாள். 

வாழ்வு நிலையைக் கூறவந்த ஆசிரியர் இமையம், பாத்திரத்தின் பண்புகளை ஒரு உத்தியாக பயன்படுத்திள்ளார். செடல் தன் நிலைக்கேற்ப தன்னுடைய பண்புகளை மாற்றி வாழப் பழகிக் கொள்கிறாள். பொட்டுகட்டியபின் தன் வீட்டிற்குச் செல்கையில் அவள் திருப்பி அனுப்பப்படுவதும், வறுமையின் காரணமாக அவளுடைய குடும்பம் கண்டிக்குக் கப்பலேறுவதும் அவள் தனிமைப்படுத்தப்படுவதை உணர்த்துகின்றன.

வயதுக்கு வந்த அன்று மழைக் கொட்ட, இரவில் வீடு இடிந்து விழ, உடல் நோவுடன், துணைக்கு யாருமற்ற தனித்த சூழலில் ‘உயிரோடு ஏன் இருக்க வேண்டும்?’ என்ற வினா எழ, கதறி அழுகிறாள்.  ஆழ்மனத்தின் வெளிப்பாடான வாழ்வு உந்துதல், அழிவு (சாவு) உந்துதல் என்ற இரு நிலைகளில, அவள் அழிவு உந்துதல் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். “அதிர்ச்சி தரத்தக்க துன்பமான நிகழ்வுகளை உள்ளம் மீட்டுருவாக்கம் செய்கின்றது. நடந்த முடிந்த நிகழ்வை மீண்டும் மீண்டும் நினைவு கூறும் பொழுது உள்ளம் தாங்கும் சக்தியினை இழந்து சாவினை நோக்கிச் செல்கிறது.” 1 என்ற ப்ராய்டின் உளவியல் கொள்கை இங்கு செடலின் சூழலுக்குப் பொருந்தி நிற்கிறது.

Continue Reading →

திருப்பூர் இலக்கிய விருது 2015: ( கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)

பரிசு பெற்றோர்: 1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை…

Continue Reading →

திரு ‘குடிவரவாளன்’ இன்று கனடா வந்து சேர்ந்தார்!

வ.ந.கி

தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளியான எனது நாவலான ‘குடிவரவாளன்’ நாவலில் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இன்று கிடைக்கப்பெற்றேன், நான் எவ்விதம் என் நாவல் வெளிவர வேண்டுமென்று விரும்பினேனோ அவ்விதமே அட்டைப்படம் முதல், நூலின் வடிவமைப்பு வரை அமைந்திருப்பது மகிழ்ச்சியினைத்தருகின்றது. நூல் இவ்விதம் வெற்றிகரமாக வெளிவருவதற்கு இணையம் மிகவும் கை கொடுத்தது என்றுதான் கூற வேண்டும். நூலின் ஆரம்ப நிலையிலிருந்து, வெளியாகும் வரையில், ஓவியா பதிப்பக உரிமையாளர் திரு. வதிலைப்பிரபா அவர்கள் அலுக்காமல், சலிக்காமல் என் கருத்துகளை உள் வாங்கி, விவாதித்து வந்துள்ளதை இத்தருணம் நினைத்துப்பார்க்கின்றேன். இவ்விதமான கருத்துப்பரிமாறல்கள் இந்நூல் சிறப்பாக வெளிவந்திருப்பதற்கு மிகவும் உதவியிருக்கின்றன.

FedEx ‘கூரியர்’ மூலம் வதிலைப்பிரபா 20.03.2016 அன்று அனுப்பிய புத்தகப்பொதி , இன்று 24.03.2016 என் கைகளை வந்தடைந்தது. அனுப்பியதிலிருந்து எனக்குக் கிடைக்கும் வரையிலான அதன் வரலாற்றை இணையத்தின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாகவிருந்தது. உலகமயமாக்கலின் பாதக விளைவுகளுக்கு மத்தியில் இவ்விதமான நன்மைகளுமுள்ளன.

கனடா நண்பர்கள் கவனத்துக்கு:
இந்நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com

தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 163: அம்மாவின் நினைவாக…;தமிழ்வாணன்: தன்னம்பிக்கையின் சிகரம்!:கவிதைப்பிரியர்களுக்கோர் சஞ்சிகை: மகாகவி!

திருமதி நவரத்தினம்1. அம்மாவின் நினைவாக…

அவர் ஓர் ஆசிரியையாக விளங்கியவர். யாழ் இந்துக்கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி, வவுனியா மகா வித்தியாலயம் மற்றும் அராலி இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் ஆசிரியையாகக் கடமையாற்றியவர். ‘நவரத்தினம் டீச்சர்’ என்றால் தான் அவரைப் பலருக்குத்தெரியும். யாழ் இந்து மகளிர் கல்லூரிக் காலகட்டத்தைச்சேர்ந்த அவரது சக ஆசிரியர்களுக்கு அவரை ‘மங்கை’ அல்லது ‘மங்கையற்கரசி’ என்றால்தான் தெரியும். அதுதான் அவரது வீட்டுப்பெயர். ஆனால் அவரது இயற்பெயர் மகேஸ்வரி. அது யாருக்குமே தெரியாது. கண்டிக்கவே தெரியாத ஆசிரியர்களில் அவருமொருவர். புவியியல், ஆங்கிலம் மற்றும் Home Science ஆகிய துறைகளில் பாடங்களை அதிகமாகக் கற்பித்தவர்.

வவுனியாவில் இருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலைகளில் நேரத்துடன் எழுந்து, அனைவருக்கும் உணவு தயாரித்து, மதிய நேர உணவினை அனைவருக்கும் தயார் செய்வார். அதிகாலைகளில் நாங்கள் குழந்தைகள் அனைவரும் அவர் பின்னால் கோழிக்குஞ்சுகளாகச் சென்ற காலைகள் இன்னும் பசுமையாக நினைவிலுள்ளன. மாலை நேரங்களில் வீடு திரும்பும்போது நான் என் நண்பர்களுடன் திரும்பி விடுவேன். ஆனால் காலைகளில் பாடசாலை செல்லும்போது அவருடனேதான் செல்வதுண்டு.

நன்கு பாடும் திறமை மிக்கவர். சிறுவயதில் அவர் பாடும் பாரதியார் விடுதலைக்கீதங்களை (குறிப்பாகத் ‘தாயின் மணிக்கொடி பாரீர்), ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படப்பாடலான ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்’ ஆகிய பாடல்களை அவர் அவ்வப்போது பாடக்கேட்டு இரசித்திருப்பதும் இன்னும் பசுமையாக ஞாபகத்திலுள்ளது.

Continue Reading →

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்குத் தொடர் – 2

உலகத் தொல்காப்பிய மன்றம் கனடாக் கிளை நடத்தும் தொல்காப்பியக் கருத்தரங்குத் தொடர் - 2உலகத் தொல்காப்பிய மன்றம் – கனடாக் கிளை. International Association for Tolkappiyam – Canada Branch 4 – 2800 Eglinton Avenue East, Toronto, ON. M1J 2C8

அன்புடையீர், தமிழின் தொன்மையையும்  சிறப்பையும் சான்றுபடுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலகின் பல நாடுகளிலும் அமைக்கப்பெற்று வருகின்றன. கனடாவில் அமைக்கப்ட்டுள்ள உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் சார்பில் ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இவ்வகையில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இரண்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

கருத்தரங்கம் பற்றிய விபரம்:
நாள்: சனிக்கிழமைää ஏப்ரல் 16, 2016
நேரம்: 3:00 மணி முதல் – 5:00 மணி வரை
இடம்: Unit 3A – 5637, Finch Avenue East, Scarborough, M1B – 5K9 (Finch & Taps court- (Toronto Tamil Sangam,  Near to Dr. Lambotharan’s Clinic )  

கருத்தரங்கில் உரை நிகழ்துபவர்;: திரு. பொன்னையா விகேகானந்தன்; அவர்கள்   அண்ணாமலை கனடா வளாகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் – ரொறன்ரோ கல்விச் சபை அனைத்துலக மொழிகள் கல்வித் திட்ட அலுவலர்
பொருள்: “தொல்காப்பியத்தி;ல் களவியலும் கற்பியலும்; – ஒரு நோக்கு”

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

நிகழ்வு சரியாக  பி.ப. 3: 00 மணிக்குத் தொடங்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 162 : தமிழினியின் சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ பற்றி,,,; தமிழினி சாகாள்!; கார்ல் மார்கஸ் – ‘சரித்திர வளர்ச்சியிலே சமுதாய விதிகளைச்சரியாக உய்த்துணர்ந்தவன்’!

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தமிழினியின் சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ பற்றி,,

சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் வெளியிட்டுள்ள தமிழினியின் சுயசரிதையான ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூலின் இலங்கைப்பதிப்பின் பின் அட்டையில் பின்வருமாறுள்ளது”

“உயிருடனிருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை. இந்த நிலையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் மக்களோடு இணைந்தே வெளியேறத்தயாராகியிருந்தார்கள். ஆபத்துக்காலத்தில் கோழி தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை இழுத்துக்கொள்வதுபோல் தமிழ் மக்கள் தம்முடனே போராளிகளையும் பாசத்துடன் அரவணைத்து உள்வாங்கிக்கொண்டார்கள்.  யாரெண்ரே தெரியாமல் காயமடைந்து அனாதரவாகக் கிடந்த பல போராளிகளையும் மக்களில் சிலர் தூக்கிச் சுமந்துகொண்டு வெளியேறத்தயாரானார்கள்.”

இதற்குக் கீழே தமிழினி பற்றிய சிறு குறிப்பொன்றுள்ளது. ஆனால் தமிழகத்தில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட மேற்படி நூலின் பின் அட்டையில் வேறு யாரோ எழுதியதைத் தமிழினி எழுதியுள்ளதாகக் குறிப்பி்டப்பட்டுள்ளதை முகநூலில் பலர் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அது கண்டிக்கத்தக்கது. காலச்சுவடு பதிப்பகத்தார் இதற்கான பதிலை நிச்சயம் கூறவே வேண்டும்.

தமிழினியில் சுயசரிதையில் நான் வாசித்த வரையில் ஈழத்தமிழர் போராட்டத்தைக்கொச்சைப்படுத்தியதாக எதனையும் நான் காணவில்லை. அவர் தன் அனுபவங்களை , போராட்ட அனுபவங்களை, விடுதலைப்புலிகளின் பிரமிக்கத்தக்க போர் வெற்றிகளை எல்லாம் விபரிக்கின்றார். இறுதியில் இவ்விதமான வெற்றிகளுடன் கூடிய போராட்டமானது , முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதுடன் முடிவடைந்தது அவருக்கு அதிர்ச்சியைத்தருகிறது. யுத்தத்தின் பின்னரான, மக்களின் முன்னாள் போராளிகள் மீதான புறக்கணிப்பு குறிப்பாகப் பெண் போராளிகள் மீதான புறக்கணிப்பு இதுவரை காலமும் யாருக்காகப் போராடினேன் என்ற கேள்வியை அவரிடத்தில் எழுப்புகிறது. அதன் பின்னரான அவரது அனுபவம் அவரை இதுவரை காலமும் நடந்த போராட்டம் பற்றிச் சிந்திக்க வைக்கிறது. அச்சிந்தனையை அவர் தன் சுயசரிதையில் வெளிப்படுத்துகிறார்.

அவ்விதம் வெளிப்படுத்தும்போது தலைமையின் பலமான அம்சங்களை ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் விபரித்த அவர் , முழு அமைப்புமே தலைமையை மையமாக வைத்துக்கட்டியெழுப்பப்பட்டிருந்ததால், தலைமையுடன் முடிவுடன் ஆயுதங்கள் மெளனிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான போராளிகளும் கை விடப்பட்ட நிலையும் உருவானபோது அந்நிலை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றார்.

என்னைப்பொறுத்தவரையில் இவ்விதமான கேள்விகள், சுய பரிசோதனைகள் ஆரோக்கியமானவை. ஏன் இவ்வளவு வெற்றிகளுடன் விளங்கிய அமைப்பானது, முற்று முழுதாக இயங்க முடியாதவாறு, ஆயுதங்கள் மெளனிக்கப்பட வேண்டிய நிலையுடன் முடிவுக்கு வரவேண்டி வந்தது என்ற கேள்விகளுக்கான நியாயமான சுய ஆய்வே தமிழினியின் சுயசரிதை.

Continue Reading →

எதிர்வினை: ‘வாசிப்பும், யோசிப்பும் 161 – நவகாலத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்க்கும் இணைய இதழ்கள்!’ பற்றி..

கலாநிதி நா. சுப்பிரமணியன்அன்ப! தங்களது 12-03-2016 திகதியிட்ட வாசிப்பும்யோசிப்பும் பகுதியிலே, ‘அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது’ எனக்குறிப்பிட்டதோடு அவ்வாறான செயற்பாடுகளுக்குச்சான்றுகளாக  என்னுடையதும் மற்றும் நண்பர் முனைவர் இ.பாலசுந்தரம் அவர்களுடையதுமான ஆய்வுச்செயற்பாடுகளைச்சுட்டி, எம்மிருவருக்கும் கௌரவமளித்திருந்தீர்கள். அதற்காக முதற்கண் எனது மனநிறைவையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

அத்தொடர்பிலே மேலும் ஒரு நன்றிக்கடப்பாட்டை உங்களுக்கும் நீங்கள் சுட்டியுள்ள   ஏனைய இணைய இதழ்ச்செயற்பாடாளர்களுக்கும்  தெரிவிக்க வேண்டிய கடப்பாடு எனக்கும் என்போன்ற ஆய்வளர்களுக்கும் உளது என்பதையும் இங்கு குறிப்பிட  விழைகிறேன். இது   இணைய இதழ்களின் ஆய்வுநிலைப் பயன்பாடு தொடர்பானதாகும். இத்தொடர்பிலான  சிறு விளக்கமொன்றை இங்கு முன்வைக்கவேண்டியது எனது கடமையாகிறது.. 

ஆய்வு அல்லது ஆராய்ச்சி எனப்படும் செயன்முறையானது  பல படிநிலைகளைக் கொண்டதுஎன்பதை அறிவீர்கள். அவ்வாறான படிநிலைகளைக் கல்வியாளர்கள்முக்கியமான மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளனர்.

முதலாவது கட்டம் :ஆய்வுகளுக்கான தரவுகளைத் தேடித்திரட்டல்.
இரண்டாவது கட்டம்:திரட்டப்பட்டவற்றைத்தொகை வகைசெய்து விளக்கியுரைத்தல் மற்றும் விமர்சித்தல் .
மூன்றாவதுகட்டம்:குறித்த ஆய்வுப்பொருண்மை சார்ந்த புதிய எண்ணக்கருக்கள்,
புதிய கருதுகோள்கள் ஆகியவற்றை உருவாக்கி அவ்வாய்வுப்பரப்பைப் புதிய கட்டத்துக்கு வளர்த்துச்செல்லுதல் .

Continue Reading →

அஞ்சலி: கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் !

கலாபூஷணம்  பீ.எம்.புன்னியாமீன்இலங்கையின்  பிரபல  எழுத்தாளரும்  கல்வியாளருமான  கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்  (10.03.2016 ) வியாழக்கிழமை  கண்டியில்  காலமானார். கடந்த  ஆண்டிறுதியில்  புனித உம்ராஹ்  கடமையை  நிறைவேற்றுவதற்காக  ஹஜ்  யாத்திரையை,  துணைவியார்  மஸீதா புன்னியாமீனுடன்  மேற்கொண்டிருந்த  இவர்,  புனிதக்கடமையை நிறைவுசெய்தபின்  நாடு  திரும்பும்  வேளையில்  29.12.2015    அன்று  திடீர் சுகவீனம்  காரணமாக  விமானத்திலிருந்து  இறக்கப்பட்டு  துபாய்  ராஷீட் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஒரு  மாத  தீவிர  சிகிச்சைகளின்  பின்னர்  29.1.2016   அன்று   இலங்கை திரும்பிய  அவர்,  மேலதிக  வைத்தியத்துக்காக  மீண்டும்  பல்லேகல ஆயுர்வேத   வைத்தியசாலையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். நீரிழிவு  நோயினால்  நீண்டகாலம்  பாதிக்கப்பட்டிருந்த  புன்னியாமீன், அதன்  தீவிர  பாதிப்பினால்  இறுதியில்  தாயக  மண்ணிலேயே எம்மை  விட்டுப்  பிரிந்தமை  அவரது  சுற்றுவட்டத்தினரை  கடும் துயரில்  ஆழ்த்தியுள்ளது.

ஆசிரியராகவும்,  சிறுகதை  எழுத்தாளராகவும், நூல்வெளியீட்டாளராகவும்,   ஊடகவியலாளராகவும்  பல்வேறு பரிமாணங்களிலும்  அறியப்பெற்ற  பீர்முகம்மது  புன்னியாமீன் 11.11.1960   இல் பிறந்தவர்.  கண்டி  மாவட்டத்தின்  கட்டுகஸ்தொட்ட பிரசேத்தில்  உள்ள  உடத்தலவின்ன  என்ற  சிற்றூரில்  பிறந்து, வளர்ந்து,   செழிப்புற  வாழ்ந்து  மறைந்தவர்.

அங்கு  அவர்  நிறுவிய  சிந்தனை வட்டம்  என்ற  அறிவுசார் நிறுவனத்தின்  மூலம்  பல  நூல்களை  எழுதியும்  பலரது  நூல்களை வெளியிட்டும்,  புலமைப்பரிசில்  பரீட்சை  சார்ந்த  பல  கல்விப் பணிகளையாற்றியும்  சிறப்புற்ற  அவர்,  உடத்தலவின்ன  என்ற சிற்றூரின்   பெயரை  உலகளாவிய ரீதியில்  பலரையும்  உச்சரிக்க வைத்ததுடன்,  ஈழத்து  இலக்கியத்  தோட்டத்திற்கு  மௌனமாகப் பொழிந்த  மாமழையாக  நின்று  பணியாற்றியவர்.

2004  முதல்  2009  வரை  இவர்  இலங்கை  முஸ்லிம்  எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின்  விபரத்தொகுப்பொன்றை கட்டுரைகளாக  எழுதித் தொகுத்து  15  தொகுதிகளில்  அவற்றை வெளியிட்டுவைத்திருக்கிறார்.   புகலிடப்  படைப்பாளிகளின்  வாழ்வும் பணிகளும் பற்றிய  தனியானதொரு  தொகுப்பை   வெளியிடும் நோக்கில்  லண்டன்  வந்திருந்த  புன்னியாமின்  ஒரு மாதம்  அளவில் எமதில்லத்தில்  தங்கியிருந்து  புகலிடப்  படைப்பாளிகளைச்  சந்தித்துத்  தகவல்  பெற்று  சிந்தனை  வட்டத்தின்  236 ஆவது  நூலாக அதனை  2006 இல்  வெளியிட்டிருந்தார்.

Continue Reading →

ரொறன்ரோ தமிழ்ச்சங்க மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்: “தமிழ்ச் சித்தர் இலக்கியம்”

நிகழ்ச்சி நிரல்பிரதம பேச்சாளர்  உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியம்: ஒரு பார்வை” – முனைவர் மைதிலி தயாநிதி சிறப்புப் பேச்சாளர்கள் உரை:“தமிழ்ச் சித்தர் இலக்கியங்களை வகைப்படுத்தல் – ஒரு…

Continue Reading →