சிறப்புற நிகழ்ந்த ‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா!

[ மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூல் அண்மையில் யாழ் பொதுசன நூலகக்கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றதாக எழுத்தாளர் குணேஸ்வரன் அறியத்தந்திருந்தார். அத்துடன் நிகழ்வுக்காட்சிகள் சிலவற்றையும் புகைப்படங்களாக அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி. அவற்றை ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.

இலங்கைத்தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பு நூலானது முக்கியமானதொரு மைல் கல்லாகும். இது போன்று ஏனைய சஞ்சிகைகளின் தொகுப்பு நூல்களும் வரவேண்டும். இதன் மூலம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை முறையாக ஆவணப்படுத்த முடியும்.  இது போல் இலங்கையில் வெளிவந்த தமிழ்ப்பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகள், கவிதைகள்,  நாவல்கள் மற்றும் திறனாய்வுக்கட்டுரைகள் போன்றவையும் பல்வேறு தொகுப்புகளாக வெளிவருவது நல்லது. அவ்விதம் வெளியிடுவதற்கு மிகுந்த பொருட்செலவாகுமென்பதால், அவற்றை முதலில் மின்னூல்களாகத் தொகுத்து வெளியிடலாம். இவ்விதம மின்னூல்களாக அவை இருப்பது இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் வரலாற்ற முறையாகப்புரிந்து கொள்வதற்கு உறுதுணையாகவிருக்கும்.

தற்போது தொகுப்பு நூலாக வெளிவந்த ‘மறுமலர்ச்சி’ இதழ்களின் தொகுப்பும் மின்னூலாக இணையத்தில் ‘நூலகம்’ போன்ற தளங்களில் சேகரித்து வைக்கப்பட வேண்டும். இவ்விதம் இணையத்தில் மின்னூல்களாக இவை இருப்பது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவற்றைப்பற்றி பல்வகை ஆய்வுகளை, திறனாய்வுகளைப்புரிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். – பதிவுகள் – ]

ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 160 : ‘ராமச்சந்திரன்’ ஆட்சி செய்த மண்ணில் ‘ரவிச்சந்திரன்கள்’ மடியும் நிலை இனியும் வேண்டாம். | எழுத்தாளர் ‘சீர்காழி’ தாஜ்…….

1.  ‘ராமச்சந்திரன்’ ஆட்சி செய்த மண்ணில் ‘ரவிச்சந்திரன்கள்’ மடியும் நிலை இனியும் வேண்டாம்.

ரவிச்சந்திரன் என்ற மனிதர் , தன்னுடன் வாழும் மக்களின் உரிமைகளைச் சுட்டிக்காட்டி, அவலங்களைச்சுட்டிக்காட்டிபோராளியாகத்தன்னை மாய்த்துக்கொண்டிருக்கின்றார். அவரது இந்தப்போராட்டம் , இந்த முடிவு தமிழகத்தில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு இனியாவது விடிவொன்றினைக்கொண்டு வரட்டும்.

அண்மையில் கனடா அரசு 25,000 சிரிய அகதிகளைப் பெரும் ஆரவாரத்துடன் கை நீட்டி, அரவணைத்து அழைத்தபோது எனக்குத் தமிழகத்தில் அகதிகள் முகாம் என்ற பெயரில் நடாத்தப்படும் தடுப்பு முகாம்களில் வாடும் எம் நாட்டுத்தமிழ் அகதிகளின் நிலைதான் ஞாபகத்துக்கு வந்தது. ஈழத்தில் நிலவிய கொடிய அடக்குமுறைகள் காரணமாகத் தாய்த்தமிழகம் என்ற பெரும் நம்பிக்கையுடன் , அபயம் நாடித்தமிழகம் வந்த அப்பாவி அகதிகள் அவர்கள். அவர்களை இருகரம் நீட்டி அரவணைத்து ஆறுதல் கூறுவதற்குப்பதிலாகத் தடுப்பு முகாம்கள் என்ற ஒருவகைச்சிறைக்கூடங்களில் தடுத்து, உளரீதியாகத்துன்பங்களை அனுபவிக்க வைத்து, அதிகாரிகளின், காவல்துறை அதிகாரிகளின் அடக்கு முறைகளுக்குள் பல்வகைத்துன்பங்களை அனுபவிக்க வைத்து ஏன் தமிழக அரசு இவ்விதம் அந்த அகதிகளுடன் வாழ்வுடன் விளையாடுகிறது?

தமிழக அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் , நடிகர்கள் போன்ற பலர் இவர்களைப்பற்றி எதுவுமே பெரிதாகக் கதைப்பதேயில்லை. இவர்களுக்காகக் குரல் கொடுப்பதேயில்லை. இவ்வளவுக்கும் இவர்களது நிலை பற்றி மானுட உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் சிலர் அவ்வப்போது குரல் எழுப்பித்தான் வருகின்றனர். , ஊடகங்கள் சில இவர்களது நிலை பற்றிக் குரல் கொடுத்துத்தான் வருகின்றன. இருந்தும் ஏன் எல்லாரும் இவர்களின் நிலையினை மாற்றி, பூரண சுதந்திரம் மிக்கவர்களாக இவர்கள் வாழ அனுமதிக்கவில்லை?

அகதி முகாமுக்குத் தாமதமாக வந்த ரவிச்சந்திரனை அதுவும் மிகவும் நியாயமான காரணத்துக்காகத் தாமதமாக வந்தவரைக் கண்டித்து, அவமானப்படுத்தி, அகதி முகாமுக்குள் ஏற்க முடியாது என்று மறுத்த அதிகாரி ராஜேந்திரன் , ரவிச்சந்திரனை ‘வாழ்க்கையின் ஓரத்துக்கே’ ஓடும்படி விரட்டியிருக்கின்றார். அவர் மீது பொலிஸார் வழக்குத்தொடுத்திருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரைப்போன்ற அதிகாரிகள் மிகவும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். தன் வாழ்வையே மாய்த்துக்கொண்ட ரவிச்சந்திரனின் குடும்பத்துக்குப் போதிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எந்தக் காரணத்துக்காக ரவிச்சந்திரனுக்கு இந்த நிலை ஏற்பட்டதோ? அந்தக்காரணங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும். அகதிகள் பூரண சுதந்திரம் மிக்கவர்களாக வாழ்வதற்கு உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும். அதிகாரிகளின் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமற்று, சாதாரணை குடிமக்களைப்போல் தாம் விரும்பிய இடங்களில் அல்லது அகதி முகாம்களில் சுதந்திரமாக வாழ்வுதற்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்.

Continue Reading →

நன்றி! நன்றி! நன்றி!

தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான 'குடிவரவாளன்' பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள்.தமிழகத்தில் தற்போது ஓவியா பதிப்பக வெளியீடாக விற்பனைக்கு வந்துள்ள எனது நாவலான ‘குடிவரவாளன்’ பிரதியுடன் பதிப்பக உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா இருக்கும் காட்சியினையே இங்கு காண்கின்றீர்கள். மிகவும் சிறப்பாக நூலினை வெளியிட்டுள்ள ஓவியா பதிப்பகத்துக்கும், அதன் உரிமையாளர் வதிலைப்பிரபாவுக்கும் நன்றி. எழுத்தாளர் ஒருவருக்கு அவரது படைப்பொன்றினை நூலுருவாகப்பார்க்கும்போது ஏற்படும் இன்பத்தை விபரிக்க வார்த்தைகளில்லையென்பேன். ‘குடிவரவாளன்’ நாவலினை வதிலைப்பிரபா கைகளில் பார்க்கையில் ஏற்படும் களிப்பும் அவ்வகையானதே.

நூலினைப்பெற்றுக்கொள்ள விரும்புவோர் ஓவியா பதிப்பகத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

முகநூல் பல ஆக்கபூர்வமான நன்மைகளை அதன் அங்கத்தவர்களுக்குத்தருகிறது. தம் பால்ய காலத்து நண்பர்களுடன், நண்பர்களுடன், சக எழுத்தாளர்களுடன், பதிப்பகத்தாருடன் எனப் பலருடன் ஆக்கபூர்வமான தொடர்ப்புகளைப் பேணுதற்கு உதவுகின்றது. ஓவியா பதிப்பகத்தையும், அதன் உரிமையாளர் திரு.வதிலைப்பிரபா அவர்களையும் நான் அறிந்து கொண்டதும் முகநூல் வாயிலாகத்தான். அதற்காக முகநூலுக்கும் நன்றி. முகநூல் மூலம் நான் அடைந்த நன்மைகளில் இதுவுமொன்று.

நீண்ட காலமாக நூலாக வெளிவரவேண்டுமென்று நான் விரும்பிய நாவல் ‘குடிவரவாளன்’ அதனைச் சாத்தியமாக்கிய ஓவியா பதிப்பகத்துக்கு மீண்டுமொருமுறை நன்றி. நூலின் அட்டைப்படத்திலிருந்து, பிழை திருத்தம் செய்வதுவரை, வதிலைப்பிரபா காட்டிய சிரத்தை என்னைப் பிரமிக்க வைக்கிறது. இயலுமானவரையில் எழுத்துப்பிழைகளைக் களைந்துள்ளோம். நூல் சிறப்பாக வெளிவந்துள்ளது.

Continue Reading →

அவுஸ்திரேலியாவில் அனைத்துலகப் பெண்கள் தின விழா! ஐந்து அரங்குகள் ஒன்றுகூடும் அமர்வுகளில் பெண்ணிய கருத்தியல்களின் சங்கமம்! தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில் நூல் அறிமுகம்!

அருண். விஜயராணிதமிழினி ஜெயக்குமாரன்அவுஸ்திரேலியத்  தமிழ்  இலக்கிய  கலைச்சங்கம்  எதிர்வரும்  6  ஆம்  திகதி  (06-03-2016)  ஞாயிற்றுக்கிழமை  மெல்பனில் நடத்தவிருக்கும்  அனைத்துலகப்பெண்கள்  தின  விழாவில் கவியரங்கு,  விவாதஅரங்கு,  கருத்தரங்கு,  கலையரங்கு,  மறைந்த பெண்ணிய  படைப்பாளிகள்  இருவரின்  நினைவரங்கு  மற்றும் தமிழினியின்  சுயசரிதையான  ஒரு  கூர்வாளின்  நிழலில்  நூலின் அறிமுகம்  என்பன  இடம்பெறவுள்ளன. சங்கத்தின்  துணைச்செயலாளர்  திருமதி  சாந்தினி  புவனேந்திரராஜா  நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளராக  இயங்கும் அனைத்துலகப்பெண்கள்  தின  விழா,   சங்கத்தின்  தலைவர்  பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்  தலைமையில்  6  ஆம்  திகதி மெல்பனில்  பிரஸ்டன்  நகர  மண்டபத்தில்  மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

நிகழ்ச்சிகளை   திரு, திருமதி கணநாதன்  தம்பதியர்  மங்கள விளக்கேற்றி    தொடக்கிவைப்பார்கள்.    திருமதி  சகுந்தலா  கணநாதன்   ஆங்கிலத்தில்   படைப்பு  இலக்கியம்  எழுதும்  எழுத்தாளர் என்பது  குறிப்பிடத்தகுந்தது. திருவாளர்கள்  அ. நாகராஜா,  சந்திரசேகரம்  ஆகியோரின்  தமிழ்ப்பெண் வாழ்த்து,  தமிழ்த்தாய் நடனம்  என்பனவற்றுடன்  அரங்குகள் ஆரம்பமாகும். கவிஞர்  கல்லோடைக்கரன்   தலைமையில்  இவர்களின்  பார்வையில் பெண்   என்ற  தலைப்பில்  நடைபெறும்  கவியரங்கில், அறவேந்தன்,  வெள்ளையன்  தங்கையன்,   நந்தகுமார்  இராமலிங்கம், சகீம்  மாத்தயஸ்,  கேதா  ஆகியோர்  பங்குபற்றுவர்.

Continue Reading →

லண்டன் ஹரோ தமிழ் சந்தியில் ஒன்றுகூடல்

லண்டன் ஹரோ தமிழ் சந்தியில் ஒன்றுகூடல் ‘தமிழ் மக்களின் வேர்களைச் சாகவிடாமல் பாதுகாக்கும்பணி புலம்பெயர் தமிழ் மக்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். எமது பாரம்பரியக் கலைகளையும்  இசைää கூத்து போன்ற கலை நிகழ்வுகளையும் மீட்டெடுத்தும் பேசியும் எமது அடுத்த சந்ததியினருக்கு கையளிக்கும் முயற்சிகள் எல்லாத் தளங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். பறை போன்ற எமது பாரம்பரிய இசைமரபினை தமிழரின் தொன்மை இசைமரபாக நாம் முன்னெடுக்க வேண்டும். பரதநாட்டியம் போன்ற நடனங்களில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு அக்கறை காட்டினாலும் இந்த நடனங்கள் எமது பாரம்பரியக் கலாச்சார மரபை பிரதிபலிக்கின்றன என்று கூறுவதற்கில்லை. எமது பாரம்பரிய கூத்துமரபு பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும்’ என்று கனடாவிலிருந்து வருகை தந்திருந்த கலாநிதி பார்வதி கந்தசாமி கடந்த வாரம் மாசி மாதம் 6ஆம் திகதி ‘ஹரோ தமிழ் சந்தி’ அமைப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

‘புலம்யெயர் தமிழர்களின் அடையாளம் எது என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களில் அடுத்தடுத்த தலைமுறையினர் எவ்வளவுதூரம் எமது தாய்மொழித் தமிழை பயில்வார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அமெரிக்காவில் யூதமக்கள் அவர்களின் தாயக மொழியான கீபுறு மொழியைத் தெரியாத சமூகமாக  வளர்ந்திருப்பதைப்போன்றே புலம்பெயர் தமிழர்களின் எதிர்காலச் சந்ததியினர் தமிழ்த் தெரியாத தமிழ்ச் சமூகமாக உருப்பெறும் நிலை உருவாகலாம்’ என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது தலைமையுரையில் தெரிவித்தார். 

‘புலம்பெயர் நாடுகளில் அமைந்துள்ள ஊர்ச்சங்கங்கள் சாதி மேலாண்மையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. 1960 களில் இருந்த நிலையைவிட இன்று தாயகத்தில் சாதிய வேறுபாடுகள் கூர்மையுற்று வருவதை அறிய முடிகிறது’ என்று ஒளிபரப்பாளர் இளையதம்பி தயானந்தா கருத்துத் தெரிவித்தார்.

Continue Reading →

பத்தி 9: இணைய வெளியில் படித்தவை

சத்யானந்தன்

இடாலோ கால்வினோவின் சிறுகதை – நூலகத்தில் ஒரு தளபதி

வாசிப்பு என்பது புத்தகப் பிரியர்களுக்கு வேறு எதையும் விட உவப்பானது. ஆனால் வாசிப்பு என்பதை அதன் பயன் (அல்லது கெடுதல்) என்ன என்பதை ஒரு அதிகார அமைப்பால் நிறுவ முடியுமா? இந்த ஆர்வமூட்டும் சரடை மையமாகக் கொண்ட இடாலோ கால்வினோ படைப்பான “நூலகத்தில் ஒரு தளபதி” என்னும் கதையை சொல்வனத்தில் மாது மொழி பெயர்ப்பாகத் தருகிறார். அதற்கான இணைப்பு  இது.   ராணுவ ஆட்சியிலிருக்கும் பாண்டூரியாவின் ராணுவத் தலைமைக்கு தமது அதிகாரத்துக்கு எதிரான கருத்துக்கள் புத்தகங்கள் வழி பரவுகின்றனவோ என்னும் ஐயம் எழுகிறது. எனவே அவர்கள் அந்த நாட்டின் மிகப் பெரிய நூலகத்தில் உள்ள புத்தகங்களை வாசித்து ஆராய்ந்து அவற்றை ஆபத்தானவை மற்றவை என இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு அறிக்கை தருவதற்கு ஒரு சிறிய படையையே அனுப்புகிறது.

ஒரு சின்னஞ்சிறிய கதை வழியே நம்மை ஒரு மிகப் பெரிய கேள்விக்கு நெருக்கமான அண்மையில் கொண்டு நிறுத்துகிறார் கால்வினோ. வாசிப்பு என்பதில் நாம் எதைத் தேர்வு செய்கிறோம்? எதை வாசிக்கிறோம்? ஆரம்ப நிலை வாசகர் யாருமே மனதைக் கிளர்ச்சியுடன் வைத்து நீண்ட நேரம் வாசிக்கத் தக்க ஒரு பொழுது போக்கான கதையை மட்டுமே வாசிப்பார். ஆனால் அதற்கு அடுத்த நிலை வாசிப்பு நமக்கு அனேகமாக விமர்சகர்கள் பரிந்துரைத்தவை என்னும் அடிப்படையில் அல்லது தற்செயலாக ஒரு நண்பர் வியந்து வாசித்து நமக்கு இரவலும் கொடுத்தது என்னும அடிப்படையிலேயே அமைகிறது. இல்லையா?

Continue Reading →

‘மறுமலர்ச்சி’ வெளியீட்டுவிழா!

ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு வெளியீட்டு விழா 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு யாழ் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.…

Continue Reading →

எழுத்தாளர் செங்கையாழியானுக்குக் கண்ணீர் அஞ்சலி

எழுத்தாளர் செங்கையாழியான் அமரராகிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டபோது ‘நேற்றிருந்தார் இன்றில்லை’ என்ற வாசகம்தான் நினைவில் வந்தது. யாழ் இலக்கிய வட்டத்தின் முன்னாள் தலைவராக இருந்த குணராசா என்ற…

Continue Reading →