நேர்காணல் (மீள்பிரசுரம்): Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) : எம்ஜிஆரைப்பற்றி ஜெயலலிதா!

எம்ஜிஆர் / ஜெயலலிதாதமிழக முதல்வர் செல்வி ஜெயலிதா சிமி கரேவலின் Rendezvous with Simi Garewal என்னும் நிகழ்ச்சியில் மனந்திறந்து சிமி கரேவலுடன் உரையாடிய நேர்காணல் ஜெயலலிதா அவர்கள் பங்குபற்றிய நேர்காணல்களில் நானறிந்தவரையில் சிறப்பானது; முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் இரும்புப்பெண்மணியாக அறியப்பட்ட ஜெயலலிதா அவர்கள் மிகவும் இளகி, மனந்திறந்து பதில்களை அளித்திருக்கின்றார்.  தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர், தனக்குப் பிடித்த நடிகர் என்றெல்லாம் மனந்திறந்து பதில்களை அளித்துள்ள ஜெயலலிதா எம்கிஆர் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளித்திருக்கின்றார். எம்ஜிஆரைக் காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் புன்னகையுடன்’அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்’ என்று பதிலளித்திருக்கின்றார். ‘உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?’ என்ற கேள்விக்கு அவர் ‘இருந்திருக்கலாம்’ என்று கூறியிருக்கின்றார். .மேலும் எம்ஜிஆரைப்பற்றிக் கூறும்போது ‘மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப்  பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.’ என்றும், ‘எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா?’ என்ற கேள்விக்கு ‘கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.’ என்றும் கூறியிருக்கின்றார். மேலும் ‘அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது’ என்றும் எம்ஜிஆரைப்பற்றியும் கூறியிருக்கின்றார் ஜெயலலிதா.

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் யாருமே கேட்கத்துணியாத கேள்விகளை ஜெயலலிதாவிடம் சிமி கரேவல் கேட்டிருக்கின்றார் இந்த நேர்காணலில். அத்துடன் இந்த நேர் காணலில் தனக்குப் பிடித்த இந்திப்பாடலின் சில வரிகளையும் பாடிக்காட்டியிருக்கின்றார் தமிழகத்தின் இரும்புப்பெண்மணி.

இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல். இதனை TheTamilTimes இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து வெளியிட்டிருக்கின்றார்கள். ஜெயலலிதா ஆங்கிலப்புலமை வாய்ந்தவர். இந்த நேர்காணலில் அவர் ஆங்கிலத்தில் அளித்த பதில்களும், பாவித்த ஆங்கிலச்சொற்களும் அவரது ஆங்கிலப்புலமையினை வெளிப்படுத்துவன. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பினைத்தமிழாக்கம் செய்த ‘தி தமிழ் டைம்ஸ்’ இது பற்றிக் குறிப்பிடுகையில் ‘ஜெ. இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளது. அந்த ‘தி தமிழ் டைம்ஸ்’ இணையத்தளத்தில் வெளியான தமிழாக்கம் செய்யப்பட்ட நேர் காணல் முழுவதையும் இதோ உங்கள் முன்னால்…


உரையாடல்: “அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி. பேட்டி கண்டவர் சிமி கரேவல் (Simi Garewal).

தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது.

Continue Reading →

குறுநாவல்: சலோ,சலோ! (1)

– சும்மா,நினைவுகளை இரை மீட்பதற்காக எழுதிய .நீளத் தொடர். –  கடல்புத்திரன் –


அத்தியாயம் ஒன்று!

குறுநாவல்:  சலோ,சலோ! (1)

அராலிக்கூடாகச் செல்கிற பிரதான வீதியிலிருந்து மேற்குப் புறமாக வேலியில்லாமல் திறந்த ‘ட’னா வடிவில் முருகமூர்த்திக் கோவில் வளவு, மண்பாதையுடன் செல்கிறது.. வீதியை விட்டு இறங்கியவுடன் சிறிய கோவில்,அதில் யார் இருக்கிறார்கள்?பிள்ளையாரா?துர்க்கை அம்மனா?வைரவரா? யாரோ ஒருவர் செகிருட்டி போல இருக்கிறார்.பனை மரங்களுடன் எதிர்ரா போல் இருக்கிற அமெரிக்கன் மிசன்  தமிழ்க்கலவன் பாடசாலைக் காணி முருகமூர்த்தி வளவை ‘ட‌’னாவாக்கியிருக்கிறது. அந்த வளவையும் சேர்த்து விட்டால் அது வளவு,சதுர வளவு தான்.  ஒரு புண்ணியவான், தன் வளவை கோவிலுக்கும் கொடுத்து,முன்னால் சிறிய துண்டை பள்ளிக்கூடத்திற்கும் கொடுத்திருக்கிற வேண்டும். அந்த காலத்தில், யாரோ ஒருவர்? மதசார்ப்பற்ற  ,உயர்ந்த மனிதராக இருந்திருக்கிறார்! அவர் யார்?  தேடினால் அறிய முடியும். அந்த கிராமம் சைக்கிளால் அளந்து விடக் கூடிய தூரம் தான். அராலியும் எல்லா கிராமங்களைப் போல‌ மறைவாக முற்போக்குத் தன்மையையும் கொண்டு தானிருக்கிறது.இவர்களைப் போல,பள்ளிக்கூடத்தில் ஏற்படுற‌ நட்பு தான் அதை வளர்த்துக் கொண்டு வருகிறதோ, என்னவோ பிழை இருக்கிறது?என்கிற மாதிரி கிடக்கிற குழப்பங்கள் எல்லாம் எமக்கென்று ஒரு சுயராட்சியம் ஏற்பட்டவுடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடுமோ?

பல பிரச்சனைகளிற்கு பெரும் பெரும் பாறைகளை உருட்டி விட்டு தடை படுத்திக் கொண்டிருக்கிறது போல இருக்கிற‌ பூதங்கள்,ஒரு நாள், இல்லாவிட்டால் ஒரு நாள் தோற்றுப் பின் வாங்கவே போகின்றன. ஏனெனில் ‘தர்மம்’ நம்மவர்களின்(தமிழர்களின்) பக்கமே கிடக்கிறது. இப்படி, நகுலனின் சிந்தனைகள் ஓடுகின்றன‌. ஒன்றை யோசிக்கத் தொடங்கினால்,அதிலே மட்டும் நில்லாமல் மனம் போன போக்கில் எங்கையோ போய் விடுகிறான். ‘இப்படி இருக்கிறதாலேதான் கிராமத்தின் வரலாறும் சரியாக‌  தெரியாதவனாக கிடக்கிறேனே !’  அவன்,  தன்னையே சலித்துக் கொண்டான் . .

பிழைகள், அவனிடம் மட்டுமல்ல‌ ,வெளியிலேயும், சமூகத்திலும் கிடக்கின்றன‌. தேவையற்ற லண்டனின் தேம்ஸ்  நதியைப்பற்றியும்,அமெரிக்காவில் ஆதிக் குடிகள் கொடுமையாகக் கொல்லப்பட்டதைப் பற்றியும் தான் தெரிகிறது படிக்கிறது எல்லாம் ….சுய கல்வி முறை துப்பரவாக  கை விடப்\பட்டிருக்கிறது. தாவரங்களைப் பற்றி படித்தாலும் சரி, விலங்குகள் பற்றி படித்தாலும் சரி, இங்குள்ள  எல்லாற்கும்  அழகான‌  பழந்தமிழ்ப்  பெயர்களும் இருக்கின்றன. வேறு மொழிப் பெயர்களாகப் படித்து, அதை நினைவில் வைத்திருப்பதிலேயே பாதிப்பேர் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது. இப்படியே எல்லாத்தையும் அந்நிய‌ம் புக‌ விட்டு… அந்நிய‌ப்படுத்தி யே விட்டிருக்கிறோம்.

Continue Reading →