தம்பா (நோர்வே) . கவிதைகள்!

1. வீதியின் நீதி

தம்பாஆயுதங்கள் நிறைத்து
தெருக்களை ஆட்சி செய்த காலங்களில்
வீதிகளில் கொல்லப்படுவதற்கு
ஆட்கள் இல்லாது போனது
குறையாகவே இருந்தது.

போரை அழித்த
சமாதானப் புறாக்கள்
புதைகுழிகள் மேல் மண்சோறு உண்டு
வீதிகளை புனிதப் படுத்தின.

சாதாரணனுக்கு
இனிப்பும் சல்யூட்டும் வழங்கி
முகஸ்துதி செய்தன.

நம்பி நிறைந்தன வீதிகள்.

தூதர்களை பூட்டி வைத்து
அலுகோசுகளை திறந்து வைத்தனர்.

தன்னியங்கி இயந்திரங்கள்
சாதாரணனனின் இதயத்துக்கு
துப்பாக்கி ரவைகள் பரிசாக வழங்கி
வாழ்ந்ததற்கு
வழக்குகள் பதிய வைக்கின்றன.

Continue Reading →

ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -ஆய்வு: அற இலக்கியங்களில் விருந்தோம்பல்முன்னுரை
சங்க மருவிய காலத்தில் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் களப்பிரர்கள்.இக்காலம் இருண்ட காலம் என அழைக்கப்படுகின்றன.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள்  பதினெட்டு நூல்கள்  பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல்கள் எவை என்பதை பற்றி,

நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்
பால் கடுகங் கோவை பழமொழி –மாமூலம்
இன்னிலை சொல் காஞ்சியோ டேலாதி என்பதூஉம்
கைந்நிலையு மாம்கீழ்க் கணக்கு

என்ற தனிப்பாடலின் வழி அறியமுடிகிறது.இவ்வகையில் பதினொன்றில் இடம்பெறும் விருந்தோம்பல் குறித்த செய்திகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்பதற்கு தமிழ் தமிழ் அகர முதலி புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் போற்றுதல் என்று பொருள் உரைக்கிறது.கௌரா தமிழ் அகராதி வேளாண்மை,புதிதாய் வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை.

சென்னை பல்கலைக் கழகத் தமிழ் ஆங்கில அகராதி புதிதாக வருபவரை உண்டி முதலியவற்றால் உபசரிக்கை;( welcoming and entertaining guest) என்று பொருள் கூறுகிறது.
இத்தகைய விருந்தோம்பல் சங்க காலத்தில் பெரிதும் போற்றப்பட்ட பேரறமாக விளங்கியது.எந்நாட்டவராயினும்,எம்மொழியினராயினும் நட்புக் கொள்ளும் நல்லெண்ணத்துடன் வீடு தேடி வருவார்களாயின் அவர்களை வரவேற்று புதியவராக கொண்டனர்.தொல்காப்பியர் இதனை,

“விருந்தே தானும் புகுவது கிளந்த யாப்பின் மேற்றே”

என்ற நூற்பாவால் குறிப்பிடுகிறார்.மேலும் அக்கால மக்கள் விருந்தோம்பலைக் கடமையாக கொண்டனர் என்பதை,

“ விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவும் அன்ன”

என்ற நூற்பா அடிகள் குறிப்பிடுகின்றன.

Continue Reading →

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்

ஆய்வு: சித்தர் இலக்கியத்தில் தன்னையறிதல்- இல.சவுரிராஜா, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாசுபேட்டை, புதுச்சேரி-08.  முன்னுரைஆன்மீக உலகிலத்தில் நான் யார் என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் உள்;ள ஒன்றாகும். எத்தனையோ அணுகுமுறையில் பலரும் இந்தக் கேள்வியை அணுகியுள்ளார்கள். ஆனால் நான் என்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக்  கூறியிருப்பினும் அடிப்படை உண்மை ஒன்றுதான். இவற்றை சித்தர்கள் வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.    

நான் தற்காலிகமானது
உண்மையில் அனுபவத்தையும்,அனுபவிப்பவனையும் பிரிக்க இயலாது. “கணந்தோறும் புதிது புதிதாக வரக்கூடிய அமசம் உடையது தான் சிந்தனை. ஊதுவத்தியிலிருந்து வெளிவரும் புகை புதிது புதிதாக எப்படி வந்து கொண்டிருக்கிதோ,அப்படிதான் நமது சிந்தனையும் புதிது புதிதுதாக வந்து கொண்டிருக்கிறது. சிந்தனை எப்படி ஒவ்வொரு கணந்தோறும் புதியதோ, அப்படித்தான்  அதனால் உருவாக்கப்படும் அனுபவிப்பவனும் ஒவ்வொரு கணந்தோறும் புதியவன். அனுபவமும் ஒவ்வொரு கணந்தோறும் புதியது. அனுபவிப்பவனாகிய நாம் நிரந்தரமாக இருப்பதாகக் கொள்ளலாம். ஆனால் உண்மையன்று”(ஸ்ரீ பகவத் கவலைகள் அனைத்திற்கும் தீர்வு பக் 99-100).
எனவே அனுபவிப்பவனாகிய ‘சின்ன நான்’ தற்காலிகமானதே: நிலையானதன்று: காணப்படும் ஒவ்வொரும் பேற்றோரைப் பார்க்கும் போது பிள்ளையாக, பிள்ளையைப் பார்க்கும் போது தாயாக, தந்தையாக, வாழ்க்கைத் துணையைப் பார்க்கும் போது கணவராக, மனைவியாக அனுபவிப்பலனாகிய ‘நான்’ தோன்றுகிறது.

நான் அற்ற நிலை
நான் அற்ற நிலை வேண்டும் என்று நாம்; கூறிக்கொள்ளலாம். அனுபவிப்பவன் இல்லாத அனுபவம் வேண்டும் என்று நாம் கூறிக்கொள்ளலாம் ஆனால் இது நடைமுறை சாத்தியமில்லாத வெறும் கனவே ஆகும். சிந்தனை இருக்கும் வரை காண்பவன் – கணப்படும் பொருள், அனுபவிப்பவன் – அனுபவம் என்னும் இரட்டை நிலை நிரந்தரமாகவே இருந்துகொண்டுதான் இருக்கும். இவற்றுள் எதையாவது ஒன்றை நீக்குவதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் இப்படி ஓர் இரட்டைநிலை இருந்தாலும்கூட, அதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

Continue Reading →

ஆய்வு: தமிழக அரசமைப்பு முறையில் ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்

 - மு.செல்லமுத்து, தமிழியல்துறை, முனைவர்ப் பட்ட ஆய்வாளர், மதுரைகாமராசர் பல்கலைக்கழகம், பல்கலைநகர் - மதுரை – 21 -ஆய்வு முன்னுரை
தமிழிக அரசியல் சரித்திரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அரசியல் சார்ந்த அறநெறிகளை ஆராய்ந்தோமானால் உலக நாடுகள் முழுவதற்கும் இலக்கியப் பேராறு மூலம் ஒரு நாட்டையாளும் அரசனுக்குரிய அறங்களை மிக நேர்த்தியோடு எடுத்துச்சொன்ன பெருமை தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் தமிழ் மண்ணில் ஏற்பட்ட பல்வேறு போர்களாலும், பூசலாலும் காலந்தோறும் வெவ்வேறு ஆட்சிமுறைகள் வழக்கத்தில் இருந்து மக்களாட்சி முறையே இன்று நிலைத்துள்ளது. அரசன் என்பவன் அரச பரம்பரை அல்லது வாரிசுரிமையின் காரணமாகவோ, கணக்கற்ற படைவலிமையின் காரணமாகவோ, மக்களை ஆளும் இறைமையைப் பெற்றுக் கொண்டு அவர்களை அரசாண்ட வரலாறுகளின் அனுபங்களிலிருந்தே இன்றைய அரசியல்வாதிகள் அறநெறிகளை கற்றுக்கொண்டு மேடை தோறும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என மோசிகீரனாரும், ‘குடியுயரக் கோன் உயர்வான்’ என்றுரைத்த ஓளவையார் போன்ற தமிழ்ப் புலவர்களும் அறிஞர்களும் காலந்தோறும் ஆய்ந்தறிந்து தமிழக அரசியல் அறங்களை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர். அதன்வழி நின்று அரசனுடைய அங்கங்களாகத் திகழும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவைக்குழுவின் வழிகாட்டுதல்களையும், செயற்பாட்டம்சங்களையும் தமிழிலக்கியங்கள் வாயிலாக எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

ஐம்பெருங்குழு எண்பேராயம்
“ஐம்பெருங்குழு அமைப்பில், ‘அமைச்சர் (Chief Minister)> புரோகிதர் (Priest)> சேனாபதியர் (Commender – in – Chief)> தாவாத் தொழில் தூதுவர் (Ambassador)> சாரணர் (Intelligence Officer) ஆகியவர் அடங்கிய குழுவே ஐம்பெருங்குழு எனப்படும். இவ்வைந்து கூட்டத்தை பஞ்சாயம் என்றும் அழைப்பர். கரணத்தியலவர் (Chief Executive Officer)> கருமகாரர் (Priests)> கனகச் சுற்றம் (Treasury Officials)> கடைகாப்பாளர் (Guards)> நகரமாந்தர் (Great Men of the City)> படைத்தலைவர் (Captains of Troops)> யானைவீரர் (Elephant -Warriors )> இவுளிமறவர் (Cavalry – Officers) ஆகிய இவர்கள் எண்பேராயத்தில் இடம்பெற்றிருப்பார்கள்’ என்பர் அ.கி.பரந்தாமன்.” (வரலாற்றுக் கட்டுரைகளும் பிறவும். ப.101) அரசியலில் அரசனுக்குத் துணையாக அமைவன ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் என்பதனை,

“ஆசான் பெருங்கணி அருந்திறல் அமைச்சர்
தானைத் தலைவர் தம்மொரு குழிஇ” 
(சிலம்பு.வஞ்சிக்காண்டம் கால்கோள்காதை.2-3)

Continue Reading →