தமிழ் ஸ்டுடியோ பேசா மொழி: பியூர் சினிமா – நூலகம் – புத்தகங்கள் தேவை.

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!பேசா மொழி: பியூர் சினிமா – நூலகம் – புத்தகங்கள் தேவை.

நண்பர்களே பியூர் சினிமா புத்தக அங்காடியில் நூலகம் என்றொரு தனிப்பிரிவு இருக்கிறது. இதில் இலக்கியம், அரசியல், சினிமா, ஓவியம், காமிக்ஸ், சங்க இலக்கியம் என எல்லா வகையான நூல்களும் இருக்கிறது. ஆனாலும் நூலகத்திற்கு இன்னும் நிறைய புத்தகங்கள் தேவைப்படுகிறது. எனவே நண்பர்கள் தங்களிடம் என்ன வகையான நூல்கள் இருந்தாலும் அவற்றை பியூர் சினிமா நூலகத்திற்கு கொடுத்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இலவசமாக கொடுக்க இயலாது என்றால், குறைந்த அளவு பணம் கொடுத்து கூட வாங்கிக்கொள்கிறோம். ஆனால் பெரும் தொகை கொடுக்க இயலாது. புத்தகங்களை நூலகத்திற்கு கொடுக்க விரும்பும் நண்பர்கள் வடபழனியில் உள்ள பியூர் சினிமா அலுவலகத்தில் கொடுக்கலாம். வெளியூரில் உள்ள நண்பர்கள் கொரியர் அல்லது தபாலில் அனுப்பலாம். நிறைய புத்தகங்கள் இருந்தால் KPN போன்ற டிராவல்ஸ் பார்ஸல் சேவை மூலம் அனுப்பலாம். அல்லது உங்களால்  வரமுடியாது என்றால் பியூர் சினிமா அலுவலக எண்ணிற்கு அழையுங்கள். நாங்களே வந்து எடுத்து செல்கிறோம். உங்களுக்கு தேவையில்லை என்கிற புத்தகங்களை அல்லது நூலகத்திற்கு கொடுத்து உதவலாம் என்று நீங்கள் நினைக்கும் புத்தகங்களை எங்களுக்கு கொடுத்து உதவலாம்.

முகவரி:
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

Continue Reading →

வல்லினம் கலை இலக்கிய விழா 8

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!வணக்கம். ‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாள் 13.11.2016 (ஞாயிறு)
இடம்
Grand Pasific Hotel (KL)
Jalan Tun Ismail, Kuala Lumpur, 50400 Jalan Ipoh, Kuala Lumpur.
(ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)

நேரம் பிற்பகல் 2.00

கலை இலக்கிய விழா 8 இன் சிறப்பு அம்சங்கள்
1. ஆளுமைகளும் ஆவணங்களும்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய  சண்முக சிவா, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான் ஆகியோரின் நேர்காணல்கள் வெவ்வேறு கோணத்தில் பதிவு செய்யப்பட்டு ஆவணப்படமாக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணப்படத்தில் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் மிக அரிய சில புகைப்படங்களையும் இணைக்கப்பட்டுள்ளன.

விமர்சன நூல்
பொதுவாகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் பாராட்டுவதற்கென்றே உருவாக்கப்படுகின்றன. அதன் மூலம் ஒரு படைப்பாளனின் எல்லா படைப்புகளும் பாராட்டத்தக்கவை என மேம்போக்காகக் கொண்டாடப்படுகின்றன. ‘வல்லினம்’ இவ்வாறான மனநிலைக்கு எதிரான போக்கைக் கொண்டுள்ளதால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு படைப்பாளிகளின் சிறுகதைகளும் முழுமையாக வாசிக்கப்பட்டு அவற்றை ஒட்டிய விமர்சனக் கட்டுரைகள் எழுதப்பட்டு நூல்வடிவமாக்கப் பட்டுள்ளன.

Continue Reading →

ஆய்வு: பரிபாடல் காட்டும் தெய்வத்துவம்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

கடைச்சங்க காலத்தில் எழுந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்றானது பரிபாடல் என்ற நூலாகும். ‘பரிபாடல்’ என்னும் பாவினத்தால் ஆகிய பாடல்களின் தொகுதி இந்நூலாகும். அதனால், பரிபாடல் என்ற பெயரை இந்நூல் பெற்றது. பண்ணமைதியான இப்பாக்களைப் பயபக்தியோடு மனமுருகிப் பாடியும் பயின்றும் வந்தனர். அதனால் இப்பாடல்களை ‘ஓங்கு பரிபாடல்’  என்ற பெரும் புகழையும் பெற்றுக்கொண்டது. எட்டுத்தொகை நூல் விவரங்களை,

‘நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஓத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தோர் ஏத்தும் கலியோ டகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.’

என்ற வெண்பா உணர்த்துகிறது.

இப் பரிபாடல், தொகுக்கப்பட்ட காலத்தில் எழுபது (70) பாடல்களுடன் இருந்துள்ளது. இதனை,

‘திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று – மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்.’

vன்னும் ஒரு பழம் செய்யுளால் அறியக்கிடக்கின்றது. இவற்றுள், இந்நாளில் 22 பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. மற்றைய 48 பாடல்களும் காலத்தால் மறைந்து போயின. எஞ்சிய 22 பாடல்களையும் பண்களின் அமைப்பில் அமைத்துள்ளனர். இதன் முதற் பன்னிரு பாடல்களும் பாலையாழ் என்ற பண்ணிலும், அடுத்து வரும் ஐந்து பாடல்களும் நோதிறம் என்ற பண்ணிலும், அடுத்து வரும் நான்கு பாடல்களும் காந்தாரம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை.

Continue Reading →

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்

ஆய்வு: சிறுபாணாற்றுப்படையில் கடையேழுவள்ளல்கள்முன்னுரை:
தமிழர்பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்வது எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமாகும் பத்துப்பாட்டில் அமைந்துள்ள ஆற்றுப்படை நூல்களுல் ஒன்று சிறுபாணாற்றுப்படை. இதன் ஆசிரியர் நல்லூர் நத்தத்தனார் இந்நூலின் கடையேழு வள்ளல்களைப் பற்றிய வரலாறு பதிவு செய்யப் பட்டுள்ளது. பேகன் பாரி காரி ஓரி ஆய் அதியமான் நள்ளி எனும் இவ்வள்ளல்களின் வரலாறு கொடைத்திறத்தைக் குறித்து ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

மயிலுக்குப் போர்வை தந்த பேகன்:
பேகன் என்பவன் ஆவியர் குடியின்கண் பிறந்தவன். பெரிய மலை நாட்டை உடையவன் அப்பேகன் மலை வளம் உலா வரும்போது பருவத்தே பெய்த மழையால் வளம் மிகுந்த பக்கத்தே வாழும் காட்டு மயில் இயல்பாக அகவியது. ஆனால் அது குளிரால் நடுங்கியது என்று எண்ணி தான் அணிந்திருந்த நுட்பமான வேலைப்பாடுகளுடைய விலை உயர்ந்த போர்வையை அதற்குப் போர்த்தி அதன் குளிரை நீக்கினான் இதனை

“கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய     அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும்” (சிறுபாண் 85-87)

எனும் பாடல் வரி விளக்குகிறது.

முல்லைக் கொடி படர தேர் தந்த பாரி:
பறம்பு மலையின் குறுநில மன்னன் பாரிபற்றி புறநானூறு அகநானூறு நற்றிணை குறுந்தொகை போன்ற தொகை நூல்கள் மட்டுமின்றி சிறுபாணாற்றுப்படையும் சிறப்புற எடுத்தியம்புகிறது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடிய வள்ளல் பெருமான் போல
கருணை உள்ளம் கொண்டவன் பாரி

Continue Reading →

கவிதை: காவியக் கலைஞனின் பயணம்!

புகழ்பெற்ற சிங்களப் பாடகரும் இசைக்கலைஞருமான பண்டிதர் டபிள்யூ.டி. அமரதேவா அண்மையில் காலமானார். அவரது நினைவாக தேசபாரதியின் இக்கவிதை பிரசுரமாகின்றது. –

அமரதேவ!

ஒரு கவிஞன் காவியம் படைத்தான்!

சூரியக் கதிர்களால்
எழுதப்பெற்றது இந்தத்
தூரனின் பயணம்!

அவன்தான்…!
வன்னகுவத்த வடுகே
டொன் அல்பேர்ட் பெரேரா!

Continue Reading →