‘நூல் அறிமுகமும் இசைச் சமர்ப்பணமும்’ :

'நூல் அறிமுகமும் இசைச் சமர்ப்பணமும்' :தமிழும்  இசையும்  இணைந்து  அரங்கேறிய  இனிமையான  நிகழ்வு  ஒன்று  22/10/2016  சனிக்கிழமை  மாலை  ஈஸ்ட்ஹாமிலுள்ள  அக்ஷயா மண்டபத்தில்  நிறைவேறியது. பிரபல எழுத்தாளர்  முல்லைஅமுதன் ஜெயராணி  தம்பதிகளின்  மூத்த  புதல்வி  கார்த்திகா  “சுப்பிரமணிய பாரதியும் மற்றுமிசை மேதைகளும்”  என்ற நூலை அரங்கேற்றியதுடன், இசைக்கலைமணி, கலாவித்தகர்..திருமதி.சேய்மணி  சிறிதரன்  அவர்களிடம்  தான்  கற்றுத் தேர்ந்த இசையையும்  சமர்ப்பணம்  செய்தார்.

முற்பகுதியில்  நூல்  அறிமுகம்,  பிற்பகுதியில்  இசைச் சமர்ப்பணமும் இடம்பெற்றது. ஆரம்பத்திலிருந்து  நிகழ்ச்சி  முடியும் வரை  சபையோர்  இருந்து  இரசித்து மகிழ்ந்தமை  இது  ஒரு  தரம்  மிக்க  நிகழ்வு  என்பதை  உறுதிப் படுத்தியது.

‘தந்தை  எவ்வழி  மைந்தரும்  அவ்வழி’  என்ற  பழமொழிக்கிணங்க  மகள் தனது  பதின்மூன்றாவது  வயதிலேயே  அழகாக  ஒரு  நூலை  எழுதி வெளியிட்டது  பாராட்டத்தகுந்தது. மகாகவி  பாரதியைப்  பற்றித்  தமிழ் மக்கள்  ஒவ்வொருவரும்  அறிய வேண்டியது  அவசியம். இருபதாம் நூற்றாண்டின்  ஆரம்பக் காலத்தில்  அறியாமை  இருளில்  மூழ்கிக்  கிடந்த தமிழ்ச்  சமுதாயத்திற்கு  அறிவொளி  ஊட்டத்  தோன்றிய  ஒளிமிகு  சூரியன் மகாகவி. அவரது  அளப்பரிய  பெருமை  மிகு வரலாற்றையும்  சில பாடல்களையும்  தனது  நூலில்  பதிவு  செய்துள்ளார்  கார்த்திகா.

அது  மட்டுமன்றி, கர்நாடக  இசை  மேன்மையுற்று  வளர  மூலகர்த்தாக்களான மும்மூர்த்திகளின்  வரலாறும், இசைப்பணியும்  மட்டுமன்றி  அவர்களுக்கு இணையான  இன்னும்  சில  இசைமேதைகளின் (கோபால கிருஷ்ணபாரதி, பாபநாசம் சிவன், சுவாதித் திருநாள்)  வரலாறும்  சுருக்கமாகவும்  தெளிவாகவும்   இந் நூலில்  இடம் பெற்றுள்ளது. ஈழத்தில்  தோன்றி  ஈழத்திலும் , தமிழ்நாட்டிலும்  இசைக்கும் , தமிழுக்கும்  தம் வாழ்வை  முழுவதும்  அர்ப்பணித்த  விபுலானந்த அடிகளின்  வரலாறும்  இந் நூலில்  இடம்பெற்றுள்ளது  குறிப்பிடத்தக்கது. இந்  நூல்  ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது  இந்  நாட்டில்  வளரும்  இளம்  தலைமுறையினருக்கு இலக்கியத்தை  அறிமுகப்படுத்தத்  துணை  நிற்கும்.  இசை கற்போர்  அனைவருக்கும் சிரந்த  கைநுலாக அமையும்.

Continue Reading →

குறமகள்: அன்புள்ளம் கொண்ட இராசாத்தி அக்கா

– எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று  சென்ற சனிக்கிழமை (12-11-2016)  குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். – குரு அரவிந்தன். –


திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.

இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.

எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.

Continue Reading →