நீதி நெறியான நட்பியல் கூறும் திருக்குறள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு (18) நூல்களைச் சேர்ந்த தொகுதியைப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று.   அப் பதினெட்டு நூல்களையும்,

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே 
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’

இவ் வெண்பாவில் காண்கின்றோம். திருக்குறள் இப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகும். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு (11)  நூல்களும் நீதி/அற நூல்களாகும். கார் நாற்பது, ஐந்திணை  ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை ஆகிய ஆறு (06) நூல்களும் அகம் சார்ந்தவை. களவழி நாற்பது என்ற ஒரு (01) நூல் புறம் சார்ந்ததாகும்.

திருக்குறள் உலகப் பொதுமுறை என்னும் சிறப்பினைப் பெற்று உலாவுகின்றது. உலகத்திலுள்ள எல்லாச் சமயத்தாரும் திருக்குறளைப் போற்றுகின்றனர். மேனாட்டு அறிஞர்கள் திருக்குறளைத் தம் மொழிகளில் மொழிபெயர்துள்ளனர். இது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பாலைக் கூறுகின்றது. அறத்துப்பால் மனிதன் வாழ்வியலின் மேன்மையைக் குறிக்கும். பொருட்பால் சமுதாய வாழ்க்கையைக் காட்டும். காமத்துப்பால் அகவாழ்வின் வெற்றியை எடுத்துக் கூறும். ‘கொல்லாமை’, ‘கள்ளுண்ணாமை’ என்னும் இரு அதிகாரங்களும் திருவள்ளுவரின் சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இவர் இதைத் தனித்து நின்று செயற்பட்டு வெற்றியும் கண்டுள்ளார். திருவள்ளுவ மாலையில், சீத்தலைச் சாத்தனார், திருக்குறளின் சிறப்பைக் கூறும் பாங்கினையும் காண்போம்.

‘மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும்
மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் – மும்மாவும்
தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ
யாமுரைதேர் வள்ளுவர்முப் பால்.’

இனி, பொருட்பாலில் வரும் நட்பியல் பற்றித் திருவள்ளுவர் கூறுவதை விரிவுபடுத்திக் காண்போம்.

Continue Reading →

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்! அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் இலக்கியவாதி!

"புதுமைப்பிரியை" பத்மா சோமகாந்தன்இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு,  இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள்.  அவர்கள்  தந்த  சுதந்திரம்  எமது அரசியல்வாதிகளுக்கு  தந்திரமானதுதான்  மிச்சம். இந்தப்பின்னணியில்  முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952  இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர்  யார்…?  என்ற பதவிப்போட்டியில் வேரோடியிருந்த   இனப்பிரச்சினை இன்னமும் தீரவில்லை. சிங்களத்தலைவர்கள்  பதவிக்கு  வரவேண்டுமானால்  இலங்கை தேசிய  சிறுபான்மை  இனங்கள்  பலிக்கடாவாகவேண்டும். 1955 இல் பிரதமராக யாழ்ப்பாணம் சென்ற சேர். ஜோன் கொத்தலாவலை, வடபுலத்து மக்கள் வழங்கிய மாலை மரியாதை வரவேற்பினால் மனம் குளிர்ந்து, ” தமிழுக்கும் சிங்களத்திற்கும் சம அந்தஸ்து வழங்க சட்டம் கொண்டுவருவேன்” என்றார். இதனை தவறாகப்புரிந்துகொண்ட எச். எல். மேத்தானந்தா என்ற ஒரு பௌத்த மத தீவிரவாதி ” சரிதான், இனிமேல் சிங்களவர்களும் தமிழ்தான் படிக்கவேண்டிவரும் ” என்று தென்னிலங்கையில் வகுப்புவாதம் கக்கத்தொடங்கினார். அதனை தனக்குச்சாதமாக்கினார் பண்டாரநாயக்கா. இதனைப்புரிந்துகொண்ட கொத்தலாவலை, தாமதிக்காமல் ஒரு பல்டி அடித்தார். 1956 இல் களனியில் ஐ.தே.கட்சி மாநாட்டில், தனிச்சிங்களமே ஆட்சி மொழி என்றார். பண்டாரநாயக்கா அதன் பிறகும் சும்மா இருப்பாரா…? தாம் பதவிக்கு வந்தால் 24 மணிநேரத்தில் சிங்களத்தை ஆட்சிமொழியாக்குவேன் என்றார். ஐ.தே.க.வை தோற்கடிக்க ஐம்பெரும் சக்திகளை (பஞ்சமா பலவேகய) திரட்டிக்கொண்டு தேர்தலில் வென்ற பண்டாரநாயக்காவுக்கு உண்மையில் அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை. டீ.எஸ். சேனாநாயக்காவுக்குப்பிறகு தனக்கு வரவேண்டிய சந்தர்ப்பம் டட்லிக்கும் அவரையடுத்து கொத்தலாவலைக்கும் சென்றதுதான்  அவரை சிங்கள தீவிரவாதம் பேசக்காரணமாக இருந்திருக்கிறது. அதற்குப்பின்னாலிருந்து நெருப்பு மூட்டியவர்கள் மேத்தானந்தா, புத்தரகித்த தேரோ ஆகியோர்.

இன்றும் இந்தக்கதைதான் வேறு வேறு ரூபத்தில் இலங்கையில் நீடிக்கிறது. ஏறச்சொன்னால் எருதுக்குக்கோபம் இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்பார்களே… அவ்வாறு யாராவது ஒரு சிங்களத்தலைவர் இனப்பிரச்சினைக்கு  தீர்வுகொண்டுவந்தால் மற்ற சிங்களத்தலைவர் எதிர்ப்பார். இன்று எதிர்ப்பவர் நாளை பதவிக்கு வந்து நல்ல தீர்வு சொன்னால், முன்னர் நல்ல தீர்வுகொண்டுவர விரும்பியவர், அதனை ஆதரிக்காமல் எதிர்ப்பார். இது முற்றுப்பெறாத கதை.

இது இவ்விதமிருக்க,  இந்த வரலாற்றில் வரும் மேத்தானந்தா போன்றதொரு இனவாதியை அதே பெயரில், சித்திரித்து 1956 இல் காலிமுகத்தில் தமிழ்த்தலைவர்கள் சத்தியாக்கிரகம் நடத்தியபோது இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் ஒரு சிறுகதையை தமிழில் எழுதியிருப்பவர் யார் என்று பார்த்தால் எமக்கு அதிசயமாக இருக்கிறது. ஆனால், அது அதிசயம் அல்ல உண்மை.

Continue Reading →