1. அனாதையாகி விடுவேன்……
நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ….
அப்படியில்லை இதுதான்…..
உண்மை காதலின் ……
அடையாளம்….!!!
வாழ்க்கையில் ….
எல்லாம் இழந்துவிட்டேன்…..
உன் நினைவையும் இழந்தால்……
அனாதையாகி விடுவேன்……
1. அனாதையாகி விடுவேன்……
நினைவுகள்
வலியிருக்கும்-உன்
நினைவுகள் என்னவோ….
அப்படியில்லை இதுதான்…..
உண்மை காதலின் ……
அடையாளம்….!!!
வாழ்க்கையில் ….
எல்லாம் இழந்துவிட்டேன்…..
உன் நினைவையும் இழந்தால்……
அனாதையாகி விடுவேன்……
1. அஞ்சலி: அனலில் நடந்தாள்…(மறைந்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா நினைவாக)
அனலில் நடந்த அங்கயற்கண்ணியவள்
அகண்ட அறிவு, அழகுடையாள்.
அதிகார ஆட்சியில் அமர்ந்தாள்
இதிகாசமானாள் சந்தனப் பேழையுள்.
திருமதி ஆகாமலே ஜெயலலிதா
பெறுமதி அம்மாவென ஆகியவள்.
வருமதியாம் பாத வணக்கத்தால்
சிறுமதியோவெனும் இகழ்வைப் பெற்றாள்.
மாளிகைச் செல்வியிறுதி நகர்வு
மாபெரும் மக்கள் திரளோடு.
மாதுரியமான மொழி அறிவோடு
மாணிக்கப் பரலானாள் இந்தியாவிற்கு.
வறியோருக்கு இரங்கி உதவினாள்.
செறிவான புகழும் பெற்றாள்.
குறியான போராளி அவள்.
அறிவாய் உன்னையெவரும் மறக்கார்.
எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் இரண்டிலொன்று மகாகவி பாரதியாரின் ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதை. எனக்குப் பிடித்த இயற்கை நிகழ்வுகளிலொன்று கொட்டும் மழையினை இரசிப்பது. வயற்புறத் தவளைகளின் கச்சேரிகளை இசைத்தபடி, ஓட்டுக் கூரையில் பட்டுத்தெறிக்கும் கொட்டும் மழையொலியை , இரவின் தனிமையில் படுக்கையில் படுத்திருந்தபடி இரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான செயல்களிலொன்று. மழை பற்றிய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கவிதைகளிலொன்று மகாகவி பாரதியாரின் ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதை.
டிசம்பர் 11 மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். அதனையொட்டி அவர் நினைவாக எனக்குப் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான ‘திக்குகள் எட்டும் சிதறி’ கவிதையினயும் கேட்க விரும்பியதன் விளைவு இந்தப்பதிவு.
அண்மையில் மறைந்த அமரர் இன்குலாப் நினைவாக எனக்கு மிகவும் பிடித்த அவரது கவிதைகளிலொன்றான ‘ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்’ என்னும் கவிதையையும், அவர் பற்றிய விக்கிபீடியாக் குறிப்பினையும் பகிர்ந்துகொள்கின்றேன். ‘சமயம் கடந்து மானுடம் கூடும், சுவரில்லாத சமவெளி தோறும், குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்; மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்’ என்று பாடிய மக்கள் கவிஞன் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டான். ஆனால் அவன் தன் எழுத்துகளோடு என்றும் வாழ்வான்.
ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா வருவது அக்கட்சியினரின் பிரச்சினை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இறுதிவரையில் எதற்காக யாரையும் சந்திக்காத வகையில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்? எதற்காக அப்பலோ மருத்துவ நிலையம் அடிக்கடி அவரது உடல் நிலை பற்றி சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட வேண்டும். இச்சந்தேகங்கள் அனைத்தையும் தீர்க்கும் வகையில் அப்பலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமரர் ஜெயலலிதாவின் நிலையினை வெளிப்படுத்தும் காணொளிகள் வெளியிடப்பட வேண்டும். இச்சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால் மட்டுமே சசிகலா அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களின் ஆதரவைப் பெற முடியும். ஜனநாயக நாடொன்றில் மாநிலமொன்றின் முதல்வர் இவ்விதம் நடத்தப்பட்டிருப்பது கேள்விக்குரியது மட்டுமல்ல கேலிக்குரியதுமாகும்.
பல சந்தேகங்களை ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியிருப்பதால் அவரது உடல் நிலை பற்றிய சந்தேகங்கள் தீர்க்கப்படாமல், அதிமுகவின் அடிமட்டத்தொண்டர்களைப்புறக்கணித்து அதிமுகவின் முக்கிய புள்ளிகள் செயற்படுவார்களென்றால் , எதிர்காலச்சட்டசபைத்தேர்தலில் அதிமுக பல பிரிவுகளாகப் பிரிபடுவது தவிர்க்க முடியாதது.
உண்மையில் ஜெயலலிதாவின் உடல் நிலை ஆரம்பத்திலிருந்தே மிகவும் ஆபத்தான கட்டத்திலிருந்திருக்கலாம். அவரது உண்மை நிலை மக்களுக்கூ தெரிந்தால் மக்கள் கொதித்தெழலாம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது சிரமமாயிருக்கும். எனவே மக்களை ஜெயலலிதாவின் முடிவுக்குத் தயார் செய்து அவரது முடிவினை அறிவித்திருந்தால் மக்கள் பொங்கியெழ மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்தால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி ஏற்படலாம். அதனைக்காரணம் காட்டி மத்திய அரசு அதிமுக அரசைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை நிலை பிரதமர் மோடிக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் போலும் அவர் ஜெயலலிதாவை அப்பலோ மருத்துவ நிலையத்துக்கு வந்து பார்க்கவில்லையோ தெரியவில்லையோ?
பாட்டும் தொகையுமெனப் பகுக்கப்பட்டுள்ள சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழர்தம் பல்வேறு வாழ்வியல் மரபுகளைப் பதிவு செய்துள்ள சமூக ஆவணங்களாக விளங்குகின்றன. சமூகம் உருவான தன்மை குறித்தும், அரசுகள் உருவான தன்மை குறித்தும் விளக்கும் சங்க இலக்கியங்கள் பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் இயங்கியல் போக்கை, ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமச்சீரற்ற சமூக வளர்ச்சிப் போக்கை வெளிப்படுத்தி நிற்கின்றன.
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் அரசு எனும் அமைப்பு உருவாகி வளர்ந்ததைப் பல்வேறு ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். இதனடிப்படையில் சங்க கால அரசுருவாக்கம் என்பது சீறூர் மன்னர், முதுகுடிமன்னர், மன்னர், வேந்தர் எனும் படிநிலைகளைக் கொண்டதாக இருந்துள்ளமையை அறியலாம். இவ்அரசு உருவாக்கங்களில் இனக்குழுச் சமூகப்பண்புகளைக் கொண்டதாகக் காணப்படும் சீறூர் மன்னர் சமூக அரசமைப்பு முதன்மை பெறுகிறது. இத்தகைய சீறூர் மன்னர்தம் குடிக்கே உரியப் பண்புகளாகக் கூட்டுழைப்பு, கூட்டுண்ணல், விருந்தோம்பல், நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில், தண்ணடை பெறுதல், மறத்துடன் விளங்குதல் என்பனவற்றைச் சங்கப் பனுவல்கள் சிறப்ப்பகப் பதிவு செய்துள்ளன. இக்குடிமைப் பண்புகளில் நடுகல் வழிபாடு, வேந்துவிடுதொழில் என்பவற்றைக் குறித்து ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
இனக்குழுச் சமுதாயமும் சீறூர் மன்னரும்
‘சங்கப் பாடல்கள் ஒன்றுக்கொன்று மாறான இரு வேறுபட்ட சமுதாய வாழ்வியல்புகளைக் காட்டுவனவாய் உள்ளன. சிறப்பாகப் புறநானூற்றுப் பாடல்கள் புராதன விவசாயப் பொருளாதாரத்தையும் கால்நடைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனக்குழுச் சமுதாய எச்சங்களைத் தாங்கிய வன்புலச் சமுதாயத்தையும், மருதநிலச் சமுதாயத்தையும் சமகாலச் சமுதாயங்களாகக் காட்டுகின்றன. இவ்விருவகைச் சமுதாயங்களும் நிலம், போர்முறை, போர்நோக்கம், வழிபாட்டுமுறை, உடைமைநிலை, புலவர் மன்னர் உறவுநிலை, வள்ளண்மை, தலைவர் குடிமக்கள் உறவுநிலை எனும் பல்வேறு நிலைகளிலும் ஒன்றுக்கொன்று முரணான இயல்புடையனவாய்க் காணப்பெறுகின்றன.’ 1
1. மழுங்கிய முனைகள்
அது ஏனோ தெரியவில்லை
உண்மையான அறிவையும் உயர்வான உழைப்பையும்
உப்பளமாய் மண்டியுள்ள செல்வாதிகாரச்செல்வாக்குகளின் முன்
மண்டியிட்டுக் குழையத் தெரியாத ஆளுமையையும்
கண்டாலே
உதறலெடுக்க ஆரம்பித்துவிடுகிறது சிலருக்கு….
உளறத் தொடங்குவதோடு நில்லாமல்
உருட்டுக்கட்டைகளையும் தூக்கிக்கொண்டு துரத்திவருகிறார்கள்.
ஊரும் பேரும் சீரும் சிறப்பும்
யாருடைய பரம்பரைச் சொத்தும் அல்ல.
வெள்ளத்தால் போகாது வெந்தணலில் வேகாது என்று
பன்னிப்பன்னிச் சொன்னாலும்
புரிந்துகொள்ளவியலாப் பேதைகள்
போதாததற்கு பதவுரை பொழிப்புரையெல்லாம்
தயாரிக்கத்தொடங்கிவிடுகிறார்கள்.
‘எதற்கு?” என்ற கேள்வி சிலரால்
‘எவ்வெவற்றுக்கு?’ என்று உள்வாங்கப்பட,
சிலரால் ‘என்ன கருமாந்திரத்துக்கு’ என்று கொள்ளப்படலாம்.
கவிதைக்குத் திறந்த முனை யிருக்கலாம் – எனில்
தவறைத் தவறெனச் சொல்வதிலும் சொல்லாதிருப்பதிலும்
சரிவருமோ, செய்யத் தகுமோ அது?
தேர்ந்தெடுத்த மீட்பரும் மீட்கும் தொழில் நம்முடையதென மறந்து போனார்.எந்திர எச்சில் பெற எறும்புகள் வரிசையில் நகர்கின்றன.எச்சிலை வாங்கியபடி வியர்வையைத் துடைத்தபடி எறும்புகள் வீட்டுக்கு திரும்புகின்றன நிம்மதியாக.தடாலடியாக தேசம்…
எங்கோ ஓர் மூலையில் இலை மறை காயாக இருந்து கொண்டு இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்களை இனங்கண்டு அவர்களை உலகறியச் செய்யும் பணியை புரவலர் புத்தகப் பூங்கா மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பு மூலம் இதுவரை 37 நூல்கள் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றன. இவ்வமைப்பின் நிறுவனரான புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் இலக்கிய உலகுக்கு தன்னாலான பல பங்களிப்புக்களை செவ்வனே செய்து வருபவர். இதுவரை பல முதற் பிரதிகளைப் பெற்று எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதனூடாக ஒரு வரலாற்று சாதனையாளராக திகழ்கின்றார். புரவலர் புத்தகப் பூங்காவின் 37 ஆவது வெளியீடாக வெளிவந்திருக்கிறது இராகலை தயானியின் அக்கினியாய் வெளியே வா கவிதைத் தொகுதி. 57 கவிதைகளை உள்ளடக்கி 72 பக்கங்களில் வெளிவந்திருக்கும் இந்தத் தொகுதியில் மலையகம் சார்ந்த, பெண்கள் சார்ந்த கவிதைகளே விரவிக் காணப்படுகின்றன.
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட புறூக் சைட் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தயானி விஜயகுமார் தற்போது அரசியல் விஞ்ஞான முதுமாணிப் பட்டம் கற்றுக் கொண்டிருக்கிறன்றார். ஒரு எழுத்தாளன் தன் படைப்பினூடாக தனது வாழ்க்கை முறை பற்றியும், அதில் அவன் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் முழு சமுதாயத்துக்கும் அறியத் தருகின்றான். அன்றாட வாழ்வில் தன்னைச் சார்ந்தோர் படும் இன்னல்களையும் துன்பங்களை காணச் சகிக்காது அவனது பேனா மைகொண்டு அழுகின்றது. அத்தகையதொரு எழுத்தாளராக இராகலை தயானி காணப்படுகின்றார். நாட்டுக்காக உழைத்துக் களைத்து, கறுத்துச் சிறுத்துப் போன தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வியல் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மனதைப் பிசைகின்றன. அபலையாய் விடப்பட்ட பெண்கள் பற்றியும் இவரது கவிதைகள் நிறையவே பேசியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் இவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கோபாவேசம் கொள்வதையும் கவிதையின் வரிகளில் காணமுடிகிறது.
அக்கினியாய் வெளியே வா (பக்கம் 11) என்ற கவிதை ஒரு தாயின் மனக்குமுறலாகக் கொந்தளிக்கின்றது. வயிற்றில் சுமக்கும் குழந்தைக்கு தாய் கூறும் அறிவுரையாக அல்லது வலிகளின் வெளிப்பாடாக இக்கவிதை அமைந்திருக்கின்றது. அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போன மலையக மக்கள் இனிமேலாவது தமது எதிர்கால சந்ததிகளை சுதந்திரப் பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்பதை தயானி இக்கவிதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்புக்குரியது.
பண்டைத் தமிழ் ஆன்றோரும், சான்றோரும் தம்வாழ்வியலை அகம், புறம் என இருவகைப் படுத்தி ஆய்வு மேற்கொண்டனர். அகம் என்ற அகவாழ்வில் எழும் காதலன்பு, அன்பின் எழுச்சி, நெறியோடு சேர்ந்த வாழ்வின் தகைமை ஆகியவை இப்பகுதியிற் பேசப்படுவதைக் காணலாம். புறம் என்ற புறவாழ்வில் மேற்கொள்ளவேண்டிய முறைகள், ஆண்மை சார்ந்த பணிகள், போரியல் மரபு, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகள் ஆகியவை இப்புறத்திற் கூறப்படுவதைக் காண்கின்றோம். அகம் என்ற பகுதியை ஒருதலைக் காமம் என்றும், அன்புடைக் காமம் என்றும், பொருந்தாக் காமம் என்றும் மூன்று பகுதிகளாகக் காட்டுவர். இன்னும் இவற்றை முறையே கைக்கிளை என்றும், அன்பின் ஐந்திணை என்றும், பெருந்திணை என்றும் தொல்காப்பியர் (கி.மு.711) ஏழு (07) திணைகளை எடுத்துக் காட்டுவர்.
‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.’ – (பொருள். 01)
மேற்கூறப்பட்ட ஏழு திணைகளுள், நடுவென்று கூறப்பட்ட பாலைத்திணை ஒழியக், கைக்கிளை பெருந்திணைக்கு நடுவாகி நின்ற ஐந்திணைகளும், கடல்சூழ்ந்த உலகம் பகுக்கப் பட்டிருக்கும் இயல்பாகும்.
‘அவற்றுள்,
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே.’ – (பொருள். 02)
மேற்காட்டிய ‘நடுவண் ஐந்திணை’ – குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்பனவாம்.
பெரியோரின் செய்யுளை ஆராய்ந்தால், முதற்பொருள் எனவும், கருப்பொருள் எனவும், உரிப்பொருள் எனவும் கூறப்பட்ட மூன்று பொருள்களுமே காணப்பெறும் என்று தொல்காப்பியர் சூத்திரம் கூறும்.
‘முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந் தனவே
பாடலுட் பயின்றவை நாடுங் காலை.’ – (பொருள். 03)