“அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்” ‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் படைப்புகள் அதிக அளவில் வருவதால் உடனுக்குடன் பிரசுரிப்பதில் சிறிது சிரமமிருப்பதைப் புரிந்து கொள்வீர்களென்று கருதுகின்றோம். கிடைக்கப்பெறும் படைப்புகள்…
முன்னுரை
தமிழில் தோன்றிய முதல் இலக்கியம் சங்க இலக்கியம் ஆகும்.இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேற்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படுகின்றன.காலத்தின் கோலத்தால் அறநூல்கள் தோன்ற வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டதால் சங்க காலத்தை அடுத்து உள்ள காலமான சங்க மருவிய காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு ,புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன. பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் காரியாசன்.இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.இக்கருத்தைப் பாயிரப் பாடல் கடவுள் வாழ்த்து உறுதிப்படுத்துகின்றது.இவர் சமண சமயத்தவத்தவரானாலும்இசமய சார்பற்றக் கருத்துக்களை மிகுதியாகக் கூறியுள்ளார்.சிறுபஞ்சமூலம் என்னும் சொல்லுக்கு
ஐந்துவேர்கள்என்றுபொருள்படும்அவையாவனசிறுவழுதுணைவேர்,நெருஞ்சிவேர், சிறுமல்லிவேர் ,பெருமல்லிவேர்,கண்டங்கத்திரிவேர் ஆகிய ஐந்தின் வேர்கள் சிறந்த மருந்தாக உடல் நோயைப் போக்குவது போல் இந்நூலுள் வரும் ஒவ்வொரு பாடலும் ஐந்து நீதிகளைத் தொகுத்துக் கூறுகின்றன இவை மக்களின் நோய் நீக்கும் என்பதால் இதற்குச் சிறுபஞ்சமூலம் என்று பெயர் வழங்கப்பட்டது.இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 102 பாடல்கள் உள்ளன.ஆயினும் 85 ஆம் பாடலில் தொடங்கி 89 ஆம் பாடல் வரை ஐந்து பாடல்கள் காணப்பெறவில்லை ஆனால் சென்னைப் பல்கலைக்கழகப் புறத்திரட்டில் 85,86,87-ஆம் எண்களுக்கு உரிய பாடல்கள் உள்ளன.இதற்கு உரியசான்று முடியாதததானால் நூலின் இறுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.இந்நூல் நான்கு வரிகளில் ஐந்து பொருள்கள் சிறந்த முறையில் அமைந்துள்ளன.இந்நூலில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கவியரசு கண்ணதாசனைத்தேடி தொலைதூரத்திலிருந்து அவரது அபிமான ரசிகர் வந்துள்ளார். ” எதற்காக இவ்வளவு தூரத்திலிருந்து என்னைத் தேடிவந்தீர்கள்…?” என்று கண்ணதாசன் அவரைக்கேட்டதும், ” உங்கள் பாடல்களும் அதிலிருக்கும் கருத்துக்களும் என்னை பெரிதும் கவர்ந்தன. எனது வாழ்நாளுக்குள் உங்களை நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல்.” எனச்சொன்னார் அந்த ரசிகர்.
” தம்பி… மரத்தைப்பார். அதில் பூக்கும் மலர்களையும், காய்க்கும் கனிகளையும் பார். அவற்றை ரசி, புசி. ஆனால், அந்த மரத்தின் வேரைப்பார்க்க முயற்சிக்காதே… மரம் பட்டுவிடும். அதுபோன்று, ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச்சென்றால், சாப்பிட்டுவிட்டு அதற்குரிய பணத்தை கொடுத்துவிட்டு போய்விடவேண்டும். நீ சாப்பிட்ட உணவு தயாரிக்கும் ஹோட்டலின் சமையலறைப்பக்கம் சென்றுவிடாதே. பிறகு நீ எந்த ஹோட்டலிலும் சாப்பிடமாட்டாய்” என்றார் வாழ்க்கைத்தத்துவப்பாடல்களும் எழுதியிருக்கும் கவியரசர்.
இந்தத்தகவலை எழுதும் எனக்கும் எழுத்தாளர்களை தேடிச்சென்று பார்க்கவேண்டும், அவர்களுடன் உறவாடவேண்டும் என்ற ஆசை எழுத்துலகில் பிரவேசித்த காலம் முதலே தொடருகின்றது. நான் எனது வாழ்நாளில் பல எழுத்தாளர்களை அவர்களின் இருப்பிடம்தேடிச்சென்று நட்புறவை ஏற்படுத்திகொண்டவன். தமிழ்நாடு இடைசெவல் கரிசல் காட்டில் கி. ராஜநாராயணன், குரும்பசிட்டியில் இரசிகமணி கனகசெந்திநாதன், அளவெட்டியில் அ.செ. முருகானந்தன், தலாத்து ஓயாவில் கே. கணேஷ், மினுவாங்கொடையில் தமிழ் அபிமானி ரத்னவன்ச தேரோ, திருகோணமலையில் நா. பாலேஸ்வரி, தொண்டமனாறில் குந்தவை, மாஸ்கோவில் விதாலி ஃபுர்னிக்கா, சென்னையில் ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், கோயம்புத்தூரில் கோவை ஞானி ….. இவ்வாறு பலரைத் தேடிச்சென்றிருக்கின்றேன். ஆனால், என்றைக்கும் என்னால் சந்திக்கமுடியாமல் மறைந்துவிட்ட, அடிக்கடி நான் நினைத்துப்பார்க்கும் ஒருவர்தான் பல பெயர் மன்னன் தருமுசிவராம். அவர் இன்றிருந்தால் அவருக்கு 78 வயது ( பிறந்த திகதி 20 ஏப்ரில் 1939).
தமிழ்க்கவியின் கிளிநொச்சியும், மலையகத்தமிழரும் -தமிழ்க்கவி’ என்ற கட்டுரை வாசித்தேன். நல்லதோர், ,அரிய தகவல்களை உள்ளடக்கிய கட்டுரை. நல்லதோர் ஆய்வுக்கட்டுரையாக வந்திருக்க வேண்டிய கட்டுரை மேலும் பல தகவல்களை உள்ளடக்காமல் போனதால் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளிலொன்றாக வரமுடியாமல் போய்விட்டது. குறிப்பாக வட, கிழக்கில் பெருமளவு மலையகத்தமிழர்களை எழுபதுகளில் குடியேற்றிய காந்திய அமைப்பு பற்றி எந்தவிதத்தகவல்களுமில்லை.
அது தவிர கட்டுரை சிறப்பானதொரு கட்டுரை.
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழுள்ள விடயங்களுக்காக இணையத்தில் பலர் தமிழ்க்கவியைத் தாக்கி வருகின்றார்கள்.
1. “மலையகத்தில் இருந்தது போலத் தான் இப்பவும் இருக்கிறோம். என்ன அங்கை குளிர் இங்கை வெயில். அவ்வளவுதான் என்றார் ஒரு முதியவர். இவர்களது பெண்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரங் கள் இல்லாதவர்கள் அதிகம். ஒரு குடும் பத்தில் பதினைந்து பதினெட்டு வயதிலுள்ள பிள்ளைகளுக்கு பிறப்பு அத் தாட்சி இல்லை என்றபோது அப்பிள்ளை களின் தாய், தந்தை இருவருக்குமே இல்லை என்பதை அறிந்த போது திடுக்கிட்டோம்.
எழுத்தாளர் கடல்புத்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் 1984 -1987 வரையிலான காலப்பகுதியில் வடக்கு அராலிப்பொறுப்பாளராக இயங்கியவர். இவரைப்போல் பல இளைஞர்கள், சிறுவர்கள் அக்காலப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் போராளிகளாக யாழ்ப்பாணத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இயங்கியவர்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் படிப்படியாக போராட்டம் சென்று கொண்டிருந்த வேளை அது. இருந்தாலும் வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் இவர்களைப்போன்றவர்கள் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சின்னமெண்டிஸின் மறைவு வரை மட்டும் இயங்கிப் பின் முற்றாக இயக்க நடவடிக்கைகள் ஸ்தம்பிக்கப்பட்ட நிலையில் மனத்தளர்ச்சியுடன் போராட்டத்திலிருந்து அமைதியாக ஒதுங்கிப்போனவர்களில் இவருமொருவர்.
அண்மையில் இவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது நான் கூறினேன் ” நீங்கள் ஏன் உங்கள் காலகட்ட இயக்கச் செயற்பாடுகளை எழுதி ஆவணப்படுத்தக் கூடாது ” என்று. இவரைப்போல் பின் தளத்தில் இறுதிவரை இயங்கிய போராளிகள் யாரும் தம் அனுபவங்களைப் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இதுவரை பதிவு செய்தவர்கள் அனைவரும் பல்வேறு இயக்கங்களிலும் முன்னணியில் இருந்த ஆரம்பக்காலத்தைச் சேர்ந்தவர்களே (எல்லாளன் ராஜசிங்கத்தின் போராட்ட அனுபவக்குறிப்புகள் தவிர) என்று நினைக்கின்றேன்.
இவரைப்போன்றவர்கள் பதிவு செய்வதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்வருமாறு பட்டியலிடலாம்:
வாழியவே கனடியராம் மலாலா பெண்ணாள்
வாழியவே ஐக்கியநா டுவந்த நோபல்
வாருலகில் உரிமையொடும் மகளிர் வாழ்;வு
வாழியவே வையமெனும் சமத்து வத்தாய்
யூசுப்சாய் மலாலாவென் றெழுதும் காந்தள்
வாழியவே கனடாவென் றுவந்த போதில்
மணித்தீபம் மனிதமுமாய் மலர்ந்த(து) அம்மா!
கனடியநாட் டுரிமையினை இன்று பெற்றேன்
பெருங்கனடா வரலாறு பேசும் ஆறாம்
மனிதரென என்சிறப்பு யானும் பெற்றேன்
மகிழுலகம் சமதானம் வழங்கு மென்பேன்!
புனிதமென என்பயணம் பிறக்கும் வையம்
பேசுமொரு கனடியத்தாய் பெற்றுத் தந்தாள்
நனிவிழாவாஞ் சபையிதனில் நிறைந்தோர் மாட்டே
நன்றியுடன் நிற்கின்றேன் மனிதம் வாழ்க!
அருவி என்னும் குறும்படத்துக்கான இணைப்பினை நண்பர் ரதன் அனுப்பியிருந்தார். இன்றுதான் அக்குறும்படத்தினைப்பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. பார்த்ததும் ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பார்கள். அத்துணை சிறப்பாக ஒரு நீள்படத்தை விட இக்குறும்படம் விளங்கியது. அம்புலி மீடியா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட குறும்படமான ‘அருவி’ இன்றைய சூழலில் புகலிடச்சூழலில் வாழும் தமிழ்ப்பெற்றோர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இக்குறும்படம் டொராண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குறும்படத்துக்கான விருதினைப் பெற்றுள்ளதையும், நோர்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் உத்தியோகபூர்வத் தேர்வு விருதினையும் மற்றும் டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ்த்திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதினையும் பெற்றுள்ளதையும் குறும்படத்திலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது.
பணம், பணம் என்று ஓடி அலையும் பலர் குழந்தைகளை, அவர்களது விருப்பு வெறுப்புகளைக் கவனிக்கத்தவறுகின்றார்கள். குழந்தைகளின் திறமைகளைப் புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொண்டும் அவை பற்றிக்கவனத்திலெடுக்காமல், தம் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப குழந்தைகளை வளர்க்க முற்படுகின்றார்கள். தம் விருப்பு வெறுப்புகளை அவர்கள் மேல் திணிக்கின்றார்கள்.
ரவிராஜ் வீடு ஒன்றை வாங்கினான். மனைவி பவித்திராவிற்கு வீடு நன்றாகப் பிடித்துக் கொண்டது. உரிமையாளர் வீட்டைச் சுற்றிக் காட்டினார். வீட்டைப் பற்றி விலாவாரியாகச் சொன்னார். ஒரு குடும்பத்தைத் தவிர, அயலவர்களைப் பற்றி பெருமையாகச் சொன்னார். இவர்களுக்கு எதிர்ப்புறமாக இருந்த வீட்டுக்காரர்களில் அவருக்கு திருப்தி இருக்கவில்லை. அவர்களைப் பற்றி மேலெழுந்தவாரியாக சில குறைபாடுகளைச் சொன்னார்கள். மனைவி விவாகரத்துப் பெற்றவள். மூன்று பெண்பிள்ளைகள். குப்பைக்குடும்பம். கூத்துக்குடும்பம். இவை போதாதா அந்தக் குடும்பத்துடன் பழகுவதா இல்லையா என மூடிவு செய்ய? ரவிராஜ் குடும்பத்தினர் அவர்களுடன் பழகுவதில்லை என முடிவு செய்தனர்.
வீட்டிற்குப் போன முதல்நாள் மாலை நேரம் – பக்கத்து வீட்டுப் பெண்பிள்ளை—ஏழோ எட்டோ படிக்கக்கூடும்— தனது நண்பி ஒருத்தியுடன் வந்து வீட்டின் கதவைத் தட்டினாள். அவள் தன் மார்புடன் இரண்டு பந்துகளை அணைத்திருந்தாள். மகனை தங்களுடன் விளையாட அனுப்பும்படி கேட்டாள். மகன் படிக்கப் போய்விட்டதாக பொய் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தாள் பவித்திரா.
அந்த வீட்டில் இரவு முழுவதும் திருவிழா போல விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். எந்நேரமும் கார்கள்—கார் என்று சொல்லமுடியாது வாகனங்கள்—வருவதும் போவதுமாக நிறைந்திருக்கும். அதே போல எல்லாவிதமான மனிதர்களும் வந்து போவார்கள். அந்த வீட்டிற்கு புல்லு வெட்டுபவனின் கார் பெட்டியுடன் சிலவேளைகளில் இரவும் தரித்து நிற்கும். வந்து போகும் பெண்களில் அனேகமானவர்கள் இளமையாக இருக்கின்றார்கள்..
எம் இனிய ‘பதிவுகள்’ வாசகர்கள், படைப்பாளிகள். அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துகள். உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பூத்துச்சொரிவதாக. சின்னஞ்சிறு இலங்கைத்தீவில் இச்சித்திரைப்புத்தாண்டிலாவது இனங்களுக்கிடையில் கூடிய புரிந்துணர்வு…
1. மறந்த கதை
தலை பெருத்து விழிபிதுங்க
காற்றுப்போன பலூன் போல
உடல் ஒடுங்கி
முதுகெலும்போடு ஒட்டிக்கொள்கிறது,
அரித்துக் கொட்டிய
சுவாசப்பையின் நாளங்கள்
ஆக்சிஜன் காற்றை உள்ளிழுத்து
வைத்துக் கொள்ள முடியாதளவுக்கு
ஆயிரம் ஓட்டைகள்
கணத்தில் விழுந்து விடுகிறது.
ஈக்களும், கொசுக்களும்
புகையடித்து சுருண்டு வீழ்ந்து
துடிக்கும் போது
ரசித்து நகைத்தது போல்
பிஞ்சுகளின் மரண வலியையும்
மூச்சு திணறலையும்
நாசிகளின் பேரன்கள்
தொலைக்காட்சியில் லயித்துக் கொள்கின்றனர்.
மனித குலம் மேம்பட
மறவராய் புறப்பட்ட செம்பட்டை
மாற்றான் தோட்டத்து
மல்லிகைப் பூவை கூட
மலர விடாது தடுத்துவிடுகிறது.