வாசிப்பும், யோசிப்பும் 238 : பன்முக ஆற்றல் வாய்ந்த கலைஞர்!

கலைஞர் கருணாநிதிகலைஞர் கருணாநிதியின் தொண்ணூற்று நான்காவது வயதினைக் கொண்டாடுகின்றார்கள். கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, அறிஞர் அண்ணா இவர்களைப் போன்றவர்களின் வரலாற்று பன்முகப்பட்டது. அரசியல், கலை, இலக்கியம் எனப்பன்முகமானது. எனவே இவர்களது சமுதாயப்பங்களிப்பு பற்றிய விமர்சனங்களைத் தனியே அரசியலுடன் மட்டும் நிறுத்திவிட முடியாது. அந்த வகையில்தான் நான் கலைஞரின் வரலாற்றை அணுகுகின்றேன்.

அவரது தமிழ்த்திரைப்படத்துறையில் அவரது பங்களிப்பை மறக்க முடியாது. ஒரு காலத்தில் தமிழ்த்திரையுலகைப் பாடல்கள்  ஆட்டிப்படைத்தன. எம்.கே.தியாகராஜா பாகவதர், பி.யு.சின்னப்பா என்று தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் கோலோச்சிய காலகட்டம் அது. பின்னர் தமிழ்த்திரையுலகை வசனங்கள் ஆட்டிப்படைத்தன. இளங்கோவனின் கண்ணகி அதற்கு நல்லதோர் உதாரணம். அதன் பின்னர் தமிழ்த்திரையுலகைக் கலைஞரின் வசனங்கள் ஆட்டிப்படைத்தன. ‘பராசக்தி’ நல்லதோர் உதாரணம். சமுதாயச்சீர்திருத்தக் கருத்துகளைத்தமிழ்த்திரையுலகில் விதைத்தவைத் திமுகவினரின் திரைப்படங்கள். அந்த வகையிலும் சமுதாய அநீதிகளைத் தட்டிகேட்ட ‘பராசக்தி’ போன்ற திரைப்படங்கள் முக்கியமானவை. ‘பூம்புகார்’ திரைப்படமும் அவரது முக்கியமான திரைப்படங்களிலொன்று. தமிழ் நாடகத்துறையிலும் திமுகவினரின் அத்துறைக்கான பங்களிப்பு விரிவாக ஆராயப்பட வேண்டியது. தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியராகவும் கலைஞர் பல முக்கியமான பாடல்களை எழுதியுள்ளார். அவற்றையும் தவிர்ப்பதற்கில்லை.

தமிழ் இலக்கியத்திலும் கலைஞரின் எழுத்து நடை முக்கியமானது. ஒரு காலத்தில் வாசகர்களைக் கட்டிப்போட்ட நடை. அடுக்கு மொழிகள், எதுகை மோனைகளால் நிறைந்த வாசிப்பவர் நெஞ்சினை அள்ளும் நடை அது. கூறும் பொருளைச் சுவையான தமிழில் கூறுவதில் வல்லவர் கலைஞர். தமிழ் இலக்கிய வரலாற்றில் திமுகவினரின் எழுத்துக்கும் ஒரு குறிப்பிட்ட காலப்பங்களிப்பு உண்டு. அவற்றைத்தவிர்க்க முடியாது.

Continue Reading →