வாழ்த்துகிறோம்: எழுத்தாளர் டொமினி ஜீவாவுடன் ஒரு மாலைப் பொழுது (90 பிறந்த தினத்தை முன்னிட்டு – 27.06.2017)

மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 வரை …

Continue Reading →

சிறுகதை: முழுக்கைகள்

சுப்ரபாரதிமணியன்காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள்  விடுமுறை என்று பெனாசிர்  சொல்லியிருந்தாள்.  புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய  இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.

பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன  சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.   

“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”

“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”

“அப்பிடி ஒன்றும் தெரியலெ”

“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”

ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக  வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.

Continue Reading →