கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !

கவிதை: மல்லிகையின் ஜீவா வாழ்க !

தொண்ணூறு வயதினைத் தொட்டுநிற்கும் ஜீவாவே
இன்னும்நீ வாழ்வதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்
உன்னுடைய ஊக்கத்தால் உரம்பெற்று வளர்ந்தவர்கள்
உனைவாழ்த்தும் வாழ்த்தெல்லாம் உரமாக அமைந்திடட்டும் !

யாழ்நகர வீதிகளில் நீநடந்த காட்சியெலாம்
வாழ்நாளில் சாதனையாய் மல்லிகையாய் மலர்ந்ததுவே
தாழ்வுதனை துணையாக்கி தலைநிமிர்ந்த உன்துணிவை
நாள்முழுக்க நினைந்தபடி நான்வாழ்த்தி மகிழுகின்றேன் !

Continue Reading →

வாழ்த்துகிறோம்: எம்.ரிஷான் ஷெரீப்பின் ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது!

சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது  ‘இறுதி மணித்தியாலம்’ எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

Continue Reading →