சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.
இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘இறுதி மணித்தியாலம்’ எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.
மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 வரை …
காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள் விடுமுறை என்று பெனாசிர் சொல்லியிருந்தாள். புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.
பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.
“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”
“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”
“அப்பிடி ஒன்றும் தெரியலெ”
“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”
ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.
பூங்காவனத்தின் 28 ஆவது இதழ் ஓய்வு பெற்ற அதிபரும், இலக்கிய ஆர்வலருமான திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் புகைப்படத்தை அட்டைப்படமாகத் தாங்கி வந்திருக்கிறது.
இதழின் பிரதம ஆசிரியர் தனது ஆசிரியர் கருத்துப் பக்கத்தில் குடிநீரின் முக்கியத்துவத்தைப் பற்றிய கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார். மார்ச் மாதம் 22 ஆம் திகதி குடிநீர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து நீர்ப்பாவனையை மேற்கொள்ள வேண்டும் என்பதனையும் முற்று முழுதான நீரின் 03 சதவீதமே மனிதனது பாவனைக்கு உள்ள நீரின் அளவான படியினால் நீரின் பாவனை எந்தளவுக்கு சிக்கனமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை எடுத்து விளக்கியிருக்கின்றார். நீர் போட்டிப் பொருளாகவும், வியாபாரப் பொருளாகவும் இன்று மாறியிருப்பதால் சில வேளைகளில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள மென்பானங்களை உட்கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன என்பதனையும் நினைவுபடுத்தியிருக்கிறார். எனவே வாசகர்களாகிய நாமும் அவரது கருத்துக்களை மனதில் கொள்வது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்லலாம்.
இனி பூங்காவனத்தின் உள்ளே வழமைபோன்று நேர்காணல், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நூல் மதிப்பீடு, வாசகர் கடிதம், நூலகப்பூங்கா ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
நேர்காணலில் இம்முறை திருமதி மர்ளியா சித்தீக் அவர்களின் நேர்காணல் இடம் பெற்றிருக்கிறது. அதேபோன்று பதினொரு கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிதைகளை பதுளை பாஹிரா, ஆ. முல்லைதிவ்யன், மருதூர் ஜமால்தீன், எம்.எஸ்.எம். சப்ரி, ஷப்னா செய்னுள் ஆப்தீன், டாக்டர் நாகூர் ஆரீப், ஏ.சீ. ஜரீனா முஸ்தபா, எம்.எம். அலி அக்பர், ஆர். சதாத், எச்.எப். ரிஸ்னா, குறிஞ்சி தென்றல் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.
இந்த இதழில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றை வெலிப்பன்னை அத்தாஸ், சூசை எட்வேட், சுமைரா அன்வர், எஸ்.ஆர். பாலசந்திரன் ஆகியோரும், உருவகக் கதையை எஸ். முத்துமீரானும் எழுதியிருக்கின்றனர். கவிஞர் ஏ. இக்பால், கா. தவபாலன், ஆஷிகா ஆகியோர் கட்டுரைகளைத் தந்திருக்கின்றார்கள். கிச்சிலான் அமதுர் ரஹீமின் நூல் மதிப்பீடும் நூலில் இடம் பிடித்திருக்கிறது.
சமூகமொன்றின் இயக்கத்துக்கும் நீடித்து நிலைபெறலுக்கும், வரலாறு என்பது அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. ஆனால் வரலாற்றைக் கட்டியெழுப்புவதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஆய்வாளன் ஆராய்கின்ற வழக்கிழந்த நடைமுறை ஒன்று, புவியியலால் தனித்த வேறொரு பகுதியில் இன்றும் மருவிய நிலையில் வழக்கில் இருக்கலாம். ஆனால், விரிவான தளத்தில் ஆய்வு முயற்சிகளை மேற்கொள்ளும் போது அந்த மிகச்சிறு அம்சம் கவனிக்கப்படாமல் போக வாய்ப்புகள் உண்டு.
இந்த இடத்தில் தான் நுண்வரலாறுகள் (Micro histories) கைகொடுக்கின்றன. ஒரு ஆய்வுப்பொருள் பரந்த எல்லைக்குள் அடங்கும்போது, அதை தனிநபர் அல்லது தனிச்சமூகம் அல்லது குறித்த புவியியல் பிராந்தியம் சார்ந்து வரையறை செய்து கட்டியெழுப்புவதே, நுண்வரலாறு எனப்படுகின்றது. இத்தகைய நுண்வரலாறுகளின் தொகுப்பாக முழு வரலாறு உருவாக்கப்படும்போது, அது ஐயத்துக்கிடமற்ற நம்பகத்தன்மையையும் துல்லியத்தையும் கொண்டிருக்கும். அண்மையில் சொ.பிரசாத், க.சபாரெத்தினம் ஆகியோரால் எழுதப்பட்டு, மறுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூலை, இத்தகைய ஒரு நுண்வரலாறு என்ற கண்ணோட்டத்தில் தான் அணுகவேண்டும்.
கண்ணகி வழிபாட்டுக்கும் கிழக்கிலங்கைக்கும் இடையேயான பிரிக்கமுடியாத பந்தம், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. சிங்களவர், வடபகுதித் தமிழர் என்போரிடமும் கண்ணகி தெய்வமாக விளங்கினாலும், கீழைத்தமிழருடனான அவளது நெருக்கத்துக்கு விடை தேடும் ஆய்வுகள், அறிவார்ந்த பார்வையில் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கீழைக்கரையின் ஒவ்வொரு கண்ணகி ஆலயங்களும் தத்தம் நுண்வரலாறுகளை முறைப்படிப் பதிவு செய்யும் போது, இக்கேள்விக்கு நம்மால் இலகுவாகப் பதில்காண முடியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே 1985களில், “செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வரலாறும் வழிபாடும்” எனும் நூல், அவ்வாலய பரிபாலன சபையினரால், வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல், 1998இல் ந.நவநாயகமூர்த்தியால் “தம்பிலுவில் கண்ணகி வழிபாடு” எனும் நூல் வெளியிடப்பட்டது. இன்னொரு முக்கியமான நூலாக, 2014இல் வெளியான காரைதீவுக் கண்ணகி அம்மன் ஆலயக் கும்பாபிஷேக மலரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அடுத்ததாக வந்து இணைந்திருக்கிறது “ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்” நூல்.
– முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் ‘பதிவுகள்’ இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் ஐந்தாவது அத்தியாயம் ‘ஒளிரும் மாய நகரம் – பாரிஸ் “என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. – பதிவுகள் –
அத்தியாயம் ஐந்து: ஒளிரும் மாய நகரம் – பாரிஸ்
“பாரிஸ் என்ற வார்த்தையுடன் மூன்று எழுத்துக்கள் சேர்த்தால் அது பாரடைஸ் ஆகிறது’ . (Paris – Paradise )
ஏப்ரல் 23, 2017
இந்த நாள் யுனைடெட் கிங்டோம் விட்டு விலகி அண்டை நாடான பிரான்சு நோக்கி புறப்படத் தயாரானோம். எங்கள் பயண திட்டத்தில் அடுத்து நாங்கள் ரசிக்கப்போகும் நிலம் உலகப்புகழ் பெற்ற பாரிஸ் நகரம். உலகின் அதிசயம் என முதலில் ஆராதிக்கப்பட்ட ஐஃபெல் டவர் அமைந்துள்ள நகரம். அதிகாலையிலே எழுந்து புறப்பட்டு காலை உணவை முடித்து பேருந்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணம் செய்து நூறு மைல்கல் தொலைவில் இருந்த டோவர் துறைமுகத்தை அடைந்தோம். செல்லும் வழியில் எல்லாம் கண் கொள்ளா அழகிய வண்ணம் மிக்க சிறுசிறு பூக்கள் அதிலும் ஒரு மஞ்சள் நிற பூ கொல்லென்று எல்லா பகுதியிலும் பூத்துக்கிடக்கிறது. பேருந்து வேகமாக சென்றதால் சரியான முறையில் அப்பூக்களை நிதானமாக ரசிக்க இயலவில்லை. பெயர் தெரியாவிட்டாலும் மனத்தில் நிறைந்த மலர் அது.
வானத்தில் மலர்தேவதைகள் சுமந்து சென்ற பூக்கூடைகள் அனைத்தும் கொட்டி சிதறி மஞ்சள் பாய் விரித்தது போன்ற ஒரு தோற்றம். நம் ஊரில் எல்லாம் இப்படி, இவ்வளவு கண்கவர் அழகுகளை வழிகளில் பார்த்தாக கொஞ்சம் கூட நியாபகம் இல்லை. வட இந்தியாவில் டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் வழியில் வழியெங்கும் இருக்கும் கடுகு செடியில் அமைந்த மஞ்சள் மலர்கள் நம்மூரில் அழகுதான். எனினும், இந்த மஞ்சள் மலர்கள் கொள்ளை அழகு. அதன் பெயர் காமன் ராக்ரோஸ் என்பதாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். என் யூகம் தவறாகவும் இருக்கக்கூடும். இதுபற்றி விசாரித்து அறியவேண்டும்.
டோவர் துறைமுகம் தெற்கு இங்கிலாந்தில் கென்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரு பரபரப்பான துறைமுகம். அங்கிருந்து பிரான்ஸ் வெறும் 21 மைல்கல் மட்டும்தான் என்பதால் தினமும் படகு சேவை இக்கரையில் இருந்து அக்கரைக்கு மக்களை சுமந்து செல்கிறது. Ferry Service என்றே அந்த படகுகளைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் படகுகள் (Boats) சிறிய வகையை சார்ந்தவை. கப்பல்கள் (Ships) மிகவும் பெரியவை. கப்பல்களிலும் சேராமல், படகென்றும் ஒதுக்கிவிட முடியாமல் நடுத்தர வகைக்ச் சேர்ந்தவையே Ferry என அறியப்படுகின்றன. இந்த வகை Ferry Service பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும் மற்றும் கார்கோ (Cargo) எனப்படும் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. நிறைய Ferry Service பேருந்துகள், பெரிய கன்டைனர் வகை லாரிகளையும் எடுத்து செல்லும் அளவு திறன் படைத்தவை.
மனிதன்பேசித்திரியும் விலங்கு என்றொரு பழமொழி உன்டு. இடம்பெயர்தல் ஆங்கிலத்தில் மைகிரேசன் என்பார்கள் காக்கை தன் ஊரைவிட்டு வெகுதொலைவு செல்லாது.புறா,கொக்கு,நாரை, பல கிலோமீட்டர் சென்று திரும்பும்.சுப்ரபாரதிமணியன் மைகிரேசன் கொண்ட மனிதர்.திருப்பூரில் பிறந்து குன்னூர் , ஹைதராபாத் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை என பல ஊர்களில் பணி செய்த அனுபவம் கொண்டவர் ஒவ்வொருவருக்கும் ஒரு முகம் உண்டு அது தனக்கேயான முகம்.எனினும் பின்னால் பல முகங்கள் கொண்டவர்கள் என்பதே உண்மை.
சுப்ரபாரதிமணியனின் தொலைநோக்குப்பார்வை இந்த நூலில் தெளிவாய்த் தெரிகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கைப் பயணத்தில் உடன் நடக்கும் மனிதர்களோடு தனக்கேயான உறவை அளவிட்டு வைத்துக் கொள்வார்கள்.தனக்கும் தன் நண்பர்களுக்குமான உறவைத் தன் தனித்தன்மையான எழுத்தில் வெளிப்படுத்தியிருப்பதில் அவர் வெற்றியடைந்திருக்கிறார் என்பது இந்நூலை படிக்கும்போது தெறிகிறது.அவர்களை நினைவு கூர்ந்து கொள்கிறார்,
ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின் தொகுப்பாகப் பிறந்திருக்கிறது..சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது கிடைத்த அனுபவங்களைத் தந்திருக்கிறார்.
அனைவருக்கும் அனுபவம் இருக்கிறது,தன் அனுபவத்தை எழுத்தில் கொண்டுவரும் திறமை சுப்ரபாரதிமணியனுக்கு இருக்கிறது என்பதற்கு இந்நூல் உதாரணம். தன் எண்ணங்களை இவர்கள் படிப்பார்கள் என்று தெரிந்தும் ராசி சிமெண்ட் அமிர்தனோ,ராமாநாயுடுஸ்டுடியோ மணியோ,நா.கதிர்வேலனோ,அவர்களின் குணங்களை பட்டியலிட்டிருக்கிறார் நாளை அவர்களை நேரில் சந்திக்கும் போதும்எதிர்கொள்ளும் துணிவு இவர் எழுத்தில் திடமாய்த் தெரிகிறது.அதி லேசாக எடுத்துக் கொண்டிருக்கிறாரோ என்று படுகிறது.
“இந்த இராவணனின் எந்த தலை உண்மையானது?” – இது மூன்றாவது மனிதன் பெப்ரவரி 2003 இதழில் பாலு மகேந்திரா குறித்து உமா வரதராஜனால் எழுதப் பட்ட ஒரு கட்டுரையின் தலைப்பு. மேற்குறித்த கேள்வி பாலு மகேந்திரா மீது மட்டும் தொடுக்கப்படும் கேள்வி அல்ல. இப்படியான கேள்விகளை பன்முகத்தன்மை கொண்ட ஒவ்வொரு கலைஞனும் தன் படைப்பிலும் வாழ்விலும் மக்களிடமிருந்து தினந்தோறும் எதிர்கொண்ட வண்ணமே இருக்கின்றான். மேலும் அவனது படைப்புக்கும் வாழ்விற்கும் இடையேயான இடைவெளிகள் அதிகரிக்கும் பட்சத்தில் இது போன்ற கேள்விகளின் வீச்சு இன்னும் பலமானதாகவும் வீரியம் மிக்கதாகவும் விளங்கும். இதே போன்ற பல்வேறு விதமான கேள்விகளை உள்ளடக்கி, அன்று தொடக்கம் இன்றுவரை தனது திரைப்படங்களிலும் நிஜவாழ்க்கையிலும் என்றுமே சர்ச்சைகளை உருவாக்கி வரும் நடிகர் கமல்ஹாசன் மீதும் அவர் உருவாக்கிய பாத்திரங்கள்,படைப்புக்கள் மீதும் யமுனா ராஜேந்திரனால் வைக்கப்பட்ட விமர்சனக்கட்டுரைகளின் தொகுப்பாக ‘உத்தமவில்லன் – The Anti-Hero ‘ என்னும் 12௦ பக்கங்கள் அடங்கிய சிறு நூலொன்று பேசாமொழி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
யமுனா ராஜேந்திரன் தமிழக-ஈழ, புகலிட அரசியல் கலாச்சாரத் தளத்தில் பன்முகத்தன்மையுடன் இயங்கும் ஒரு படைப்பாளி, இடதுசாரி செயற்பாட்டாளர், சிந்தனையாளர். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் சினிமா குறித்த விமர்சங்களையும் ஆய்வுகளையும் முன்னெடுப்பதில் எப்போதும் முழு மூச்சாக உழைப்பவர். ஒரு இடதுசாரி செயற்பாட்டாளராக இருந்தபோதிலும் வரட்டுத்தனமான கொள்கைகளினாலும் வரட்சி நிறைந்த கருத்துக்களினாலும் தனது நிலைப்பாட்டினை முன்னெடுக்காமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மூன்றாம் உலகம் குறித்த கலை, இலக்கிய, பண்பாட்டுக் கூறுகளை தமிழிற்கு அறிமுகம் செய்ததில் முதன்மையானவர். இன்று பல்வேறு விதமான பிற்போக்கு சக்திகளின் ஊடாக கொந்தளிப்புக்குள்ளாகி வரும் ஈழ-தமிழக அரசியல் சூழலில் தனது எழுத்துக்களின் மூலம் ஒரு கருத்துமையமாகத் திகழும் இவர், இத்தளத்தில் ஒரு அசைவியக்கமாகத் தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றார். இத்தகைய பல்வேறு பரிமாணங்களில் தொடர்ந்தும் செயலாற்றி வரும் யமுனா ராஜேந்திரன், தமிழக அரசியல் கலாச்சாரத் தளத்தில் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிவரும் கமல்ஹாசனை தனது கவன வட்டத்திற்குள் எடுத்துக் கொண்டது ஒன்றும் வியப்பான விடயம் இல்லை.
‘லண்டன் தமிழ் பெண்கள் அமைப்பு பெண்ணியச் செயற்பாட்டாளர்களையும், எழுத்தாளர்களையும், ஆசிரியர்களையும், கலைஞர்களையும் கொண்டு பரந்த ஜனநாயக அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பாகும். சமூகத்தில் நிலவும் பெண்களுக்கெதிரான பாரபட்சமான நடைமுறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்;துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்’ என்று கவிஞரும் எழுத்தாளருமான செல்வி உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) தலைமையில் லண்டனில் யூன் மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற பெண்கள் அமர்வில் தலைமை உரையாற்றியபோது குறிப்பிட்டார்.