முகநூல் கலையுலகக் குறிப்புகள்: அயலவர் கலையுலகம் அறிவோம் – காமினி பொன்செகாவின் (Gamini Fonseka) நடிப்பில் சருங்கலய (Sarunggalaya)

 அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான 'சருங்கலய' திரைப்படம் பற்றிய எனது சிறு குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்தின– அண்மையில் சுனில் ஆரியரத்தினாவின் இயக்கத்தில், காமினி பொன்செகாவின் நடிப்பில் வெளியான ‘சருங்கலய’ திரைப்படம் பற்றிய எனது சிறு முகநூற் குறிப்பும், அதற்கான பயன் மிக்க, ஆவணச்சிறப்பு மிக்க எதிர்வினைகளும் இங்கே ஒரு பதிவுக்காகப் பதிவிடப்படுகின்றன. –


சிங்களத்திரையுலகின் எம்ஜிஆராக இவரைத்தமிழர்கள் அறிந்திருந்தாலும், இவர் நடிப்பிலும் திறமை வாய்ந்தவர். இவர்தான் காமினி பொன்செகா. இவரது இயற்பெயர் டொன் செல்டன் காமினி பொன்செகா (Don Shelton Gamini Fonseka). நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், அரசியல்வாதி எனப்பல்பரிமாண ஆளுமை மிக்கவர் இவர். பின்னாள்களில் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதியாகத்திகழ்ந்த இவர் வட, கிழக்கின் ஆளுநராகவும் விளங்கியவர். ‘நீலகடல் ஓரத்தில்’,’ நங்கூரம்’ ஆகிய தமிழ்த்திரைப்படங்களிலும் நடித்தவர் இவர்.

‘சருங்கலய’ (சருங்கலய என்றால் பட்டம் என்று பொருள்) என்னும் சிங்களத்திரைப்படத்தில் நடராஜா என்னும் தமிழராகவும் நடித்திருக்கின்றார். இப்படத்தின் பல காட்சிகள் கரவெட்டியில் படமாக்கப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. இத்திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற 1977 இனக்கலவரத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சிங்களத்திரைப்படமாகும். இத்திரைப்படத்துக்கான தமிழ் வசனத்தை திருமதி யோகா பாலச்சந்திரன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை இயக்கிய சுனில் ஆரியரத்தின தமிழில் மிகுந்த பாண்டித்தியம் பெற்றவர். எழுத்தாளர், கவிஞர், இயக்குநர், விமர்சகர், பேராசிரியர் என்று பன்முக ஆளுமையாளர். யாழ் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணி புரிந்திருக்கின்றார்.

சருங்கலய திரைப்படத்தில் தமிழ்ப்பாடலொன்றும் இடம் பெற்றுள்ளது. ‘வானத்து மழைத்துளி’ என்னும் அப்பாடலை எழுதியவர் யோகா பாலச்சந்திரன். பாடியவர் கலாவதி சின்னச்சாமி. இசையமைத்தவர் விக்டர் ரத்னாயக்க (Victor Ratnayake).

Continue Reading →