தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ந.பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் ந. பிச்சமூர்த்தி ஆவார். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய ந.பிச்சமூர்த்தி தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டமாகத் திகழும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடேச தீட்சிதர் – காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார்.