கொடகே வெளியீடாக வந்துள்ள வதிரி சி.ரவீந்திரனின் ‘மீண்டு வந்த நாட்கள்’ கவிதைத் தொகுதியின் வெளியீட்டு விழா யா/தேவரையாளி இந்துக்கல்லூரி க.மூ.சின்னத்தம்பி அரங்கில் மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து செல்வி மயூரி விவேகானந்தன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இசைத்தார். வரவேற்புரையை ராஜ சிறீதரன் நிகழ்த்தினார். நிகழ்வில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி திருமதி சிறீநிதி நந்தசேகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அதிதியாக தமிழ் சிங்கள மொழிபெயர்ப்பாளர் திரு உபாலி லீலாரட்ன கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வாழ்த்துரையை ஓய்வுபெற்ற அதிபர் செ.சதானந்தனும், வெளியீட்டுரையை கல்வியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணியும், நூல் அறிமுகவுரையை எழுத்தாளர் திக்குவல்லை கமாலும் நிகழ்த்தினர். நயப்புரைகளை சமூகவியற்றுறை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணனும் கவிஞர் மேமன்கவியும் நிகழ்த்தினர். நூலின் முதற்பிரதியை ‘சிதம்பரப்பிள்ளை புத்தகசாலை’ திரு சிதம்பரப்பிள்ளை சிவம் பிரதம அதிதி அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
இருட்காட்டில் ஒளியைக் கண்டுகொண்டவன்
அதைச் சொற்கள் போல் விழுங்கிவிட்டான்.
சொல்… விழுங்கினால் திக்கும்.
யாருக்கும் எதுவும் புரியாது.
இன்று தமிழிலும், ஆங்கிலத்திலும் 24 மணிநேர தொலைக்காட்சிச் செய்தி அலைவரிசைகள் மாநிலங்கள் அளவிலும், தேசிய அளவிலும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால், இவை இயங்கும் விதம், இவற்றின் செயல்பாடுகள் ஆகியவை அத்தனை திருப்திகரமாக இருக்கிறது என்று சொல்லமுடியாத நிலை. 24 மணிநேரச் செய்திகள் என்கிறார்களே தவிர பெரும்பாலும் திரும்பத்திரும்ப நான்கு செய்திகளைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய ‘சுடச்சுடச் செய்திகளுக்குப் பழைய புகைப்படங்களை சகட்டுமேனிக்கு வெளியிடு கிறார்கள். தலைவர்களின் படங்கள் போன்றவையென்றால் பரவாயில்லை. ஆனால், இன்றைய வெள்ள அபாய நிலைமை குறித்த செய்திக்குக் கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கைக் காட்டினால்…? இன்றைய ரயில்விபத்தில் இறந்தவர் குறித்த செய்தியின்போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களைக் காட்டினால்…? தற்போதைய பேரிடர் குறித்து ஒரு தலைவர் அக்கறையோடு கருத்துரைத்திருக்கும் செய்திக்கு அவர் என்றோ வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டிருக்கும் புகைப்படம் காண்பிக்கப்படுகிறது. இவை ஒன்றிரண்டு உதாரணங்கள் மட்டுமே.
எழுத்துவடிவத்திற்கு முன்பாய் மனிதர்களைப் பிணைக்கும் விஷயமாக இருந்துவருவது பேச்சு. உரையாடலினூடாய் ஒரு மனிதரை அவர் மனவோட்டத்தைப் புரிந்துகொள் வதும், பரிச்சயப்படுத்திக் கொள்வதும் என்றுமே அலுக்காத ஒன்று. ஒரு ஆளுமையின் மூலத்தை அறிந்துகொள்ளவும் சரி, சாதாரண மனிதர்களுக்குள் உறைந்துகிடக்கும் அசாதாரணங்களை அடையாளங்கண்டுகொள்ளவும் சரி உரையாடலாய் விரியும் நேர்காணல்கள் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய பல காராணங் களால் நேர்காணல்கள் பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. நேர்காணலின் அவசியம் பற்றி, அரசியல் பற்றி, நேர்காணல் அமையவேண்டிய விதம் குறித்து, அமைகின்ற விதங்கள் குறித்து என நேர்காணல் என்ற எழுத்துவகையின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் களமாக ஜூன் மாத புதுப்புனல் வாசகவட்டம் அமைந்தது. எழுத்தாளர்கள் வேட்டை கண்ணன், கிருஷாங்கினி, திரு, பாலைநிலவன், லதா ராமகிருஷ்ணன், மு.ரமேஷ், தவசி(இவர்கள் இருவரும் தொலைபேசி மூலம் வாசகவட்டத்தில் பங்கேற்றார்கள்), புதுப்புனல் ஆசிரியர் ரவிச்சந்திரன், நிர்வாக ஆசிரியர் சாந்தி கலந்துகொண்டு நேர்காணல் குறித்த பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள். பேட்டிகள் தனிநபரைக் குறித்ததாக மட்டும் இருக்கவேண்டுமா? அல்லது, முக்கிய சமூக நிகழ்ச்சிகள் குறித்ததாக இருக்கவேண்டுமா? சிறுபத்திரிகைகளில் யார் பேட்டிகாணப் பட வேண்டும்? யார் பேட்டிகாண வேண்டும்? இவற்றிற்கான அளவுகோல்கள் என்னென்ன? என பல்வேறு கோணங்களில் நேர்காணல் குறித்து கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவற்றிலிருந்து சில இங்கே தரப்படுகின்றன:
Toronto/June 17, 2011/ – Unable to become employed in their field, internationally trained immigrants are finding satisfaction in helping other newcomers to navigate their way through their new life in Canada, according to a report to be released on Monday June 20, 2011. The report, “Rebuilding Professional Lives: Immigrant Professionals Working in the Ontario Settlement Sector”, looks at the experience of internationally trained immigrants who found employment in the field of immigrant settlement services.
அத்தியாயம் 69
நண்பர்கள் திரும்பக் கூடத் தொடங்கிவிட்டார்கள். நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு குணச் சித்திரம். என்னையும் சேர்த்து. எல்லோரும் அலுவலக நேரம் போக மிகுந்த நேரத்தில் சேர்ந்து நெருக்கமாகப் பழகிக்கொண்டிருப்பது எனக்குப் பிடித்தது. வேலுவுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பெருமை சேர்த்தது. இதெல்லாம் தற்செயலாக நேர்ந்தது தான். இதே போல இன்னொருவருக்கு நான் வேலை வாங்கிக் கொடுத்துவிட முடியாது. செல்வாக்கே ஏதும் இல்லாத எனக்கு, சந்தர்ப்பங்கள் கூடி வந்ததால் கிடைத்த ஒன்றே அது அல்லாது என் சாமர்த்தியத்தால் அல்ல. இருந்தாலும் தேவசகாயத்துக்கும் வேலுவுக்கும் என்னிடம் சினேகம் நெருக்கமானது. இதனால் அல்ல. இதில்லாமலேயே அவர்கள் நல்ல நண்பர்களாகத் தான் முதலிலிருந்தே இருந்தார்கள் .உண்மையில் சொல்லப் போனால், அங்கு புர்லாவில் 1951லிருந்து 1956 வரை இருந்த அந்த ஆறு வருடங்களில் அந்த வீட்டில் என்னோடு குடியிருக்க வந்தவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாகத் தான் இருந்தார்கள். சுமார் இருபது பேர்கள் அவ்வப்போது வருவதும் பின்னர் இடம் மாறிப் போவதுமாக இருந்தாலும், யாருடனும் மனக்கசப்பு இருந்ததில்லை. யாரையும் ”இனி நமக்கு ஒத்துவராது, நீங்கள் வேறிடம் பார்த்துப் போகலாம்” என்று சொல்ல நேர்ந்ததில்லை. கேலிகள் உண்டு. சில சமயங்களில் தெரியாது மனம் வேதனைப் படச் செய்ததுண்டு. அப்படியும் ஒரு தடவை நேர்ந்தது. ஆனால் அதைச் சொன்னால் படிப்பவர்களுக்கு சிரிப்பாகத் தான் இருக்கும்..
தீபா மேத்தாவின் ‘வாட்டர்’
உலக அளவில் சில தினங்கள் கவனத்தைப் பெறுகின்றன. உதாரணமாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், அன்னையர் தினம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். சில விழிப்புணர்வு தினங்களும் கவனிப்பாரின்றி நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் மாற்றுத் திறநாளிகள் தினம் (Dec 4), குழந்தைத் தொழிலாளர்கள் தினம் (Jun 12), உலக எயிட்ஸ் தினம் (Dec 1) என்று பல முக்கியமான தினங்களைச் சொல்லலாம். “ஜூன் 23 – சர்வதேச விதவைகள் தினம்” என்று ஐநா அறிவித்துள்ளது. கைம்பெண்களின் உணர்வுகள் நசுக்கப்படும் சமுதாயம் நம்முடையது. கணவனை இழந்த பெண் தனக்குத் தெரிந்த ஆணுடன் பொது இடத்தில் பேச நேர்ந்தால் அவள் மீது சமூகத்தின் சந்தேகப் பார்வை விழுகிறது. சாதாரணமாகப் பேசினாலும் கள்ளத் தொடர்பாகத் தான் பார்க்கிறது.