நேரம்: ஜூன் 24, 2011 – வெள்ளிக்கிழமை – மாலை 6.00 மணி.
இடம்: East York Civic Centre, 850 Coxwell Avenue (North-west corner of Coxwell Avenue and Mortimer Avenue)
Toronto, ON M4C 5R1
நேரம்: ஜூன் 24, 2011 – வெள்ளிக்கிழமை – மாலை 6.00 மணி.
இடம்: East York Civic Centre, 850 Coxwell Avenue (North-west corner of Coxwell Avenue and Mortimer Avenue)
Toronto, ON M4C 5R1
– நிலாச்சோறு விசேட நிகழ்ச்சி 17.06.2011 வெள்ளிக் கிழமை பிரித்தானிய நேரம் 06.00 முதல் 08.30 மணி வரை இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணி வரை –
இசையமைப்பாளர் கண்ணன் என்று கூறினால் 70 களில் அனைவருக்கும் ஞாபகம் வருவது கண்ணன் நேசம் இசைக்குழுவாகும். கண்ணன் நேசம் இசைக்குழு ஈழத்து சினிமாவுக்கும் மெல்லிசைக்கும் பொப்பிசைக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தது. ஆரம்ப காலத்தில் கண்ணன் நேசம் இசையமைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புது ரோஜா மலரே என்னும் பாடலை அனைவரும் நினைவு கூருவர். மேலும் அருவி வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட குளிரும் நிலவு இசைத்தட்டில் உள்ள பாலை வெளி என்ற என்.சண்முகலிங்கம் எழுதிய பாடலையும்; கண்ணன் நேசம் இசையமைத்தமை இங்கு நினைவு கூரலாம். இவ்வாறு கண்ணன் நேசம் குழுவினூடாக அறிமுகமான கண்ணண் அவர்களின் ஆளுமை பின்னாளில் பல பரிமாணங்களைக் கொண்டதாக பரிணமிக்கிறது.
கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் சாகித்திய அகாதமிப்பரிசை இரு முறை -கவிதைப்படைப்பிற்காகவும், மொழிபெயர்ப்பிற்காகவும்- பெற்றவர். சாகித்திய அகாதமியின் தமிழ்குழு ஒருங்கிணைப்பாளர். அவரின் பவள விழா 30.,31.07.2011, தேதிகளில் கோவையில் நடைபெற உள்ளது. அவ்வமயம் கவிஞர் சிற்பி பவள விழா மலர் ஒன்று சிறப்பான முறையில் வெளியிடப்பட உள்ளது. அம்மலரில் தங்களின் வாழ்த்துச் செய்தி மேலான படைப்பு ஒன்று வெளிவர தங்களது கட்டுரை/கவிதை/நினைவுக்குறிப்பு மற்றும் தங்களிடம் இருக்கும் கவிஞர் பற்றிய அரிய செய்திகள்/ புகைப்படங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறோம். தங்களது படைப்புகள், நன்கொடைகள் வருகிற 30.06.2011 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டிகிறோம்.
Sri Lanka’s Killing Fields by Channel 4
மீள்பிரசுரம்!
கொழும்பில் 60களில் நடைபெற்ற நிழல் நாடகவிழா என்னைப்போன்ற நாடக அபிமானிகளுக்கு நல்விருந்தாக அமைந்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தினமும் ஒன்றாக புகழ்பெற்ற இயக்குனர்களின் நாடகங்கள், சிறந்த கலைஞர்களின் பங்களிப்புடன் மேடையேறின. அவற்றில்; ஒன்றுதான் நடிகவேள் லடிஸ் வீரமணி இயக்கி நடித்த :’சலோமியின் சபதம்’ பைபிளில் வரும் சலோமியின் கதையை ஒஸ்கார்வைல்ட் நாடகமாக எழுதியிருந்தார். அதுவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு லடிஸ் வீரமணியால் மேடையேற்றப்பட்டது. பார்த்தவர்கள் முற்றுமுழுதாக அந்த நாடகத்தின் தன்மையினால் கவரப்பட்டார்கள். ஆரம்பக்காட்சியில் ரோமாபுரி வீரர்கள், கலீலி வீரர்கள் கவர்ச்சியான ஆடை, அணிகலன்களுடன் மேடையில், நிரம்பியிருந்தார்கள். ஏரோது மன்னனின் மாளிகையின் முன்னுள்ள புற்றரையில் கைகளில் மதுக்கிண்ணங்களுடன் அவர்கள் பேசிக்கொள்வதும், உலாவிவருவதும் மிகச்சிறந்த நெறியாள்கையின் வெளிப்பாடாக சீருடன் இருந்தது. ஓஸ்கார் வைல்ட்டின் வசனங்களை அவர்கள் அழகு தமிழில் பேசினார்கள். நிலவைப் பார்த்து அவர்கள் பேசினார்கள். சிரியநாட்டு இளைஞன், நிலவு இளவரசி சலோமி போல இருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான். ஹேரோதியா அரசியின் பணியாளோ ‘நிலவு மரணக்குழியிலிருந்து எழுந்து வந்ததுபோல இருக்கிறது. அது சாவின் துர்க்குறி’ என்கிறான். அவர்களுக்கு நடுவே கம்பீரமாக நடந்து வரும் ஏரோது அன்ரிபாஸ் (லடிஸ் வீரமணி) என்ற குறுநிலமன்னன். அவனது பிறந்தநாளைக் குறிக்குமுகமாக நடனமாடும் அவனது பெறாமகள் சலோமி(சந்திரகலா). பாதாளச்சிறையில் இடப்பட்டபோதும், அஞ்சாமல் யேசுவின் வருகையைக்கூறும் ஜோவான் (கலைச்செல்வன்) போன்ற பாத்திரங்கள். தனது பெறாமகளின் ஆட்டத்தினால் மகிழ்வுற்ற ஏரோது அன்ரிபாஸ், ‘நீ எதை விரும்புகிறாயோ.. அது உன்னதாகட்டும்’ என்று சலோமிக்கு சொல்கிறான். தனது தாயின் தூண்டுதலினால், தனது ஆட்டத்திற்கு பரிசாக ஜோவானின் தலையை ஏரோதுவிடம் கேட்டுப் பெறுகிறாள் சலோமி.
தொலைக்காட்சிகள் பெருகியதன் காரணத்தினால் நாடகங்களும், நாடக அரங்குகளும் குறைந்து வீட்டினுள் இருந்து தொலைக்காட்சி நாடகங்களைப் பார்ப்பது கலை ரசிகர்களினால் வழக்கமாகிக் கொண்டு வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்துத் தமிழ் நாடகத்துறையில் தொடர்ந்து பணியாற்றிவரும் ‘தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின்’ நாடக விழா – 2011 இலண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. மொழிபெயர்ப்பு நாடகங்களை மேடையேற்றுவதில் தமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகம் கூடுதலாகக்கவனம் செலுத்துகின்றது என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டபோதும், இம்முறை நாடக விழாவில் ‘தர்மம்’ (மனோ மனுவேற்பிள்ளை), ‘அயலார் தீர்ப்பு’(பேராசிரியர் சி. சிவசேகரம்), ‘படிக்க ஒரு பாடம்’(மாவை. தி. நித்தியானந்தன், ‘என் தாத்தாவுக்கு ஒரு குதிரை’(செழியன்) ஆகிய ஈழத்துப் படைப்பாளிகளின் எழுத்துருவாக்கத்தில் அமைந்த நாடகங்களை மேடையேற்றியிருந்தமை சிறப்பு அம்சமாகும்.
நீங்களும் எழுதலாம்.
மிக நல்ல படங்களாக, தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்ரந்த் படங்களாக்க் கொடுக்கப்பட்டுள்ள பட்டிய்லில் பல படங்களை நான் பார்த்ததில்லை. பழ்சிலிருந்து சிலவும், புதியனவற்றில் பலவும் நான் பார்த்ததில்லை. அந்த நாள் படம் பார்த்திருக்கிறேன். அது ஒரு புதுமையான சோதனை முயற்சி என்றே எடுக்கப்பட்ட படம். அது சம்பிரதாயமான பாட்டு நடனம் போன்ற மசாலாக்களையும், நீண்ட கனல் கக்கும், அல்லது கத்திப் புலம்பி கண்ணீர் மல்கும் வசன்ங்களையும் தவிர்த்த ஒரு படம். கதை ஒரு துப்பறியும் கதை என்று ஞாபகம். அது சோதனை என்று பேசப்பட வாய்ப் பளிக்கும், இயக்குனருக்கு ஒரு வரி பெருமையாகப் பேச வாய்ப்பளித்த படம் என்பதற்கு மேல் அது தமிழ் சினிமாவில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ் சமூகம் சாதிகக விடவில்லை. மசாலாக்கள் தான் வீர் தீர வசன்ங்கள் தான் வேணும் என்று சந்தைத் தீர்ப்பைத் தந்தது. அது ஒரு நீர்க்குமிழியாக தோன்றி அடுத்த க்ஷணம் மறைந்துவிட்டது. ஒரு சின்ன ஓடையாகக் கூட அது தன்னை ஸ்தாபித்துக்கொள்ளவில்லை.
1. சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா
யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை நடாத்தும் 2008-2009 இல் வெளிவந்த நூல்களுக்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 12.06.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு நல்லை ஞானசம்பர் ஆதீன மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்கள் வாழ்த்துரையையும் கவிஞர் ஐயாத்துரை விருது உரையினை பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களும் நிகழ்த்தவுள்ளனர். மூதறிஞர் கவிஞர் கே.வி ஐயாத்துரை ஞாபகார்த்த கவிதைக்கான (2008) விருது பெண்ணியாவின் ‘ஒரு நதியின் நாள்’ நூலுக்கும்; துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைநூலுக்கும் கிடைக்கவிருக்கிறது. இலங்கை இலக்கியப்பேரவை விருதுபெறும் ஏனைய நூல்கள்
நாள்: சனிக்கிழமை (11-06-2011)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)
ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.
முதல் பகுதி: (3 மணி)
கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்
இரண்டாம் பகுதி: (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன? போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.