நினைவுகளின் சுவட்டில் (67 & 68)

(67) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கற வரைக்கும். அவர் பேர் கிருஷ்ணமூர்த்தி. இங்கேயிருந்து ஹிராகுட்டுக்கு பஸ்ஸில் போய்ட்டு வரலாம். அங்கே வீடு கிடைக்கலாம். இல்லையானால், அவர் இங்கே எந்த டிவிஷனுக்காவது மாத்திக்கலாம். என்ன சொல்றே?” என்று கேட்டார். அவர் என்னைக் கேட்பானேன்? நான் இங்கே ஊர் பேர் தெரியாத போது என்னை பஸ் ஸ்டாண்டிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து ஒரு மாதம் எனனை அவர் வீட்டிலேயே சப்பாடும் போட்டு ஆதரித்தவர். “நீங்க எப்ப வேணும்னாலும் யாரை வேணும்னாலும் அனுப்பலாம் எவ்வளவு  நாள் வேணும்னாலும் இருக்கட்டும். என்னைக் கேட்கவே வேண்டாம். இவருக்கு இடம் கொடுன்னு ஒரு சீட்டு எழுதி அனுப்புகிறவர் கையில் கொடுத்தால் போதும்.” என்றேன். இல்லடா சாமா உன்னோட இன்னும் நாலு பேர் இருக்காளே, என்றார். அது பரவாயில்லே பாத்துக்கலாம் என்றேன். அவருக்கு மெனக்கெட்டு இதுக்காக ஹிராகுட்டிலிருந்து வந்த காரியம் நடந்தது. இதுக்காக அவர் இவ்வளவு சிரமம் எடுத்துக் கொள்கிறார் என்றால், நிஜமாகவே சிரமத்திலிருக்கும் மனிதராகத்தான் வருகிறவர் இருப்பார் என்பது நிச்சயம்.

Continue Reading →

Beam me up from another universe, Scotty

Brian Greene is no stranger to controversial science. His first book, the Pulitzer Prize-nominated The Elegant Universe (1999), was an eloquent exposition of what was then still an obscure theory in physics: string theory. Greene's book helped make string theory a household phrase. In The Hidden Reality, while admitting that string theory has in the meantime come under attack from many physicists as a theory that may be extremely hard to prove experimentally, Greene forges forward to explain an equally controversial theory – or rather, set of theories – about the plurality of universes. In 1600, Giordano Bruno, an Italian priest and mathematician, was burned at the stake in Campo dei Fiori in Rome after the Inquisition found him guilty of heresy, a charge that included his belief that there were infinitely many worlds like our own. Four centuries later, at a time when a popular television show is called The Big Bang Theory, science has infiltrated popular culture to such a degree that a scientist can forcefully argue that, indeed, infinitely many universes may exist and that we live in but one of the many distinct parts of what is now known as the “multiverse.” Brian Greene is no stranger to controversial science. His first book, the Pulitzer Prize-nominated The Elegant Universe (1999), was an eloquent exposition of what was then still an obscure theory in physics: string theory. Greene’s book helped make string theory a household phrase. In The Hidden Reality, while admitting that string theory has in the meantime come under attack from many physicists as a theory that may be extremely hard to prove experimentally, Greene forges forward to explain an equally controversial theory – or rather, set of theories – about the plurality of universes. Having done so well in his exposition of string theory , Greene apparently feels safe from being figuratively burned at the stake. But this is not to say that the theories he writes about are easy to believe, feel natural in any way, or have any significant experimental evidence to support them.

Continue Reading →

தமிழர்களைத் தாக்கிய போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்-ஜெயலலிதா

Tamilnadu Cheif Minister Miss. Jeyalalithaசென்னை: தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் இன்று இலங்கைக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கும் ஒரு வரி தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது இலங்கையை போர்க்குற்றவாளி என்று அவர் பிரகடனம் செய்தார். மேலும் இலங்கை மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

Continue Reading →

‘காலம்’ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ் 2011’

ஜூன் 11, 2011: ஒன்பதாவது சர்வதேசத் தமிழ்த் திரைப்பட விழாவில் ‘காலம்‘ சஞ்சிகையின் ‘வாழும் தமிழ்‘ தமிழ்ப் புத்தகக் கண்காட்சி 2011. புதிய புத்தகங்கள், புதிய சஞ்சிகைகள்,…

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( – 27

அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
1.
நாளை மறுநாள் அவன் அமெரிக்க மண்ணில் காலடி வைத்துச் சரியாக ஒருவருடமாகப் போகின்றது. இளங்கோவுக்குக் காலத்தின் கடுகதிப் பயணம் ஆச்சரியத்தைத் தந்தது. பால்யகாலத்தில் காலம் ஆறுதலாக விரைந்ததுபோல் இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதிருக்கிறது. எந்தவித வாழ்க்கைப் போராட்டங்களையும் சுமக்க வேண்டிய பொறுப்புகளின்றி, சுதந்திரச் சிட்டுக்களாகப் பெற்றோரின் அரவணைப்பில் பொழுது எவ்வளவு ஆறுதலாக, இனிமையாகக் கழிந்தது? இரவுகளில் கொட்டிக் கிடக்கும் சுடர்களை, மின்மினிகளை, முழுநிலவை, பெருவிழி ஆந்தைகளை, நத்துக்களை, அணில்களை, விண்ணில் கோடிழுக்கும் நீர்க்காகங்களை, குக்குறுப்பான், கொண்டைக் குருவி, மாம்பழத்திக் குருவி, ஆலா, ஆட்காட்டி, ஊருலாத்தி, கிளி, மைனா, மணிப்புறாவெனப் புள்ளினங்களையெல்லாம் இரசிப்பதற்கு நிறையவே பொழுதுகளிருந்தன. ஆனால் இன்று… இருத்தற் போராட்டத்தின் சுமைகளையெல்லாம் தாங்கவேண்டிய சூழலில், இரசிப்பதற்குக் கூடப் பொழுதுகளில்லை? அவ்வளவு விரைவாக அவற்றின் பயணம்! இருந்தாலும் இவ்வளவு இடர்களுக்கிடையிலும் ஒரு சில நூல்களையாவது படிப்பதற்கு அவனால் முடிந்தது. சிந்திப்பதற்கு முடிந்தது. இந்த ஒரு வருடத்தில் அவன் வாழ்வு ஏதாவது பயன்களைப் பெற்றிருக்கிறதா? பொருளியல்ரீதியில் பலவகை அனுபவங்களைத்தவிர எந்தவிதக் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுமில்லை. ஆனால் ஒன்று… இந்த அனுபவங்கள் மிகுந்த பயனுள்ளவை. இருப்பின் பல்முனைத் தாக்குதல்களையும் உறுதியுடன் உள்வாங்கி, நம்பிக்கையுடன் எதிர்த்து நடை பயிலும் பண்பினை அவனுக்கு அளித்துள்ளவை இந்த அனுபவங்கள்தான். ‘அச்சமில்லை, அமுங்கதலில்லை. நடுங்குதலில்லை நாணுதலில்லை. பாவமில்லை, பதுங்குதலில்லை. ஏது நேரிடினு மிடர்ப்பட மாட்டோம். கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம். யார்க்கு மஞ்சோம். எதற்கு மஞ்சோம். எங்கு மஞ்சோம். எப்பொழுது மஞ்சோம். வான் முண்டு. மாரியுண்டு. ஞாயிறுங் காற்றும் நல்ல நீரும், தீயு மண்ணும், திங்களு மீன்களும் உடலுமறிவு முயிரு முளவே’ என்னும் உறுதியான மனப்பாங்கினை அவை அவனுக்களித்துள்ளன.

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் – 26

 அத்தியாயம் இருபத்தியாறு: நடுவழியில்

ஸ்பானிஷ்கார முகவனான பப்லோவுடனான அனுபத்தின் பின்னர் இளங்கோ முகவர்களின் மூலம் வேலை தேடும் படலத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். நேரடியாகவே நகரில் அலைந்து திரிந்து வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தான். சட்டவிரோதக் குடிகள் மில்லியன் கணக்கில் வசிக்குமொரு மாநகரில் தனக்கேன் வேலையொன்றை எடுப்பது சிரமமாகவிருக்கிறதென்று எண்ணியெண்ணி மனம் சலித்தான். இருந்தாலும் சோர்ந்து விடாமல் முயனறு கொண்டிருந்தான். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில்தான் அவன் ஜெயரடணத்தை மான்ஹட்டன் நகரத்துத் தெருக்களிலொன்றில் தற்செயலாகச் சந்தித்தான். ஈழத்தின் வன்னிமாவட்டத்தின் முக்கிய நகர்களிலொன்றான வவுனியாவைச் சேர்ந்தவனவன். நாற்பத்தியாறாவது தெருவிலுள்ள இத்தாலியனின் உணவகமொன்றில் பகல் நேரத்தில் உணவக உதவியாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இளங்கோ அன்றாட வாழ்வுக்கே திண்டாடுவதைப் பார்த்த அவன் இளங்கோவுக்குப் பின்வருமாறு புத்திமதியொன்றைக் கூறினான்: “இளங்கோ உனக்கு விருப்பமென்றால், பகல்நேரத்தில் ஓரிரு மணித்தியாலங்கள் செய்யக் கூடியதொரு சிறு வேலையொன்றுள்ளது, அதனை உனக்கு எடுத்துத் தரலாம். ஆனால் உன்னால் அதனைச் செய்ய முடியுமோ தெரியாது..”இவ்விதம் ஜெயரட்ணம் இழுக்கவே இளங்கோ பரவாயில்லை ஜெயம். சொல்லு. முடிந்தால் செய்யிறேன். பார்ப்பம்என்றான்.

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) -வ.ந.கிரிதரன் -( – 25

அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து……….

வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும் அலைந்து திரிந்து கொண்டிருப்பேன். அருள் கூட சில சமயங்களில் என் அலைச்சலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அறையிலேயே தங்கி விடுவான். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, சூழலை, சமூக வாழ்க்கையினை எனப் பல்வேறு விடயங்களை அறியும்பொருட்டுக் கவனத்தைத் திருப்பினேன். அவ்வப்போது நகரத்தின் பிரதான நூலகத்துக்குச் செல்வதுமுண்டு. ஒரு சில சமயங்களில் புரூக்லீன் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் நண்பர்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அளவளாவி வருவதுமுண்டுஇதே சமயம் அனிஸ்மான் கூறியபடி மான்ஹட்டனிலிருந்த பலசரக்குக் கடையொன்றை நடாத்திக் கொண்டிருந்த குஜராத் தம்பதியினரிடமிருந்து வேலை வழங்கற் கடிதமொன்றினையும் எடுத்து வேலை செய்வதற்குரிய அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்தோம். அதே சமயம் அனிஸ்மான் கூறியபடியே எம் விடயத்தில் சட்டவிரோதமாகத் தடுப்புக் காவலில் வைத்தத்னாலேற்பட்ட மனித உரிமை மீறல்கள் விளைவித்த பாதிப்புகளுக்காக அமெரிக்க அரசிடம் நட்ட ஈடு கேட்டும் விண்ணப்பித்தோம். நாட்கள்தான் வேகமாகச் சென்று கொண்டிருந்தனவே தவிர காரியமெதுவும் நடக்கிறமாதிரித் தெரியவில்லை. இதே சமயம் மீண்டும் பகல் நேரங்களில் வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தோம்.