தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்.. நூல் வெளியீடு

தோழர் யோகரட்ணம் அவர்களது நூல் வெளியீடு 03 யூலை 2011 அன்று பாரிசில் இடம் பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.  http://www.matrathu.com/2011/05/25/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/ matrathu@hotmail.com http://www.matrathu.com/

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) – வ.ந.கிரிதரன் – 24

அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?” இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான். இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: “நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி

Continue Reading →

தொடர் நாவல்: குடிவரவாளன் (AN IMMIGRANT) – வ.ந.கிரிதரன் – 24

அத்தியாயம் இருபத்திநான்கு: அனிஸ்மானின் ஆலோசனை!

வாருங்கள் என் அன்புக்குரிய நண்பர்களே! காலை வணக்கங்கள்! இன்று நான் உங்களை சந்திக்க விரும்பியதற்கொரு முக்கியமான காரணமுண்டு. அதற்குமுன்னர் உங்களது வாழ்க்கையைப் பற்றிச் சிறிது அறிய விரும்புகின்றேன். வாழ்க்கை எப்படியிருக்கிறது? என்னால் ஏதாவது உடனடியாகச் செய்ய வேண்டியதேதாவதிருக்கிறதா?” இவ்விதமாக இளங்கோவையும் அருள்ராசாவையும் வரவேற்றார் சட்டத்தரணி அனிஸ்மான். இதற்கு இளங்கோவையே பதிலளிக்குமாறு பார்வையால் உணர்த்தினான் அருள்ராசா. அதனைப் புரிந்து கொண்ட இளங்கோ சிறிது விபரமாகக் கூறத்தொடங்கினான்: “நற்காலை வந்தனங்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும் அனிஸ்மான் அவர்களே! உங்களது பரிவான விசாரணைக்கு எமது நன்றி. நீங்கள் உடனடியாக அழைத்ததால்தான் தற்போது வந்துள்ளோம். இருந்தாலும் சிறிது காலமாகவே உங்களைச் சந்திக்க வேண்டுமென்று எண்ணியிருந்தோம். அதற்குள் நீங்களே அழைத்து விட்டீர்கள் பழம் பழுவிப் பாலில் விழுந்தது மாதிரி

Continue Reading →

பதிவுகள் கவிதைகள்

 

துவாரகன், – கே.சித்ரா , ப.மதியழகன் , மன்னார் அமுதன் , கிண்ணியா எஸ். பாயிஸா அலி, வேதா  இலங்காதிலகம் , புலவர் சா இராமாநுசம் ( சென்னை ) கவிதைகள் 

Continue Reading →

கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம் – சிறுகதைகள் தொகுப்பு –

படைப்புலகில் முழுமை பெற்றவர்களும், புனைவுகளில் ஏற்பட்ட வறட்சியாலும் எவ்வாறாவது தம்மை இலக்கியப்புலத்தில் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்ற நிர்பந்தமுடையவர்களும் இலக்கிய சஞ்சிககைகளை வெளியிட்டு வரும் காலமிது. இதனால் இலக்கிய சஞ்சிகைகள் எண்ணிக்கையிலும், தரத்திலும் மலிந்து கொண்டே வருகிறன. மேலும் தொடங்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளியிடுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளால் பல சஞ்சிகைகளின் வரவு இடையிடையிலேயே தடைபட்டு விடுகின்றன இவர்களுக்கிடையே உண்மையான படைப்பிலக்கிய ஆர்வமும்ஆளுமையும் கொண்ட இளைஞர்களும், யுவதிகளும் சிறுசஞ்சிகைகளை ஆரம்பிக்கும் போதும், தொடர்ந்து முயற்சியுடன் அவற்றை வெளிக்கொணரும் போதும் பல முட்டுக்கட்டைகளைப் போடும் மூத்தவர்கள், நாற்பது ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட மல்லிகை இலக்கிய மாசிகையை ஆரம்பித்தது ஒரு இளைஞனான மல்லிகை ஜீவா தான் என்பதை மறந்து விடுகின்றனர் 

Continue Reading →

“தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை “

ந.பிச்சமூர்த்திதமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர்களுள் குறிப்பிடத்தக்கவர் .பிச்சமூர்த்தி ஆவார். பாரதிக்குப் பிறகு மொழி ஆளுமை, கூறும் முறை ஆகியவற்றால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியவர் . பிச்சமூர்த்தி ஆவார். தத்துவார்த்தம் பிணைந்த கதை சொல்லும் முறையினைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும். இத்தகைய பெருமைக்குரிய .பிச்சமூர்த்தி தமிழ்நாட்டில் கலைகள் செழித்த மாவட்டமாகத் திகழும் தஞ்சாவூரில் உள்ள கும்பகோணம் நகரில் 1900-ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ஆம் நாள் நடேச தீட்சிதர்காமாட்சி அம்மாள் ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். 

Continue Reading →

வந்துகொண்டேயிருக்கிறது [நவீன] விருட்சம்!

அழகியசிங்கர்லதா ராமகிருஷ்ணன்மீண்டும் வருகிறது கணையாழி என்ற கட்டுரையைப் படித்தவுடன் ஏற்பட்ட மனநிறைவோடு தொடர்ந்து இருபதாண்டுகளுக்கும் மேலாக நண்பர் அழகியசிங்கர் – கவிஞர், சிறுகதையாசிரியர், விருட்சம் வெளியீடு பதிப்பாளர் – இலக்கியம் மீதுள்ள ஆர்வம் காரணமாய் வெளியிட்டுவரும் நவீன விருட்சம் (காலாண்டுச்) சிற்றிதழ் பற்றிய நினைவும் தவிர்க்க முடியாமல் வரவானது. அசோகமித்திரன், க.நா.சு, ஐராவதம், காசியபன், நகுலன், கோபிகிருஷ்ணன், ஸ்டெல்லா ப்ரூஸ் முதல் இன்றைய இளம் எழுத்தாளர்கள் வரை பலருடைய எழுத்தாக்கங்களையும் தாங்கி வெளிவந்துகொண்டிருக்கும் இலக்கியச் சிற்றிதழ் நவீன விருட்சம். ரா.ஸ்ரீனிவாசன், பெருந்தேவி, கிருஷாங்கினி, பிரம்மராஜன், வைதீஸ்வரன், ஞானக்கூத்தன், லாவண்யா, பாவண்ணன், ஜெயமோகன் என நவீன தமிழ்க்கவிஞர்கள்/படைப்பாளிகள் பலரும் விருட்சம் இதழ்களில் பங்களித்திருக்கிறார்கள். ரா.ஸ்ரீனிவாசன், என்.எம்.பதி போன்ற சிலருடைய தரமான படைப்பாக்கங்களை விருட்சம் இதழ்களில் மட்டுமே பரவலாகக் காணப்படுபவை. விருட்சம் இதழில் ஒரு சில எழுத்தாளர்களே விருட்சம் இதழ்களில் திரும்பத்திரும்ப இடம்பெறுகிறார்கள் என்று சிலர் குறைகூறுவதுண்டு. இது எல்லா இதழ்களுக்கும் பொதுவான ஒரு அம்சம் தான் என்று சொல்லமுடியும். இது குறித்து அழகியசிங்கரிடம் கேட்டபோது சிலர் நட்புக்காகவும், இலக்கிய ஆர்வம் காரணமாகவும் தொடர்ந்த ரீதியில் தம்முடைய எழுத்தாக்கங்களை அனுப்பித் தருகிறார்கள். அவற்றை வெளியிடுகிறேன். சிலரால் தொடர்ந்த ரீதியில் படைப்புகளைத் தர முடிவதில்லை. சிலர் விருட்சத்திற்குப் படைப்புகளைத் தர ஆர்வங்காட்டுவதில்லை. என்னைப் பொறுத்தவரை தரமான படைப்புகள் யாருடையதாக இருந்தாலும் நான் வெளியிட்டுவந்திருக்கிறேன். நீங்களும் படைப்புகளைத் தொடர்ந்து அனுப்பிவையுங்கள் நான் வெளியிடுகிறேன்” என்றார். எனக்குத் தான் தொடர்ந்த ரீதியில் அனுப்பிவைக்க இயலவில்லை.

Continue Reading →

Sri Lanka execution footage: UN calls for investigation

Footage broadcast by Channel 4 News showing the alleged massacre of Tamil prisoners is evidence of “serious international crimes”, the UN says, as pressure mounts for an international investigation. A UN envoy has urged the international community and Sri Lanka to further investigate footage obtained by Channel 4 News purporting to show the summary executions of naked and bound men and women during the country’s civil war. Channel 4 News first broadcast footage of the alleged execution of Tamil prisoners by Sri Lankan soldiers in 2009. Last December, damning new footage came to light of the same alleged massacre and the behaviour of government troops. The new footage revealed the naked dead bodies of at least seven women and a number of men. The faces of some government soldiers allegedl carrying out the executions could also be seen. Following an extensive investigation, Channel 4 News uncovered the identification of one of the victims captured in the video – a high profile member of the Tamil Tigers’ press and communications wing.

Continue Reading →