நாள்: சனிக்கிழமை (09-07-2011); இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது; நேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்) ஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம். முதல் பகுதி (3 மணி) : கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்; இரண்டாம் பகுதி (4.30 PM – 5.30 PM) – குறும்பட வழிகாட்டல்
கனடாவின் 144வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை ‘பீல்’ பிரதேசத்தில் வசிக்கும் கனடிய குடிமக்கள் ‘மிசசாக்கா’வில் உள்ள ‘ஸ்குயர்வண்’ (Square One) பார்வையாளர் மண்டபத்தில் சென்ற வியாழக்கிழமை மிகவும் சிறப்பாகக் கொண்டாடினர். கனடிய தேசிய கீதம், தமிழ் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து கனடிய தேசியக்கொடியை மூத்த உறுப்பினர்களில் ஒருவரான திரு. எம். சோமசுந்தரம் ஏற்றிவைத்தார். அடுத்து தாயகத்தில் மரணித்த உறவுகளுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி சபையினரால் செலுத்தப்பட்டது.
பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி. சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு வழங்கியவர்.
ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி. தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவர் விட்டுச்சென்ற தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை.
!- பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தியினை எழுத்தாளர் மேமன்கவி மின்னஞ்சல்வாயிலாக அறியத்தந்திருந்தார். ஈமச்சடங்கு பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமெனவும் அறிவித்திருந்தார். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்கு மட்டுமன்றி, உலகத் தமிழ் இலக்கிய உலகிற்கே பேராசிரியரின் மறைவு பேரிழப்பே. ஈழத்துத் தமிழ் முற்போக்கிலக்கியத்திற்கு பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோர் ஆற்றிய பணி அளப்பரியது. முதன் முறையாக இவரை நான் அறிந்து கொண்டது இவரது ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ என்னும் நூல் மூலமாகத்தான். நான் வவுனியா மகா வித்தியாலயத்தில் , 7ஆம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், மட்டக்களப்பு, புனித மைக்கல் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவில் தமிழ்க் கட்டுரைப் போட்டியில் அகில இலங்கையில் முதலாவதாக வந்ததற்காக கேடயமொன்றினையும், நூல்கள் பலவற்றையும் பரிசுப் பொருட்களாகத் தந்திருந்தார்கள். ‘மட்டக்களப்புத் தமிழகம்’, புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நூலொன்று, வடமோடி தென்மோடி கூத்துகள் பற்றிய நூலொன்று, இன்னும் சில நூல்களுடன் பேராசிரியரின் மேற்படி ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும், வளர்ச்சியும்’ நூலும் அவற்றிலடங்கும். சிறிய நூலானாலும், ஆய்வு மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்கிய, விளங்கும் நூலது. அது முதல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிய பலரும் மேற்படி நூலின் அடிப்படையிலேயே தமது ஆய்வுகளைத் தொடர்ந்திருப்பார்கள். இவரை ஒருமுறை சந்தித்துமுள்ளேன். அப்பொழுது மொறட்டுவைப் பல்கலைகழகத்தின் தமிழ்ச் சங்கத்தினரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் ‘நுட்பம்’ இதழின் ஆசிரியராகவிருந்த சமயம். அம்மலர் மிகவும் சிறப்பாக வெளிவருவதற்கு முனைவர் மு. நித்தியானந்தன் அவர்கள் மிகவும் உதவியாகவிருந்தார். அம்மலருக்கு ஆக்கங்கள் வேண்டி, அப்பொழுது யாழ்பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானபீட மாணவனாகப் பயின்றுகொண்டிருந்த நண்பர் ஆனந்தகுமாருடன் பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இருவருமே இதழுக்குக் கட்டுரைகள் தருவதாக உறுதியளித்தார்கள். ஆயினும் அச்சமயம் பேராசிரியர் க.கைலாசபதியிடமிருந்து மட்டுமே உரிய நேரத்தில் கட்டுரை எமக்குக் கிடைத்தது. பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவு பற்றிய செய்தி மேற்படி நினைவுகளை மீண்டும் ஒருமுறை எழுப்பின. அவரது மறைவையொட்டி, கானாபிரபாவின் வலைப்பதிவிலிருந்து பேராசிரியர் மெளனகுருவின் பேராசிரியர் கா.சிவத்தம்பி பற்றிய பகிர்வுகளை மீள்பிரசுரம் செய்கின்றோம். – வ.ந.கிரிதரன் , பதிவுகள் –
– I have already written a novella , AMERICA , in Tamil, based on my life at the detention camp. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. – V.N.GIRITHARAN –
CHAPTER 1 I AM BORN ANEW TODAY
From the fifth floor of the wartime naval force office building, which also functioned as the Correctional Facility, Ilango looked out to the streets of great, grand New York City. Situated on Flushing Street, the place had doubled as a detention camp for illegal immigrants and had been his only home for the past two months. Darkness from the night continued to seep through with all kinds of thoughts swirling Ilango’s mind. At last, the dream of escaping this detention camp would soon become a reality.From tomorrow onwards, he would be a real free bird. The Court of Justice has allowed him, who hitherto, has been detained in prison as an illegal immigrant waiting to be released on bail. Now, he could hope for the solution of demanding refugee status. He can go out without any constraint and face the challenges that life has in store for him. But before we continue, it would now be helpful to the readers to learn some details about this man.
அந்த வீட்டின் படுக்கையறையுள் நுழைந்ததும் பெரிய புயல் வீசியபடி இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக ஆரம்பித்து பின் பலமாக வீசிய அந்தப் புயலால் சிறிது நேரத்தில் நிலத்தில் தூக்கி வீசப்பட்டேன். தரையில் இருந்து மெதுவாக என்னை சுதாகரித்தபடி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து என்னை ஆசுவசப்படுத்திக் கொண்டேன். சில நிமிட நேரத்துக்கு பின் எழுந்து கண்ணாடி யன்னலை மெதுவாக மேலே உயர்த்த முயன்றேன். உயர்த்த முடியவில்லை. மிகுந்த பலத்தோடு உயர்த்தியபோது மீண்டும் வெளியில் இருந்து வீசிய புயல் காற்று என்னை அடித்து வீழ்த்தியது. நான்; எழுந்து வெளியே கூடத்திற்கு வந்து புத்தக அலுமாரியில் இருந்து இரண்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேற நினைத்த போது அந்த புத்தக அலுமாரி நிலத்தில் விழுந்து புத்தகங்கள் தரையில் சிதறின. ஒன்றும் தேவையில்லை என வேகமாக வெளியே வந்து எனது சுவாசத்தை பலமாக உள்ளே இழுத்து விட்டு இது பேய்பிடித்த வீடு என நினைத்துக்கொண்டு திரும்பிப் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து நடந்தேன்.’
இலங்கையில் படுகொலை – சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் டுடே கீழ்க்கண்ட நாட்களில் 3 பகுதிகளாக ஒலிபரப்ப இருக்கிறார்கள். பல முயற்சிகளுக்குப் பிறகு விலை கொடுத்து அவர்களை சேனல் 4 லிருந்து வாங்க வைத்து ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எந்த ஒரு செய்தியும் மாநிலம் தாண்டி நேஷனல் மீடியாவில் ஒலிபரப்பாகுவரை அந்தச் செய்திக்கான தாக்கம் இந்தியாவின் பிறமாநிலங்களில் இருப்பதில்லை என்கிற யதார்த்த நிலையை நாம் புறம்தள்ளிவிட முடியாது. ஏற்கனவே பார்த்தவர்களும் இதுவரைப் பார்க்காதவர்களும் தயவுச்செய்து நிகழ்ச்சியைப் பார்ப்பதன் மூலம் மேன்மேலும் பிற தொலைக்காட்சிகளும் இச்சம்பவத்தை முன்னெடுத்து செல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்.
அறிமுகம்
பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது. இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி போன்றோரின் படைப்புக்களின் கருத்துலகமும் பார்த்திபனின் கருத்துலகமும் ஒன்றுதான் என ஒப்பிட்டுக் கூறுமளவுக்கு அவரது சிறுகதைகளின் பேசுபொருள் இருக்கின்ற நிலையில் பார்த்திபனைத் தேடவேண்டும் என்ற சிந்தனை உதித்தது. இந்த வகையில் இக்கட்டுரையானது அவரது முழுப்படைப்புக்களையும் ஒரு வாசகனுக்கோ ஆய்வாளனுக்கோ தமிழ்ச்சூழலில் அறிமுகம் செய்தவற்கான ஆரம்ப நிலையாகவே அமைந்துள்ளது.
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது நகரைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் தடாகம் இலக்கிய வட்டத்தினால் 26.06.2011 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த முப்பெரும் விழாவான “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்” – கலை, இலக்கிய துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு – அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.