தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’ தமிழில். மொழிபெயர்ப்பாளரின் மு(எ)ன்னுரை!

தஸ்தயெவ்ஸ்கியின் 'அசடன்'எம்.எ.சுசீலா[ ஏற்கனவே எம்.ஏ.சுசீலா அவர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தணடனையும்’ நாவலை தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்திருக்கின்றார். அது தமிழ் இலக்கிய உலகில் பரவலான வரவேற்பினைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’ நாவலை மொழிபெயர்த்திருக்கின்றார். அம்மொழிபெயர்ப்பு தற்போது நூலுருப் பெற்றுள்ளது. மேற்படி நாவலைப் பற்றி சுசீலா அவர்கள் தனது வலைப்பதிவில் எழுதியிருந்த குறிப்புகளை இங்கே மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள்-] தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலை ‘அசடனா’க மொழிமாற்றிய அற்புதமான கணங்கள்,என்றென்றும் நினைவு கூரத்தக்க வாழ்நாள் அனுபவமாக எனக்கு வாய்த்ததால் இந்நூல் வெளியாகும் இத் தருணம் என் மனதுக்கு மிகவும் நிறைவளிக்கிறது. முழுமையான தீமை என்றோ…முழுக்க முழுக்கத் தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.

Continue Reading →

மயூரன் சுகுமாரனும் மரண தண்டனையும்

பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர்.பொது மன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில், எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில், பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடை செய்யப்பட்ட கடற்கரையொன்றில், மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டு, தனித்தனி கம்பங்களுடன் சேர்த்து கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் (Paramilitary Police) 10 மீற்றர் தூரத்தில் வைத்து தமது துப்பாக்கிகளை இயக்குவதன் வைப்பதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

Continue Reading →

Former Sri Lankan President Talks Peace

Chandrika Kumaratunga, the former president of Sri Lanka, painted a sobering picture of an island nation recovering from civil war during a talk at CGIS yesterday. Kumaratunga, who led Sri Lanka from 1994 to 2005, described her administration’s unsuccessful attempts to resolve through peaceful negotiations the long-standing conflict between Sri Lanka’s majority Sinhalese and minority Tamil populations. Sri Lanka’s first female president attributed the challenge in part to a “mentality of siege” ­that has become entrenched in the psyche of the Sri Lankan people.  “For 2000 years we were a very strong nation … but we underwent nearly 500 years of Western colonial rule and were completely subjugated for 450 years,” she said. This, she argued, helps explain why war, not peace, has held the day.

Continue Reading →

தெ. வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ பற்றிய சிறு குறிப்பு!

தெ. வெற்றிச்செல்வன்ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.

Continue Reading →

தெ. வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ பற்றிய சிறு குறிப்பு!

தெ. வெற்றிச்செல்வன்ஈழத்தமிழரின் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றி இதுவரையில் முறையான ஆய்வு நூலொன்று வெளிவரவில்லையே என்ற குறையினைத் தீர்த்துவைக்கின்றது தமிழகத்திலிருந்து சோழன் படைப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ள தெ.வெற்றிச்செல்வனின் ‘ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்’ என்னும் ஆய்வு நூல். பெயருக்கு ஒரு சில நூல்களைப் படித்து விட்டு , தங்கள் எண்ணங்களைப் பக்கம், பக்கமாக எழுதித் தள்ளும் நமது பிரபல எழுத்தாளர்களின் நுனிப்புல் மேய்தல் போலில்லாது உண்மையிலேயே மிகவும் சிரமமெடுத்து, இயலுமானவரையில் நூல்களைத் தேடிப்பிடித்து இந்த ஆய்வு நூலினைப் படைத்துள்ள வெற்றிச்செல்வனின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுதற்குரியது மட்டுமல்ல இத்துறையில் விரிவான , எதிர்கால ஆய்வுகளுக்கும் வழிவகுக்கும். அந்த வகையில் இந்த நூலுக்கு முக்கியத்துவமுண்டு.

Continue Reading →

Novel: AN IMMIGRANT – 4

Chapter 4:  A Courageous Priest

I have already written a novella , AMERICA (Within The Walls), in Tamil, based on my life at the detention camp. The journal, 'Thaayagam' was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,AMERICA (Beyond The Walls) , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   - V.N.GIRITHARAN – I have already written a novella , AMERICA, in Tamil, based on my life at the detention camp. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel , AN IMMIGRANT , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival –  outside the walls of the detention camp.   – V.N.GIRITHARAN –

Even in those early hours of the morning, there were some European tourists happily taking a bath in the sea. “Foreigners are happily enjoying a bath in the sea, but myself, who is a son of the soil keeps running to escape death. I don’t have even the freedom and rights that these foreigners have.” Thus a thought invariably came to prevail upon Ilango that very moment, creating a chasm in his mind. Observing that the movements of the thugs going along the metro train routes from Colombo to Kaali was increasing, he got down into the sea-shore sands and began to walk in the direction of Ramakrishna Hall, watching the sea and its beauty and the people bathing there. Every now and then he looked back to make sure that his friend was following him. As for his friend, he looked like a rural Sinhala youth with curly hair and slightly fair skinned. Also, he can talk Sinhalese fluently. So, he could easily escape the wrath and the consequences. But, Ilango’s situation was different. Armed with only a few Sinhalese phrases, such as ‘Oeyaage nama mokkadha?” or “dikkath dikkath thennavaa,” he is completely at a loss when it comes to speaking in Sinhalese. An incident that took place in his university life would be enough to highlight his proficiency in the Sinhala tongue. Once, the senior students who ragged him, ordered him to go buy half a ‘rathal’ of sugar. He went to the grocery store near campus, which was owned by a Sinhala man.  He uttered the phrase ‘Ekka Maaraa” which is used in Sinhala to mean one-and-a-hal ‘raathal paan’ and asked for “seeni maaraa”( the correct usage is ‘seeni baagayaa”).  It is easy to see how he became the object of ridicule to those there.

Continue Reading →

நாவல்: மனக்கண் (8)

8-ம் அத்தியாயம் சுய உருவில் ஸ்ரீதர்

அறிஞர் அ.ந.கந்தசாமி -அறிஞர் அ.ந.கந்தசாமி[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் ‘மனக்கண்’. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான ‘களனி வெள்ளம்’ , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். ‘தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். – பதிவுகள்] 

பாரதக் கதையிலே பாண்டவர்கள் யாவரும் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசம் சென்றதாகவும், அக்காலத்திலே அவர்கள் தமது பெயரையும் உருவையும் மாற்றி விராட தேசத்திலே மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. துரியோதனாதியரிடம் சூதிலே தோற்ற பாண்டவர்களில் மூத்தவராகிய தர்மபுத்திரன், தானும் தம்பியரும் மனைவி திரெளபதியுடன் பன்னிரண்டு வருட காலம் வன வாசமும், பதின்மூன்றாம் வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய ஒப்புக் கொண்டு அவ்வொப்பத்திற்குச் சிறிதும் பிழையில்லாமல் நிறைவேற்றியதாகவும் பாரதக் கதை கூறுகிறது. பதின்மூன்றாம் வருடத்தின் கடைசி நாளும் கழிந்து பதினான்காம் வருடத் தொடக்க நாளில் பாண்டவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள்? பத்மா வீட்டில் தான் யாரென்பதைப் பத்மா முன்னிலையிலும் பரமானந்தர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டு, அதன் மூலம் தன் சுய உருவத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதர் அன்று அந்த நிலையில் தான் இருந்தான். ஆள் மாறாட்ட நாடகத்தால் ஏற்பட்ட மனப்பாரமும், எங்கே பிடிபட்டு விடுகிறோமோ என்ற அச்சமும் முற்றாக ஒழிந்து விட, ஒரே ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தான் அவன்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஒரு வித்தியாசமான குரல்!

நூல்:  கருணாநிதி என்ன கடவுளா?வெங்கட் சாமிநாதன்தமிழ் நாடு சட்ட மன்ற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சில மாதங்களாகிவிட்டன. கடந்த பத்து வருடங்களாக இடைவிடாது கேட்டு வந்த இரைச்சல், நாமாவளி தமிழினத் தலைவா போற்றி, கலைஞரே போற்றி, முத்தமிழ்க் காவலரே போற்றி, இன்னும் எத்தனை போற்றிகளோ, மாதிரிக்கு ஒன்றிரண்டு தந்தால் போதாதா, அந்த இரைச்சல், தமிழகம் முழுதும் கேட்டு வந்த அந்த இரைச்சல் இப்போது கழகக் கூட்டங்களோடு, அறிவாலயத்தோடு முடங்கிக் கிடக்கிறது. முன்னரோ கம்யூனிஸ்ட் கட்சியினரும் அதிமுகவினரும் தவிர மற்ற எல்லோரும் ஏகோபித்து எழுப்பிய இரைச்சல் இதன் உச்ச கட்டம், காமராஜர் ஒரு சகாப்தம் என்று காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கோபண்ணா, என்னும்  காங்கிரஸ் காரர், அந்த புத்தகத்தை  வெளியிட கருணாநிதியை விட வேறு தகுதியானவர் இல்லை என்று தேர்ந்தது தான். காமராஜரை, கருணாநிதியைவிட கேவலமாகப் பேசிய இன்னொரு தமிழக அரசியல் தலைவர் இருப்பாரா தெரியவில்லை. இருப்பினும் கோபண்ணாவுக்கு காமராஜர் விருதும் கலைஞர் கையால் வழங்கப்பட்டது கோபண்ணாவின் புதிய விசுவாசத்துக்கு பரிசாக. பீடர் அல்ஃபான்ஸ் என்ன, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு என்ன எல்லோரும் அவர்கள் சார்ந்த கட்சியின் கொள்கையில் பாரம்பரியத்தில் கருணாநிதிக்கு எதிர் முனைகளானாலும், கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாழ்வார்கள் தான்.

Continue Reading →

அதிர்வுகளைத் தந்த ஆவணப்படம்: துவேஷ அரசியலுக்கு எதிராக மக்கள் ஒன்றுமை காக்க ‘இறுதித் தீர்வு’ (Final Solution)

Final Solutionஇயக்குநர் ராகேஷ் சர்மா27 பிப்ரவரி 2002 எஸ்-6-கோச் சபர்மதி எக்ஸ்பிரஸ் கோத்ரா சம்பவம்-59 இந்துக்கள் எரிக்கப்பட்டது. யாரும் மறக்க முடியாத, இந்திய அரசியலையே திசைதிருப்பிய நிகழ்ச்சி இது. குஜராத்தின் சங்கப்பரிவாரப் பட்டாளங்கள் இச்சம்பவத்தைச் சாக்கு வைத்து தங்களது பா.ஜ.க. நரேந்திர மோதி அரசு எந்திரத்தின் உதவியைக் கொண்டு முகமதியர்கள் மீதான தங்கள் துவேஷத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். 2500 பேர் படுகொலை நூற்றுக்கணக்கில் பெண்கள் மீது வன்புணர்ச்சி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக விரட்டப்பட்ட கொடுமை என இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின், திட்டமிட்ட சதியின் மூலம் நிகழ்த்தப்பட்டது இது. மறு விசாரணைக்குப் பின் புதிய தீர்ப்பு பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. மூன்றரை மணிநேரம் ஓடக்கூடிய ஃபைனல் சொலூஷன் படம் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Continue Reading →