படப்பெட்டி இதழ் 1 – ஜூன் 2005

தமிழில் வெளிவந்த மாற்று ஊடகம் சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கே இணையத்தில் வாசிக்கக் கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ செயல்பட்டுக் கொண்டிருகிறது. அதன் ஒரு பகுதியாக படப்பெட்டி இதழின் முதல்…

Continue Reading →

அண்ணா நூற்றாண்டு நூலகம்……

அன்புள்ள அண்ணா பற்றாளர்களுக்கு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சிறப்புகளும், அது மாற்றப்படுவதற்கான கண்டனங்களும் பார்க்க   http://www.arignaranna.info/ACL_REPORTS.htm நன்றி. அன்புடன்,இரா.செம்பியன்அண்ணா பேரவைதஞ்சாவூர்போன்: 9380552208 annaperavai@yahoo.co.in

Continue Reading →

பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா அழைப்பிதழ்!

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம். பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா  12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்! அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம். பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா  12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்!

அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் – பிரான்சு

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

நாள்: 12-11-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர்  இயக்குனர் பெயர்  கால அளவு  பற்றிய விபரங்கள் கீழே:

Continue Reading →

குஜராத் கலவர வழக்கு: 31 பேருக்கு ஆயுள் தண்டனை

மெஹசானா(குஜராத்), நவ.11 - குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு கலவரத்தின் போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2002 ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்து வன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் 22 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர்.மெஹசானா(குஜராத்), நவ.11 – குஜராத் கலவரத்தின் போது 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 31 பேருக்கு ஆயுள் தண்டனை  விதிக்கப்பட்டுள்ளது. 42 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு கலவரத்தின் போது சர்தார்புரா கிராமத்தில் வீடு ஒன்றில் இருந்த 33 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத் கலவர வழக்கில் வழங்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் உட்பட 59 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2002 ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதையடுத்து குஜராத் முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை பரவியது. 2002 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ம் தேதி இரவில் மெஹசானா மாவட்டம் சர்தார்புரா நகரில் சிறுபான்மையினர் இருந்த வீட்டை சுற்றி வளைத்து வன்முறையாளர்கள் பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் 22 பெண்கள் உட்பட 33 பேர் பலியாயினர்.

Continue Reading →

அக்டோபர் புரட்சி நினைவாகப் பேருரை; நூல் வெளியீடு!

அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம். இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றன.மகத்தான அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை செல்வி திருச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வுக்கு திரு.பி.பி.தேவராஜ் தலைமை தாங்கினார்.அக்டோபர் புரட்சி பற்றி அறியாத முற்போக்குக் கருத்துடையோர் இருக்க முடியாது. இது ரஷ்யப் புரட்சியின் இரண்டாம் கட்டமாகும்.1917ம் ஆண்டில் நடந்தது. இரண்டாவது அக்டோபரில் நிறைவுற்றது. முதலாவது 1917 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்க்ஸின் கருத்துக்களின் அடிப்படையில், இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற முதலாவது பொதுவுடைமைப் புரட்சி இதுவாகும். 1922ல் சோவியத் ஒன்றியம் உருவாவதற்கு முன்னோடியாக அமைந்தது இதுவெனலாம். இந்த மகத்தான நிகழ்வின் நினைவாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின ஆதரவில் பேருரையும் நூல் வெளியீடும் நடைபெற்றன.மகத்தான அக்டோபர் புரட்சி நினைவாக பேருரை செல்வி திருச்சந்திரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

Continue Reading →

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது

சென்னை, நவ. – 9 – எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆப் பிரன்ட்ஷிப் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை பெறும் முதல்…

Continue Reading →

சிறு குறிப்பு: ‘டொராண்டோ’வில் எழுத்தாளர் ‘கடலோடி’ நரசய்யாவுடனொரு சந்திப்பு!

நரசய்யாதமிழ் இலக்கியத் தோட்டத்தின் ஆதரவில் இன்று , நவம்பர் 5, 2011, ‘டொராண்டோ’ வில் எழுத்தாளர் நரசய்யாவுடனொரு சந்திப்பு நடைபெற்றது. நான் சென்றபோது கூட்டம் தொடங்கிவிட்டது. நரசய்யா ஆரம்பகாலக் கடற்படைப் பொறியியலாளராகப் பணியாற்றிய தனது அனுபவத்தையும், ஆனந்தவிகடனுக்குக் கதைகள் எழுதிய அனுபவத்தையும் விபரித்துக்கொன்டிருந்தார். தனது முதற் சிறுகதையே விகடனில் முத்திரைக் கதையாக வெளிவந்த அனுபவத்தையும் நினைவு கூர்ந்தார். – சுற்றிவரப் பார்த்தேன். எழுத்தாளர்களான என்.கே.மகாலிங்கம், அ.முத்துலிங்கம், செழியன், டானியல் ஜீவா, க.நவம், திருமாவளவன், சுமதி ரூபன், ‘காலம்’ செல்வம் எனப் பலர் சமூகமளித்திருந்தனர். – முனைவர் செல்வா கனகநாயகம் அவர்களின் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.

Continue Reading →

கனடா: காலம் இதழின் ஆதரவில் ஊடறு & விடியல் வெளியீடாக ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ – போராடிய பெண்களின் எழுத்துகள்’ – கவிதை நூல் வெளியீடு!

இடம்: Mid Scarborough Community centre, 2467 Eglinton Av, Scarborough; காலம்: 13 November 2011; 4.30 – 8.30 PM

Continue Reading →

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’

வெங்கட் சாமிநாதன்தமிழ் மகனின் 'வெட்டுப் புலி' தமிழ்மகன்திராவிட இயக்க அரசியல் சார்ந்த முதல் இலக்கிய பதிவு கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழ் நாடு பெரும் சமூக மாற்றங்களை, அரசியல் மாற்றங்களை, கண்டிருக்கிறது. இம்மாற்றங்களின் விளைவாக வாழ்க்கை மாறியுள்ளது. வாழ்க்கை மதிப்புகளும் மாறியுள்ளன. ஆனால் இந்த அரசியல் போராட்டங்களோ அவற்றின் பின்னிருந்த உந்துசக்திகளோ பார்வைகளோ மாறிய வாழ்க்கை இலக்கியத்தில் , கலைகளில் பதிவு பெற்றதில்லை. காரணம் இவை எவற்றிலும் உண்மை இருந்தது இல்லை. சத்தம் பெரிதாக இருக்கலாம். ஆனால், ஆழ்மனதில் ரத்தத்தில் கொதிநிலையில், அனுபவத்தில்இல்லாத எதுவும் இலக்கியமாக கலைகளாக மலர்வது சாத்தியமில்லை. குறிப்பாக 1916—ல் பிரகடனப் படுத்தப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் பிறந்து, பல அவதாரங்களில் பல்கிப் பெருகி, இன்று தமிழ் நாட்டின் பெரும் அரசியல் சமூக சக்தியாக விளங்கும் திராவிட இயக்கமும் சரி, அதற்குச் சற்றுப் பின் தோன்றி இன்று வரை சமூகத்திலும் சரித்திரத்திலும் எந்த வித பாதிப்பையும் விளைவித்திராத பொது உடமை இயக்கமும் சரி, கிட்டத் தட்ட ஒரு நூற்றாண்டு கால இவற்றின் தொடர்ந்த் இருப்பில்  இவ்விரண்டின் கூச்சல், மேடைப் பேச்சுக்களிலும், பத்திரிகைப் பிரசாரங்களிலும் மிக உரக்க இருந்த போதிலும், இவை பிரசாரமாகவே நின்றுவிட்டன, ஆதியிலிருந்து இன்று வரை .இவையெல்லாம் என்னதான் நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், சினிமா என்று எல்லா இலக்கிய, கலை வடிவங்களிலும் எழுதிக் குவிக்கப் பட்டுக்கொண்டே இருந்தாலும், அவை குப்பைகளாகத் தான் மலையென பெருகிக் கிடக்கின்றன.

Continue Reading →