About 200,000 displaced people are still living in refugee camps in northern Sri Lanka, even though southerners believe everything is back to normal. The government organises trips to the war zone only to show monuments that celebrate the army’s victory. Almost three years since the end of 30 years of ethnic conflict, Sri Lanka has not yet resolved its so-called ‘Tamil problem’. About 200,000 Tamil internally displaced people live in refugee camps in the northern part of the country under military control, unable to go home to their villages. Ethnic Sinhalese appear oblivious of what went on (bombardment and war crimes) and is going on trips to the former war zone. Here is a story of courage and hope of a priest who visited the refugee camps in Cheddikulam. Most Sinhalese in southern Sri Lanka do not believe a ‘Tamil problem’ exists.
உலகிலுள்ள உயிரினங்கள் அத்தனையும் அன்பு, பரிவு, பாசம் காட்டுவதால் ஆண், பெண் பாலாரிடம் காதல் எழுந்து, அவர்கள் ஒன்றறக் கலந்து, தம் இன விருத்தியை நிலைநாட்டிப் பூமித்தாய்க்குப் பெரும் பங்காற்றி வருகின்றன. மனித இனத்தைத் தவிர்ந்த, மற்றைய உயிரினங்கள் யாவும் திருமணம் என்று வெளிப்படையாக நடாத்தா விட்டாலும், அவையும் ஏதோ ஒரு வகையில் ஒரு மணம் புரிகின்றன. திருமணங்கள் நாட்டுக்கு நாடு – காலத்திற்குக் காலம் வேறுபட்டிருக்கின்றன. திருமணங்கள் அனைத்திலும் சிறந்தது காதல் திருமணமேயாகும். காதல் திருமணத்தில்தான் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கின்றன.
[ 30.4.2011 அன்று மாலை வாதங்கள் விவாதங்கள், தொகுப்பு வெளியிடப்பட்ட தருணம் கடைசியில் நான் நன்றி கூறு முகமாகச் சொன்னது, இங்கு சற்று ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ] முஸிபத் கபீ அகேலே நஹி ஆத்தி என்பார்கள். நம்மூரிலெ கூட கேட்டை மூட்டை செவ்வாய் என்று ஏதோ சொல்வார்கள். கஷ்ட காலம் என்று வந்தால் அது தனியாக வராது. நீங்கள் எல்லாம் மூன்று மணி நேரமா உட்கார்ந்திருக்கிறீர்கள். கடைசியில் நான் நன்றி சொல்ல வேண்டும். அதைத் தவிர்க்க முடியாது. இவ்வளவு பெரிய நல்ல பேச்சாளர்களை இவ்வளவு நேரமாகக் கேட்டீர்கள். அவர்கள் பேச்சு உங்களைக் கவர்ந்திருக்கிறது. கடைசியாக நான். இவ்வளவு கஷ்டங்கள் போறாதா? சரி, நான் ரொம்ப காலமாக நான் ஒரு எழுத்தாளனே இல்லை என்று நானே சொல்லி வந்திருக்கிறேன். உங்களுக்கெல்லாம் தெரியும். அத்தோடு இன்று நான் ஒரு பேச்சாளனும் இல்லை என்பதை நானே இங்கு நிரூபிக்கப் போகிறேன். ஒரு மேடை கிடைத்து மைக்கையும் கையிலே கொடுத்துவிட்டால் பேச ஆசைப்படாத தமிழன் யாராவது இருப்பானா என்பது சந்தேகம் தான். நான் இருக்கேன். இந்த விதத்தில் பார்த்தாலும் நான் தமிழனே இல்லை என்பதற்கான சான்று கிடைத்து விடும். இது இன்னம் ஒரு சான்றுதான்.. இன்னும் நிறைய எத்தனையோ சான்றுகள் என்னைத் தமிழனே இல்லை என்று ஒதுக்கித் தள்ளக் காத்திருப்பவர்கள் கையில் தயாராக இருப்பதும் வாஸ்தவம் தான். சரி போகட்டும். இது உண்மை. என்னைப் பற்றிய உண்மை எதையும் சொல்வதில் தவறு ஏதும் இல்லை.
‘பதிவுகளி’ல் வெளிவந்த சிறுகதைகளில் சில ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றன். இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் , சிறுகதைகளுட்பட , இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-