எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது 2011!

எஸ். ராமகிருஷ்ணன் 2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்‌ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ்.பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை இந்த விருதுக்கு உரியவராக கடந்த 25 வருடங்களாக தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்ட எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தேர்வாகியிருக்கிறார்.

Continue Reading →

உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை – 14 ஜனவரி 2012

In the history of political societies, there are times, which come very rarely, when individuals, groups, organisations and peoples in general within it are required to shed their differences and connect one with another, united to repel the aggressive forces threatening their existence in order to promote the general good of society. The Tamil speaking peoples in Sri Lanka are passing through such times. The victorious Sri Lankan state is heaping a long train of abuses on them, occupying their lands, denying their liberty, usurping their property, pursuing a design to reduce them to perpetual servitude. It is the right of the oppressed to reject such state practices and guard their future welfare and security. Such has been the patient sufferance of these peoples that we need to dissolve our differences and strengthen our resolve to alter this system of governance.இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையேயான ‘பேச்சுவார்த்தை’ பற்றி உலகத் தமிழர் பேரவை அரசியல் சமூகங்களின் வரலாற்றில் தனியார், குழுக்கள், அமைப்புக்கள் மற்றும் பொதுப்படையாக மக்கள் போன்றோர் தமது வாழவின் அடித்தளத்தையே அச்சுறுத்தும் ஆதிக்க சக்திகளை எதிர்த்து, சமுதாயத்தின் பொது நன்மையையை மேம்படுத்துவதற்காகத் தம்மிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒருவரோடு ஒருவர் ஐக்கியப்பட்டு ஒன்றாகச் செயற்பட வேண்டிய சந்தர்ப்பங்கள், மிக அரிதாகவெனினும், ஏற்படுவதுண்டு. இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இப்படியான காலகட்டத்தில் உள்ளனர்.  வெற்றியீட்டிய இலங்கை அரசானது எம்மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், அவர்களின் விடுதலையுரிமையை மறுத்தல், உடைமைகளைப் பறித்தல், அவர்களை நிரந்தர அடிமைகளாக்குவதற்கான திட்டத்தைச் செயற்படுத்தல் ஆகிய அடாத்துக்களைத் தொடர்ச்சியாகக்  குவித்து அவர்களை நிரந்தர அடிமை நிலைக்குத்தள்ள எத்தனிக்கின்றது. இவ்வாறான அரச அடக்குமுறைகளை எதிர்த்துத் தம் வருங்கால நலன்களையும் பாதுகாப்பையும் காப்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமையாகும். மேற்கூறிய அடக்குமுறைகளை எம்மக்கள் வேறு வழியின்றி அமைதியாகச் சகித்து வாழ்ந்து வரும் இவ்வேளையில் நாம் எம்மிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளைக் களைந்து தற்போதுள்ள அரசமுறையை மாற்றியமைப்பதற்கு எமது உறுதிப்பாட்டை வலிமைப்படுத்துதல் வேண்டும்.

Continue Reading →

நூல் அறிமுகம்: ஆழி பதிப்பகத்தின் ‘மரணத்தில் துளிர்க்கும் கனவு’ – கவிதைத் தொகுதி பற்றி…

முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார்.கவிஞர் தீபச்செல்வன்முள்ளிவாய்க்கால் என்ற மரண நிலத்தையும் நந்திக்கடல் என்ற மரணக் கடலையும் ஈழத் தமிழினம் மறந்துவிட இயலாது என்று மரணத்தில் துளிர்க்கும் கனவு கவிதை புத்தகத்தின் தொகுப்பாசிரியர் ஈழக் கவிஞர் தீபச்செல்வன் தெரிவித்துள்ளார். வரலாற்றின் தொடர்ச்சியாக தொடர்ந்து வாழ்தலுக்காக நீதியையும் அநீதியையும் பதிவு செய்வதற்காக போரையும் குற்றத்தையும் எடுத்தியம்புவதற்காக வெற்றியையும் வீழ்ச்சியையும் விவாதிப்பதற்காக ஈழத்தின் போர் இலக்கியம் தொகுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஆழி பதிப்பகம் ஈழத்தை சேர்ந்த எட்டு சமகால கவிஞர்களின் கவிதைகளை மரணத்தில் துளிர்க்கும் கனவு என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது. வருடம் தோறும் தமிழகத்தில் இடம்பெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு நடைபெறும் 35ஆவது சென்னைப் புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை தொகுத்துள்ள ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிட்டவை வருமாறு: ஈழத் தமிழினம் வரலாறு காணாத அழிவை சந்தித்திருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் அரசியலையும் வாழ்வையும் பொறுத்தளவில் பெரும் வீழ்ச்சியாக இப்போர் முடிந்திருக்கிறது. அழிவு என்ற பேரிலக்குடன் இந்தப் போர் நடத்தப்பட்டது. இந்தக் காலத்தில் ஈழத் தமிழினம் பேரழிவுக்கு முகம் கொடுத்திருக்கிறது என்பது தாங்க முடியாத மகா துயரம்.

Continue Reading →