யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார். சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

நூல் அறிமுகம்: நல்வழி சிறுவர் இலக்கிய கவிதைத் தொகுப்பு மீதான இரசனைக் குறிப்பு

கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.  கிழக்கு மாகாணத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த க. சபாரெத்தினத்தின் சிறுவர் இலக்கியம் சார்ந்த நல்வழி என்ற கவிதைத் தொகுதி 39 பக்கங்களை உள்ளடக்கியதாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. இவர் ஏற்றமிறக்கம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டிருக்கிறார். இத்தொகுதியில் 35 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கல்வி அமைச்சின் தேசிய நூலக அபிவிருத்தி சபையினால் பாடசாலை மாணவர்களுக்கான நூலகப் புத்தகமாக இக் கவிதை நூல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது.  ‘எட்டு, ஒன்பது வயது தொடக்கம் பதினெட்டு வயது வரையான கல்வி கற்கும் குழந்தைகளின் அறிவு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் நல்ல பல கருத்துக்களை மையமாக வைத்து இலகு நடையில் கவிதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சாதாரணமாக வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய புற அழுக்காறுகளினின்றும் தமது வாஞ்சையை மாற்றி நன்னெறி மார்க்கத்தை நோக்கிப் பற்றுக்கொண்டு வளர்ந்து வர ‘நல்வழி’ என்னும் இக் கவிதை நூல் பெருமளவில் உதவும் என நம்புகின்றேன். சோவியத்து பஞ்சவர்ணக் கிளிகள், வாராய் வலம் வருவோம் போன்ற கவிதைகள் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை ஊட்டுவதற்காகவும், இயல்பு நிலையில் சிறிது அனாயாசமாக சிந்திக்கவும் என்றே இடையிடையே உட்புகுத்தப்பட்டுள்ளன’ என்று திரு. சபாரெத்தினம் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.

Continue Reading →