மீள்பிரசுரம்: அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’

லத்தீன் அமெரிக்காவில் மாய யதார்த்தம் அறிமுகமாவதற்கு கால்நூற்றாண்டுக்கு முன்னரே அதீன் இந்நாவலை எழுதிவிட்டிருக்கிறார். அன்றாட யதார்த்தத்தின் உள்ளே நாட்டுப்புறக் கதைகளில் இருந்து உருவான மாயக்கதைகள் உயிருடன் ஊடாடிக் கிடக்கும் சித்திரத்தையே நாம் இதில் காண்கிறோம். மாயச்சித்திரங்கள் நாவலின் யதார்த்ததுக்கு ஒருவகையான தீவிரத்தை ஊட்டுகின்றன. யதார்த்தம் மாயத்தை நம்பும்படியாக மாற்றுகிறது. மணீந்திரநாத் முற்றிலும் மாய உலகமொன்றில் வாழ்கிறார். கவிதை மட்டுமே மொழியாக உள்ள , காலம் குழம்பிய ஓர் உலகில். சில கதைகள் யதார்த்தமான ஒரு விளக்கம் கொடுக்கப்பட்ட மாயங்களாக உள்ளன. உதாரணம் பக்கிரி சாயபு ஒரு பீர் ஆக மாறும் இடம். சிறு உத்தி ஒன்றின் மூலம் கிராமநம்பிக்கையில் எந்நாளும் அழியாத ஒரு நினைவாக அவர் மாறுகிறார். மதங்களைக் கடந்த மனிதாபிமானம் மூலம் மானுட மனங்களில் ஏற்கனவே அவர் தன்னை நிறுவி விட்டிருந்தமையால்தான் அது சாத்தியமாகிறதுகற்பனாவாத எழுத்தின் முக்கியமான சிறப்பியல்பு என்ன? அது வெகுதூரம் தாவ முடியும் என்பதே. உணர்ச்சிகள் சார்ந்து, தத்துவ தரிசனங்கள் சார்ந்து, கவித்துவமாக அதன் தாவல்களுக்கு உயரம் அதிகம். அந்த உயரத்தை யதார்த்தவாதம் ஒருபோதும் அடைந்துவிடமுடியாது. ஆகவேதான் முற்றிலும் யதார்த்தத்தில் வேரூன்றிய ஆக்கங்களை விட ஒரு நுனியில் கற்பனாவாதத்தையும் தொட்டுக்கொள்ளும் ஆக்கங்கள் பெரிதும் விரும்ப்பபடுகின்றன – சிறந்த உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி. அவரது கற்பனாவாதம் மானுட உணர்வுகளையும் தரிசனங்களையும் உச்சப்படுத்தி முன்வைக்கும் விதத்தில் உள்ளது.

Continue Reading →

மீள்பிரசுரம்: விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’

வங்க இலக்கியத்தில் விபூதி பூஷன் பந்தோபாத்யாயவின் இடம் மிக மிக முக்கியமானது. அறுபதுகளில் அங்கு நவீனத்துவ அலை ‘பாதேர் பாஞ்சாலி’யின் [ வங்கத்தில் பொதேர் பஞ்சாலி .பாதையின் குரல்கள்] ஆசிரியர்’ யார் என்று கேட்டால் கணிசமானோர் `சத்யஜித்ரே’ என்று கூறக்கூடும். அப்புகழ்பெற்ற திரைப்படத்தின் பாதிப்பு அத்தகையது. அந்த விரிவான பாதிப்பிற்கு படம் மட்டும் காரணமில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அது ஓர் அழகிய திரைப்படம்-அவ்வளவுதான், தீவிரமானதோ மகத்தானதோ அல்ல. அதன் காட்சிப்படிமங்களில் நம் ஆழ்மனத்துக்குள் செல்லும் மறைபிரதி இல்லை. எது காட்டப்படுகிறதொ அதுவே அப்படம். ஆனால் அப்படம் பலவகையிலும் முன்னோடியானது. மேற்கத்திய புது யதார்த்தபாணி திரைப்படங்களை அடியொற்றி இந்திய திரைப்படத்துறை தன் படிமமொழியை கண்டடைந்தது. அத்திரைப்படம் வழியாகத்தான். மிதமிஞ்சிய உற்சாகத்துடன் நாற்பது வருடங்களாக பாதேர் பாஞ்சாலி திரைப்படம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு அடிப்படையாக அமைந்த விபூதி பூஷன் பந்த்யோபாத்யாயவின் அபூர்வமான நாவல் பேசப்பட்டது மிகவும் குறைவு. என் கணிப்பில் கலைப்படைப்பு என்று பார்த்தால் விபூதி பூஷனின் நிழல்தான் சத்யஜித்ரே.

Continue Reading →

புத்துலகு அமெரிக்காவில் தொல்தமிழர் பழமை அடையாளம்

கோடு ஊடுருவிய ஆங்கில D - தி, ஆங்கில U வடிவு - க். அன் ஈறு சேர்த்து திக்அன் > திக்கன் என படிக்கலாம்.புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் புத்துலகு அமெரிக்காவின் செவ்விந்திய மக்கள் காகேசியன், மங்கோலியன் மற்றும ஆத்திரிக்கு(Astraloid) மரபினங்களின் கலப்பால் உண்டானவர்கள் என அறிஞர் உரைக்கின்றனர். சற்றொப்ப 30,000 –  20,000 ஆண்டுகளுக்கு முன்னம் ரசியாவையும் அலாசுகாவையும் இணைத்தபடி இருந்த பெர்ரிங்கு நிலப்பாலம்  ஊடாக ஆசிய, ஐரோப்பாவில் இருந்து பெயர்ந்த தொல் மாந்தர் வட, தென் அமெரிக்காவில் பரவி வாழ்ந்தனர். இங்கு 12,500 ஆண்டுகள்  அளவில் கற்காலம்  தொடங்கியதாக அறியப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 9,000 ஆண்டுகள் அளவில் சிறுசிறு  வேளாண் குமுகங்கள் அமைந்ததாக தொல்லியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Continue Reading →