[‘பதிவுகளி’ல் வெளிவந்த கட்டுரையிது ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. வ.ந.கிரிதரனின் ஜெயமோகனின் ‘கன்னியாகுமரி’ நாவல் பற்றிய ‘திண்ணை’ விமரிசனத்தையொட்டிய எழுத்தாளர் மைக்கலின் கடிதமிது. இதுபோல் அவ்வப்போது மேலும் பல ஆக்கங்கள் இனி வரும் இதழ்களில் மீள்பிரசுரமாகும் – பதிவுகள்-]சிந்தனையின் போக்குகள் வலதும் இடமுமாக மாறி மாறித்தான் பயணிக்கும் என்பதில் எனக்கும் மறுப்பு இல்லை. நேர்கோட்டுப்பாதை என்பது ஏதாவது ஒரு தத்துவத்தை, கட்சிகளை, தனிநபரை வணங்குவதில் வந்து முடிந்துபோவது எமது மார்க்சியர்களின் கறாரான விமர்சன மரபு அல்லது எமது ஈழத்து இயக்கங்கள் சொல்லித் தந்த பாடங்கள். ஆகவே குறித்த படைப்பு மீதான பல்வேறு பார்வைகள் வரவேற்க வேண்டிய ஒன்றுதான்.