அ.ந.க.வின் படைப்புகள் அனைத்தையும் சேகரிப்பதற்குப் பற்பல வழிகளில் ‘பதிவுகள்’ முயன்று வருகின்றது. தினகரனில் வெளிவந்த ‘மனக்கண்’ நாவலின் முழு அத்தியாயங்களும் திருமதி கமலினி செல்வராசனிடம் இருந்ததாக அறிந்து தொடர்பு கொண்டோம். ஆனால் அதனைப் பெற முடியாமல் போயிற்று. அதன்பின்னர் இலங்கைச் சுவடிகள் திணைக்களத்துடன் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டபோது அவர்கள் நியாயமான கட்டணத்தில் A 4 அளவுத் தாளில் பிரதிகளெடுத்து அனுப்பியிருந்தார்கள். அதற்காக சுவடிகள் திணைக்களத்திற்கு நன்றி கூறவேண்டும். ஆனால் அவர்கள் அனுப்பிய பிரதிகளில் எழுத்துகள் மிகச் சிறியனவாக இருந்த காரணத்தினால் தமிழகத்திற்கு அனுப்பி , நண்பர் ‘ஸ்நேகா’ பாலாஜி மூலம் நியாயமான கட்டணத்தில் தட்டச்சு செய்து எடுப்பித்தோம்.
[ஆஸ்திரேலியாவில் வசிக்கும் திருமதி பராசக்தி சுந்தரலிங்கத்தைப் ‘பதிவுகள்‘ வாசகர்கள் அறிவார்கள். அவர் தற்போது உடல்நலம் குன்றி மருத்துவநிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது உடல்நிலை பற்றிய தகவல்களை http://twitter.com/ParaSundha என்னும் இணையத்தளத்தில் அறிந்துகொள்ளலாம். அவர் விரைவாக உடல் நலம் தேறிட பதிவுகளும், பதிவுகளின் வாசகர்களும் வேண்டிக் கொள்கின்றார்கள். இச்சமயத்தில் அவர் பதிவுகளில் எழுதிய கட்டுரையினை மீள்பிரசுரிப்பதும் பொருத்தமானதே. – பதிவுகள்] வரலாற்றாசிரியர் ஒருவர் ஒரு நாட்டின் தற்கால வரலாற்றை எழுதுவதற்கும் அதன் புராதனகால வரலாற்றை எழுதுவதற்கும் அதிக வேறுபாடு உள்ளது. அச்சுயந்திரம், தொழில் நுட்பப் பயன் பாட்டினால் வரலாறு, மற்றும் செய்திகள், இன்று முறையாக ஆவணப் படுத்தப்படுகின்றன. ஆனால், ஏட்டுச் சுவடிகளையும் புராணக் கதைகளையும் செவிவழிச் செய்திகளையும் ஓரளவு கிடைத்த சாசனங்களையுமே ஆராய்ந்து பூர்வீக வரலாற்றை எழுதியவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.