‘பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளரான வி. ரி. இளங்கோவன் இலக்கியத்துறையில் முழுநேரமாக ஈடுபட்டு அதிக நூல்களை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார். அவரது சகோதரர்கள் யாவரும் கலை இலக்கியம், மருத்துவம், அரசியல் துறைகளில் ஈடுபட்டுழைத்தவர்கள் தான். இளங்கோவன் சிறுகதைத் தொகுதி ‘பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்” என்ற பெயரில் இந்தி மொழியில், அண்மையில் புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டு இளங்கோவன் கௌரவிக்கப்பட்டமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதாகும். அவரது புதிய நூல்களின் அறிமுக நிகழ்வுக்கு பாரிஸ் நகரில் வாழும் கலை இலக்கியப் படைப்பாளிகள், அபிமானிகள் பெருமளவில் திரண்டு வந்து ஆதரவளிப்பது ஆரோக்கியமானதாகவுள்ளது.”
வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு ‘வெற்றி பெற வேண்டும்’ என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.
– சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவரும் அகராதி தொகுப்பாளருமான கலைமகள் செய்தியாளர்களுக்கு சீன-தமிழ் அகராதியைக் காண்பித்தபோது எடுத்தபடம். –
மனித உரிமைகளின் மூலம் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு; Parliamentarian Forum on Human Rights For Global Development 07-06-2013 – இலங்கைத்…
15 மகன் திரும்பல
“நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”
“பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது சமை…..அம்பிகை பசி வயிற்றைக் கிள்ளுது…..!” சமையலில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரியாது என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட தினகரன் மனைவியின் முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
“என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி நேரத்திலே உங்களுக்குப் பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை சில நிமிடத்தில் தேநீர் கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.
இரவு மணி ஏழு. இன்னும் பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை சமையல் வேலைகளில் மும்முரம் காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில் வேலைக்குச் சென்ற மகன் இன்னும் இல்லம் திரும்பாமல் இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.
அந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தரம்பிள்ளைக்கு விடுமுறை நாள். வீட்டில் மனைவி , பிள்ளைகளுடன் ஒன்றாக இருக்க கிடைத்த அந்த நாளை ஓவட்ரைம் செய்வதற்கு ஒப்புக்கொண்டதால் வேலைக்கு வந்தது மட்டுமல்லாது விடுமுறையில் இருந்த சாமையும் துணைக்காக இழுத்து வந்ததான். அன்று விசேடமான வேலை நாள். பெண் பூனைகளை மட்டும் கருத்தடை ஆபிரேசன் செய்வதற்கு வேதனத்துக்கு அப்பால் விசேடபோனசாக பணம் கிடைக்கும் என்பதால் அன்று வேலை செய்ய ஒப்புக்கொண்டிருந்தான். சொந்தமாக வீடு வங்கியதால் ஏற்பட்டுள்ள பெரிய வங்கிக்கடனில் இந்த பணம் சிறு துளியாக உதவும் என்ற சிந்தனையில் ஒப்புக்கொண்ட வேலையிது. மற்றைய நாட்களைப் போல் காலை வந்து இரவுவரை வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
இருபது பெண் பூனைகளும் ஒரு ஆண் பூனையும் கருத்தடை ஆபரேசன் செய்ய வேண்டி இருந்தது. அதை செய்து முடித்தால் எப்போதும் வீடு செல்லலாம். ஓவ்வொரு பூனைக்கும் இவ்வளவு பணம் என்பதுதான்.
கவிஞர் இந்திரன் கலைத் தூதர் போன்று தமிழகத்திலிருந்து குவாடெலூப் (Guadeloupe) தீவுக்குச் சென்றுவிட்டு நாடு திரும்பும் வழியில் உறவுகளைச் சந்திப்பதற்காக மூன்று நாட்கள் பாரிஸ் மாநகரில் தங்கியுள்ளார். நேற்று மாலை (07 – 06 – 2013) பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் குறுகிய கால ஏற்பாட்டில் படைப்பாளிகள் – ஊடகவியலாளர்கள் – இலக்கிய அபிமானிகள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்வு இந்திரனுடன் நடைபெற்றது. பாரிஸ் மாநகரில் ”ஸ்ராலின்கிராட் மெற்றோ” நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ”சமரா கோணர் ” உணவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டத்தின் தலைவர் வி. ரி. இளங்கோவன் – கவிஞர் தா. பாலகணேசன் – திருமதி பாலகணேசன் – கவிஞர் க. வாசுதேவன் – ”தமிழமுதம்” வானொலி இயக்குனர் எஸ். கே. ராஜன் – எஸ். குமாரதாஸ் நேசன் – இ. குலம் – மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.