இன்றையதினம் லண்டனில் வாழும் ஈழத்துத் தமிழறிஞர் திரு. கா.விசயரத்தினம் அவர்களது இரண்டு நூல்களை அறிமுகம் செய்யவிருக்கிறேன். தமிழ் இலக்கணத்தில் கிறிஸ்துவுக்கு முன் 3ம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியமும், கி.பி. 13ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலும் இன்றளவும் போற்றுதற்குரியனவாகப் பயன்பெறுகின்றன. தமிழ் மொழிக்கு இலக்கண வரம்பை வழங்கிய முதல் நூலாக தொல்காப்பியம் கருதப்படுகின்றது. அகத்திய மாமுனிவரால் ஆக்கப்பட்ட அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை அடியொற்றியே அவரது தலைமைச் சீடரான தொல்காப்பியரால் தொல்காப்பியம் என்ற நூல் எழுதப்பட்டது என்பது வரலாறு. முதலாம் தமிழ்ச்சங்கம் இருந்த பிரதேசம் கடல்கோளினால் முன்னர் அழிக்கப்பட்டபோது அகத்தியமும், அக்காலத்தைய தமிழ் நூல்களும் இல்லாது போயின என்பதும் வரலாறு. அகத்தியம் என்ற பண்டைய நூல் எம்மிடையே இல்லாத இன்றைய நிலையில் இரண்டாம் தமிழ்ச்சங்க காலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியமே இன்று கைக்கெட்டிய முதலாவது தமிழ் இலக்கண நூலாக எம்மிடையே வாழ்கின்றது.
“ஒரு நபர் தனக்காக மட்டும் பாடுபட்டால், ஒரு வேளை பிரபலமான அறிவாளியாகலாம். மாபெரும் ஞானியாகலாம், மிகச்சிறந்த கவிஞராகலாம், ஆனால் உண்மையான மனிதராக முடியாது” என தனது பள்ளிப்பருவத்திலே எழுதியவர் காரல் மார்க்ஸ். சக மனிதர்கள் குறித்தும் அம்மனிதர்களின் வாழ்வுக் குறித்தும் உயரிய நிலையில் சிந்தித்து செயலாற்றியமையே வரலாற்றினுடைய மனிதராக அவர் போற்றப்படுவதற்கான அடிப்படையாகும். மனித குல வளர்ச்சிப் போக்க்pல் அறிவு என்பது சமுதாயம் சார்ந்த விடயமாகும். எனவே அவ்வறிவு எப்போதும் விஞ்ஞானம் தழுவியதாக அமைந்திருப்பதுடன் செருக்ககோ நேர்மையீனமோ இல்லாது சமூக வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதாக அது அமைந்துக் காணப்படுகின்றது. பிரம்ஜி என்ற ஆளுமையின் பணிநலன் பாரட்டு நிகழ்வு குறித்த சிந்திக்கின்ற போது மேற்கறிக்க வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
நெல்சன் மண்டேலாவின் 95வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு தென்னாபிரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களில் இருந்தும் இன, மத, மொழி வேறுபாடின்றிக் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். யூலை மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை அவரது பிறந்த நாளாகும். தனது மண்ணின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த இவர் 1994ம் ஆண்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக இவர் 27 வருடங்கள் கடும் சிறை வாசம் செய்தார். மனிதநேயத்திற்காக உழைத்த இவர் பலராலும் போற்றப்பட்டதில் வியப்பே இல்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் ‘நலம் பெற வேண்டுகின்றோம்’ என்று ஊர் பெயர் தெரியாத பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்கள் மனம் திறந்த பிரார்த்தனையைக் கடித மூலமும், பதாதைகள் மூலமும் அவருக்குத் தெரிவித்திருந்தனர். வேறு பலர் அவரை அனுமதித்திருந்த வைத்தியசாலைக்கு முன்னால் கூட்டமாக நின்று பாடல்கள் மூலம் அவர் விரைவாக நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவர் கடும் சுகவீனம் அடைந்திருக்கிறார் என்ற செய்தி வெளியே தெரிந்ததும் உலகின் பல பாகங்களில் இருந்தும் அவருக்காகப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது எதை எடுத்துக் காட்டுகின்றது? ஒரு மனிதனின் இறுதிக் காலத்தில் இத்தகைய பிரார்த்தனைகள்தான் அவன் மனிதனாக இந்த உலகத்தில் வாழ்ந்தான் என்பதை உறுதி செய்கிறது. பணம் கொடுத்து ஒருவரைப்பற்றிப் புகழாரம் பாடவைக்கும் நிகழ்ச்சிகள் பல மலிந்து விட்ட இந்தக் காலத்தில் நெல்சன் மண்டேலா போன்ற உயர்ந்த மனிதரின் வாழ்க்கைச் சரித்திரத்தை, கோடிக்கணக்கான உள்ளங்களில் எப்படி அவரால் குடிபுக முடிந்தது என்பதை நாமும் அறிந்து கொள்ளவது மிகவும் அவசியமாகும். மக்களின் உண்மையான பிரார்த்தனை வீண்போகவில்லை. அவர் நலமடைந்து வருவதாகத் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு அவரது வாழ்க்கைச் சரித்திரம் நல்லதோர் எடுத்துக் காட்டாக அமையும்.
21 – ஞாயிறு – யூலை – 2013.
14.30 மணி தொடக்கம் 20.00 மணி வரை.
SALLE POLONCEAU ,
25, RUE POLONCEAU, 75018 PARIS.
மெற்ரோ : LA CHAPELLE
மண்டபத்திற்கு வரும் பாதை: : place de la chapelle >> rue de jessaint >> 25 RUE POLONCEAU
சமூக அக்கறைகொண்ட அனைவரையும் தோழமையோடு அழைக்கின்றோம்.
சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு – பிரான்ஸ்.
A. அசை-சமூக அசைவிற்கான எழுத்தியக்கம்- பிரான்ஸ்
06 19 45 02 76 / 06 51 26 70 75 / 06 23 60 72 65
asai.marx@gmail.com
உரையாடலுக்கான முன் அவதானிப்பு குறிப்புக்கள்.
முதல் அமர்வு: இனப்படுகொலை : ஒரு வரலாற்றுப் பார்வை -உரையும் கலந்துரையாடலும்–
வரலாற்று ரீதியில் இனப்படுகொலை எனும் கருத்தாக்கம் எவ்வாறு என்று தோன்றியது? மார்க்சியர்களும், மார்க்சியர்கள் அல்லாதவர்களும் இதனை எவ்வாறு அணுகினர்? யூதர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் பிரச்சினையை உலகம் எவ்வாறு அணுகுகிறது? இனவிடுதலை பெற்ற நாடுகள் எவை? அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்ன? இனம், தேசிய அரசு, மற்றமை குறித்த ஒரு வரலாற்று ரீதியிலான ஆய்வுரையின் பின்பான கலந்துரையாடலாக இந்நிகழ்வு இருக்கும்.
எண்பதுகளில் குறிப்பேடுகளில் என் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் கவிதைகளாக, உரைச்சித்திரங்களாக, கட்டுரைகளாக என்றெல்லாம் எழுதி வைப்பது வழக்கம். அவை ஒருவிதத்தில் உணர்வுகளின் வடிகால்களாக அன்று விளங்கின. அவ்விதம் அன்றைய காலகட்டத்தில் அறிந்தவற்றை , புரிந்தவற்றைப் பற்றிச் சிந்திப்பதை குறிப்பேடுகளில் எழுதுவதென்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல். அவ்விதம் எழுதிய குறிப்பேடுகளில் பல நாட்டுச்சூழலில் தொலைந்துவிட்டன. எஞ்சிய குறிப்பேடுகளை மீண்டும் வாசிக்கும்போது அவை அன்றைய காலகட்டச் சமூக, அரசியல் சூழல் என்மேல் ஏற்படுத்திய தாக்கங்களின் பிரதிபலிப்புகளாக விளங்கியதை அறியமுடியும். அவற்றை எந்தவித மாற்றமுமின்றிப் பதிவு செய்வது அவசியமென்று பட்டதன் விளைவாக, அக்குறிப்பேட்டுக் குறிப்புகள் சிலவற்றை பதிவுகள் இணைய இதழிலும், அண்மையில் முகநூலிலும் பதிவு செய்திருந்தேன். அவ்விதம் அண்மையில் முகநூலில் பதிவு செய்தவற்றை ஒரு பதிவுக்காக இம்முறை வாசிப்பும், யோசிப்பும் பகுதிக்காகப் பதிவிடுகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் குறிப்புகள் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில் இவை அன்றைய காலகட்டத்து என் உணர்வுகளை, சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலிப்பவை. ஒரு பதிவுக்காக இங்கே.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டுதோறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வண்ணம், தமிழியல் விருது வழங்கி வருகின்றது. இந்த வகையில், 2012 ஆம் ஆண்டுக்கான விருதுபெறுபவர்களின் பெயர் விபரங்களை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (யூலை 5 இல்) சோனி அரங்கில் ஆயனரும் சிவகாமியும் முதலாம் மகேந்திர பல்லவரும் அவர் மகன் முதலாம் நரேந்திர பல்லவரும் புலிகேசியும் நாகநந்தியும் அப்பரும் உயிரோடு எழுந்து வந்து காட்சி தந்தார்கள். அவையோர் மெய்மறந்து வைத்த கண் வாங்காமல் கடைசிவரை அவர்களைக் கண்டு களித்தார்கள். ஆறாம் ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிமாநகரைத் தலைநகராகக் கொண்டு கொடி கட்டிப் பறந்த பல்லவர்களது வரலாறு கண்முன் விரிந்தன. மாமல்லபுரம் பல்லவர்கள் சிற்பக்கலைக்கு கட்டியங்கூறி நிற்கிறது. இது 1,500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்றது. முதலாம் நரேந்திரவர்மனின் இன்னொரு பெயர் மாமல்லன். அவனால் எழுப்பப்பட்ட கலைக்கோயில் அவனது பெயரைத் தாங்கி நிற்கிறது. பெரும் பாறைகளைக் குடைந்து கற்றளி என்று அழைக்கப்படும் கோயில்களை கட்டியவர்களும் பல்லவரே. இங்குள்ள பஞ்சபாண்டவ இரதங்களை அவனுடைய மகன் முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லன் கட்டியதாகவும், வேறு பல கட்டுமானங்களை அவனுடைய பேரன் பரமேசுவரவர்மனும் அவனுடைய மகன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்னும் இராஜசிம்மனும் கட்டியதாகவும் பல அறிஞர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக கணேச இரதம், கடற்கரைக் கோயில்கள் ஆகியவை இராஜசிம்மனால் கட்டப்பட்டுள்ளதாகவே அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
பேசாமொழி 7ஆவது இதழ் – இணையத்தில் படிக்க..
படிக்க: http://pesaamoli.com அல்லது http://pesaamoli.com/index_content_7.html
நண்பர்களே மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் “பேசாமொழியின்” 7ஆவது இதழ் வெளியாகியுள்ளது. வெங்கட் சாமிநாதன், யமுனா ராஜேந்திரன், டிராட்ஸ்கி மருது, ராஜேஷ் (கருந்தேள்), எஸ். ஆனந்த் (கோணங்கள்), எம். ரிஷான் ஷெரிப், சுரேஷ் சுந்தர், தினேஷ், அருண் மோ. விஸ்வாமித்திரன் போன்றோரின் கட்டுரைகள் இந்த இதழில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராமத்து படங்களில் தென் மேற்கு பருவக் காற்று எப்படி வித்தியாசப்படுகிறது என்பதை மிக ஆழமாக வெங்கட் சாமிநாதன் விவரித்துள்ளார். பாலஸ்தீன படமான டீவைன் இன்டர்வென்சன்ஸ் படம் பற்றியும், நடிகர் & இயக்குனர் மணிவண்ணன் பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும் யமுனா ராஜேந்திரன் எழுதியுள்ளார். அனிமேசன் பற்றிய ஓவியர் மருதுவின் தொடரும், நாவலில் இருந்து உருவாக்கப்பட்ட சினிமாக்கள் தொடர்பான கோணங்கள் ஆனந்தின் கட்டுரையும், இலங்கை இயக்குனர் பிரசன்னா விதானங்கே பற்றிய விச்வாமித்ரனின் கட்டுரையும், ரிஷானின் உலகப் படக் கட்டுரையும் மிக முக்கியமாக இந்த இதழில் நீங்கள் தவறவிட கூடாத கட்டுரைகள். பேசாமொழி, இணைய இதழ். கீழ்க்கண்ட இணைய முகவரியில் நீங்கள் இந்த இதழை இலவசமாகவே படிக்கலாம்.
விட்டல் ராவின் தாய் மொழி கன்னடம் ஹோசூர் காரர். கற்றது தமிழ். வாழ்ந்த பள்ளி நாட்கள் சேலம் மாவட்டத்தில் தந்தையாரின் அலுவலக மாற்றலுக்கு ஏற்ப சேலத்தின் ஊர்கள் பலவற்றில் வாசம். கர்நாடகத்திலிருந்து அதிக தூரம் தள்ளி வந்துவிடவில்லை. தமக்கை கன்னட நாடகக் குழுக்களிலும் ஆரம்ப கால தமிழ் சினிமாக்களிலும் நடித்தவர். அதிகம் கன்னட நாடக குழுக்களில். சங்கீதமும் நாடக நடிப்பும் மிக பரிச்சயமானவை விட்டல் ராவின் சகோதரிக்கு. இதன் காரணமாகவும், விட்டல் ராவுக்கு கன்னட தமிழ் நாடகச் சூழலும் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் கிடைத்த சினிமாச் சூழலும் தந்த பரிச்சயம் அந்த ஆரம்ப பரிச்சயம், கன்னட நாடகத்தின் குப்பி வீரண்ணா காலத்திலிருந்தும், தமிழ் நாடகத்தின் சேலம் நாட்களிலிருந்தும், அதன் சினிமாவாக உருமாற்றம் பெற்று இன்று வளர்ந்துள்ளது வரை. அதுவே கன்னடம் தமிழ் ஹிந்தி, வங்காளி, மலையாளம், மற்றும் ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ரஷ்யன் என உலக மொழிகளில் வளர்ந்துள்ள சினிமா முழுதையும் தன் ரசனை வட்டத்துக்குள் கொணர்ந்துள்ளது, ஒரு தரத்த ரசனையும் ஆர்வமும் விட்டல் ராவுக்குள்ளது போன்றோருக்கே வாய்க்கும். அது மட்டுமல்ல. விட்டல் ராவின் ஆளுமையும் ரசனையும் இன்னும் பரவலாக விரிந்துள்ளது . அது போன்ற வளர்ச்சியை நான் வெகுசிலரிடமே காண முடிந்துள்ளது. .