நோர்வே: கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு!

ஓவியத்துக்கான நன்றி: http://uktamilnews.com

1983ம் ஆண்டு  இலங்கையின் சிங்கள பேரினாவாத அரசினால்  தமிழ்மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட   இனப்படுகொலையின் 30ம் ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வு தமிழ் வள ஆலோசனை மையத்தின் றொம்மன் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Continue Reading →

மிதாயா கானவியின் ”கருணை நதி” நாவல் பற்றிச் சில குறிப்புகள்!

கானவியின் ”கருணை நதி” நாவல் பற்றிச் சில குறிப்புகள்!”எனது நீண்டகால மருத்துவ பணியில் நான் பெற்ற அனுபவங்கள் பல்லாயிரம் அவற்றின் சில துளிகளின்  வெளிப்பாடாகவே இந்த கருணை நதி கருக் கொண்டது” கருணை நதி குறுநாவலின்  முகவுரையில் அதன் ஆசிரியர் மிதாயா கானவி (மிதிலா) இவ்வாறு குறிப்பிடுகின்றார். ”மனித வாழ்வின் வாழ்வியல் அனுபவங்களே இலக்கியமாகிறது” அந்த வகையில் கருணை நதி மருத்துவ  தாதியாக கடமையாற்றும் மிதாயாகானவியின் மருத்துவ துறைசார்ந்த அனுபவங்களை உணர்வூட்டும் காதல் கதையொன்றுடன் பேசுகிறது. ஈழத்தமிழ் மக்கள் நெருக்கடியானதும் துன்பகரமானதுமான பாதையை கடந்து வந்திருக்கிறார்கள் முள்ளி வாய்க்கால் பேரவலம் ஒரு இனத்தின் பேரழிவாக பதிவாகியிருக்கிறது. இந்த அனர்த்தங்களோடு இணைந்து பயணிக்கிறது  கருணை நதி இதுவே இந் நாவலை கவனத்துக்குரியதாக்குகிறது. இலங்கையில் நிகழ்ந்த போர் அவலங்கள் பல்வேறு வகையில் பதிவு செய்யப்பட்டிருக்கினறன. அந்தவகை இலக்கிய பதிவாக வெளிவந்த கருணை நதி தமிழர் துயரை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. இதைவிட போர்ச்சூழலில் நின்று மக்கள் துயர் துடைத்த மருத்ததுவ பணியாளர்களின் கருணையை மறக்க முடியாது. காதலின் ஏக்கமும்  தேடலுமே கதையின் கருவென விரிந்தாலும் மருத்துவ பணியின் மனிதநேய அணுகுமுறை கருணை நதியாக கதையெங்கும் பரவுகிறது. உண்மையை எழுதுதலே சிறந்த இலக்கியமாகிறது .இங்கும் வாழ்வின் யதார்த்தமே  நாவலின் வெற்றியை தீர்மானித்திருக்கிறது.

Continue Reading →

கலை, இலக்கிய, சமூக நேசன் புலம்பெயர்ந்த பூபதிக்கு 62 வயது

எழுத்தாளர் முருகபூபதிஅருண்.விஜயராணிஇதமான   கடற்காற்று….  ஆர்ப்பரிக்கும்   கடல்… அந்தக்காற்றை   சுவாசித்தவாறும் கடலோசையை   கேட்டவாறும்   மாலையில்   சூரிய   அஸ்த்தமனத்தின் அற்புதக்காட்சியை   ரசித்தவாறும்  தனது   தாத்தா,  பாட்டி, தாய்,  தந்தை, அக்கா, தங்கை,   தம்பிமாருடன் மனிதநேயத்துடனும்   எண்ணற்ற   கனவுகளுடனும் வாழ்ந்து வளர்ந்த   இளைஞன்,   அந்தக்கடற்கரையோர   நகரத்தில் தமிழ் சார்ந்த பல பணிகளில் ஊர்மக்களுடன்   இணைந்திருந்தான். தனது   ஆரம்பக்கல்விக்கு   துணையாக   நின்ற பாடசாலையிலும் அதற்கு வித்திட்ட வெகுஜன அமைப்பான இந்து இளைஞர் மன்றத்திலும் இயல், இசை, நாடகத்தின் வளர்ச்சிக்கு பக்கபலமாக   நின்றான்.   பாடசாலை   பழைய   மாணவர் மன்றத்தை உருவாக்குவதிலும்  அதன்   ஊடாக மாணவரிடையே   ஊக்குவிப்பு   போட்டிகளை நடத்துவதிலும் உறுப்பினர்களுடன்  இணைந்திருந்தான். இவ்வாறு   இலங்கையின்   மேற்கே   தமிழ் அலைகள் ஆர்ப்பரிக்க, அதில் தன்னாற்றலால் நீச்சலிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கது அல்ல. உள்ளார்ந்த படைப்பிலக்கவாதி எங்கிருந்தாலும் அப்படித்தானிருப்பான். அவனுக்கு   எழுத்தின்மீதும்  வாசிப்பின்  மீதும்   பற்றுதல்  அதிகம். பெற்றவர்களின் கனவு வேறுவிதமாக இருக்க அவனோ   தனது   கனவை வேறுவிதமாக வளர்த்து நனவாக்கிக்கொள்ள முயன்றான். அவனது உழைப்பு வீண்போகவில்லை. தான் நேசித்த கடல் மாந்தர்கள்   பற்றிய கதைகளையே முதலில் எழுதி முதல் தொகுப்பிற்கு   தேசிய சாகித்திய விருதையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டான்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ – லெனின் விருது 2013 பெறுபவர் – லீனா மணிமேகலை. / தமிழ் ஸ்டுடியோவின் 19வது பௌர்ணமி இரவு

லீனா மணிமேகலைஉதிரிப்பூக்கள்.நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ ஒவ்வொரு ஆண்டும் மாற்று சினிமா கலைஞர்களை கவுரவப்படுத்த வழங்கி வரும் படத்தொகுப்பாளர் லெனின் அவர்களின் பெயரிலான விருது இந்த ஆண்டு இயக்குனர் லீனா மணிமேகலைக்கு வழங்கப்படுகிறது. ஆவணப்பட / குறும்படங்களின் வாயிலாக தொடர்ந்து சமூக பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததும், தனி ஒரு படைப்பாளியாக தொடர்ந்து இந்த Main Sream கட்டமைப்பை எதிர்த்து போராடி வருவதும், தொடர்ச்சியாக தன்னுடைய இலக்கு நோக்கி பயணிப்பதும் அவருக்கு இந்த விருது வழங்க காரணமாயிருக்கிறது. லெனின் விருது 10,000 ரூபாய் ரொக்கம், கேடயம், சான்றிதழ்களை உள்ளடக்கியது. இது தவிர, லெனின் விருது பெறுபவரின் படங்களில் சில, தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படும். இந்த ஆண்டு லீனாவின் படங்கள் தமிழ்நாடு முழுவதும் திரையிடப்படவிருக்கிறது. பின்னர் சென்னையில் லீனா இயக்கிய முக்கியமான படங்கள் திரையிடப்பட்டு அதுப் பற்றிய விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் லீனாவும் பங்கேற்பார்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 24: கவிஞர் சேரனின் பன்முக இலக்கியப் பங்களிப்பு.

கவிஞர் சேரன் கவிஞர் சேரன் இன்று சர்வதேசரீதியில் நன்கறியப்பட்ட தமிழ்க் கவிஞர்களிலொருவர். வின்சர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகச் சமூகவியல், மானுடவியல் மற்றும் குற்றவியல் துறைகளை உள்ளடக்கிய பிரிவில் பணிபுரிபவர்.  இரண்டாவது சூரிய உதயம், யமன், கானல் வரி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம், எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது இறங்கும் ஆறு, உயிர் கொல்லும் வார்த்தைகள், மீண்டும் கடலுக்கு என இவரது பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ (IN A TIME OF BURNING), ‘இரண்டாவது சூரிய உதயம் ( A SECOND SUNRISE), தொகுதிகளாக வெளிவந்து வரவேற்பினைப் பெற்றுள்ளன. செல்வா கனகநாயகத்தால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சேரனின் கவிதைகள் You Cannot Turn Away என்னும் பெயரில் வெளியாகியுள்ளது. இத்தொகுதி சேரனின் நாற்பது கவிதைகளை உள்ளடக்கியுள்ளது. அத்துடன் தொகுதி தமிழ் / ஆங்கிலத்தில் இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ‘எரிந்து கொண்டிருக்கும் நேரம்’ என்னும் லக்சுமி ஹோம்ஸ்றம்ம்மின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியான சேரனின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இங்கிலாந்து பேனா அமைப்பினரின் மொழிபெயர்ப்புக்கான 2012 ஆண்டு விருதினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேற்படி தொகுப்பும் தமிழ் / ஆங்கில இருமொழித் தொகுப்பாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

சத்தான தமிழில் முக்காலும் முத்தான கவிதை பாடிய கவிஞனை தமிழ் அன்னை இழந்துவிட்டாள்

கவிஞர் வாலிகவிஞர் வாலி நிறை வாழ்க்கை வாழ்ந்து மறைந்து விட்டார்.  அகவை 81 ஆண்டுகள் வாழ்ந்த அவர் படுக்கையில் வீழ்ந்த 4 நாள்களில் இவ்வுலக வாழ்வை நீக்கி எங்கோ பறந்து விட்டார்.  தனது மரச் சுரங்கத்தில் பூட்டி வைத்திருந்த  பல்லாயிரம்  பாடல்களோடு சென்றுவிட்டார். கவிஞர் வாலி இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாம்  என்ற ஆதங்கம் ஒரு புறம் இருந்தாலும் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்ததே பெரிய சாதனை. அவரை தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கு அவரது தோற்றத்தில் முதுமை காணப்படவில்லை. அவரது நகைச் சுவைப் பேச்சில் தடுமாற்றம் இல்லை. குரல் முன்னர் போல்  கணீரென்று இருந்தது. மகாகவி பாரதி தனது 39 ஆவது அகவையில்  இயற்கை எய்தினார். இருந்தும் மிகக் குறைந்த வாழ்நாளில் பாரதி வான் புகழ் கவிதைகள் படைத்தார். அவர் பதித்த சுவடுகள் காலத்தால் அழியாதவை. புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத் தமிழ்மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கில்லையெனும் வசை அவராற் கழிந்தது என்று அவரே சொன்னார். பாரதியாரின்  பாஞ்சாலி சபதம்   தாகூரின் கீதாஞ்சலியைக் காட்டிலும் உயர்ந்தது.  தனக்குப் பின் தமிழ்க் கவிதைத் தளத்தில்  ஒரு நீண்ட பரம்பரையைத் தோற்றுவித்தவர் பாரதியார். 

Continue Reading →

தடாகம் கலை இலக்கிய வட்டம் (கவினுறு கலைகள் வளர்ப்போம் ) கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா!

சர்வதேச மட்டத்தில்மாதா மாதம் தவறாது நடத்தி வரும் போட்டி இது இம் மாதம் (ஜூலை )மாதம் நடாத்தப்படுகின்ற கவிதைப் போட்டிக்கு கவிதை ஆர்வம் உள்ளோர்களிடம் இருந்து கவிதைகளை…

Continue Reading →

பேசாமொழி 8வது இதழ்! படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

நண்பர்களே பேசாமொழி 8வது இதழ் வெளியாகியுள்ளது. பேசாமொழி முழுக்க் முழுக்க இணையத்தில் இலவசமாக படிக்க கிடைக்கிறது. தமிழில் நல்ல சினிமாவுக்கான மாத இணைய இதழ் பேசாமொழி. இந்த…

Continue Reading →

காற்றுவெளி இதழுக்கு படைப்புகளை அனுப்பி வையுங்கள்!

அன்புடையீர். வணக்கம். மாதா மாதம் மின்னிதழாக வெளிவரும் காற்றுவெளி இதழுக்கு கவிதை, சிறுகதை,கட்டுரை, விமர்சனம் போன்ற படைப்புக்களை அனுப்புங்கள். கட்டுரை இலக்கியம், ஆன்மீகம், கணினியியல், நூலக்ம் சார்ந்ததாய்…

Continue Reading →

இந்திய ஆய்வியல் துறையைக் காப்பாற்ற அணிதிரள்வோம்

வே.ம.அருச்சுணன் – மலேசியாநாட்டின் பதின்மூன்றாவது தேர்தலுக்குப் பின் இந்திய சமுதாயம் எதிர்நோக்கியப் பல்வேறு பிரச்சினைகள் பற்றி பல்வேறு கோணத்தில் ‘சுடும் உண்மைகள்’ பகுதியில் மனதைத் தைக்கும் விடயங்களை ஆதாரத்துடன்  ஆசிரியர் திரு.பி.ஆர்.இராஜன் எழுதிவருதைக் கண்டு வருந்தாத தமிழ்ப் பற்றாளர்கள் இருக்க முடியுமா? சிறிய சமூகத்திற்கு இத்தனைப் பிரச்சனைகளா? என்று வியக்காதவர்கள் யார்? காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘லாக்கா’ப்பில் இந்திய இளைஞர்களின்  தொடர் மரணங்கள் சமுதாயத்தினரிடையே அமைதியற்ற நிலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. திட்டமிட்டே,கல்விமான்களும், நீதிபதி அந்தஸ்திலுள்ளவர்களும் அரசாங்கம் தங்களுக்குச்சாதகமாக இருக்கிறது என்ற தெனாவெட்டில் பொறுப்பற்ற நிலையில் தமிழ்ப்பள்ளிகளை மூடச்சொல்வதும், தமிழ்மொழியின் அழிவிற்குப் பாதகமான கருத்துகளைக் கூறும் நிலை தொடர்வதைக் காணும் போது,இந்தியர்கள் இந்த நாட்டில் மாற்றான் தாய் பிள்ளைகளாக ஆக்கப்பட்டுவிட்டார்களோ  என்ற ஐயமும் பீதியும் எழுகின்றன.மேலும்,சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் இந்திய சமுதாயம் எக்கேடாவதுக் கெட்டுப்போகட்டும் என்று மெத்தனப் போக்கினைக்கொண்டிருக்கிறது வருத்தமளிக்கிறது.இந்திய சமுதாயம் கேட்பாரற்ற சமூதாயமாக இருக்கும் சூழல் தொடர்ந்து இருக்க வேண்டுமா? தடுமாறிக் கொண்டிருக்கும்இந்திய சமுதாயத்திற்கு அரசு கருணை காட்டக்கூடாதா? இந்திய அரசியல்வாதிகளும்,சமுதாயத்தலைவர்களும் சொந்த சகோதரர்களின்  மேம்பாட்டுக்காகத் தங்களுக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளையும் சுயநலப்போக்கையும் சற்று தள்ளி வைத்துவிட்டு  நேசக்கரம் நீட்டக் கூடாதா?

Continue Reading →